வேதாகமம் தேவனுடைய வெளிப்பாடு என்பது உண்மையா?

 

ஒரு சமயம் சில இளைஞர்களுடன் நான் வேதாகமம் தேவனுடைய வெளிப்பாடு என்பதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தேன். பெரும்பாலான இளைஞர்கள் அதை மறுத்து வாதிட்டனர். நான் அவர்களுக்கு பழைய ஏற்பாட்டில் மேசியாவைப் பற்றிய தீர்க்க தரிசனங்களையும் பின்பு அது கிறிஸ்துவில் முழுமையாக நிறைவேறியதையும் ஞாபகப்படுத்தினேன்.

 

அதில் ஒரு இளைஞர் மிக திறமையாக அவருடைய வாதத்தை எடுத்து வைத்தார். அவர் பழைய ஏற்பாடு தீர்க்கதரிசனங்கள் யேசு வருவதற்க்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே எழுதிவைக்கப் பட்டிருப்பதையும் அதை கிறிஸ்து முழுவதும் தன்னில் நிறைவேற்றினார் என்பதையும் ஒப்புக் கொண்டார்.

ஆனால் இந்த இளைஞர், யேசு கிறிஸ்து தான் ஒரு மதத்தை உருவாக்குவதற்காக தீர்க்கதரிசனங்களை படித்து அதற்கேற்ப தன் காரியங்களை செய்து தன்னில் அவற்றை நிறைவேறச் செய்தார் என்று ஒரு வாதத்தை கொண்டு வந்தார். எனவே இவ்வாறு அவர் தானே திட்டமிட்டு செயல்பட்டிருந்தால் தீர்க்கதரிசனங்கள் அப்படி நிறைவேறியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லையே என வாதிட்டார்.

இது புத்திசாலித்தனமான திறமையான வாதமாக தோன்றினாலும் நான் அந்த இளைஞரிடன் சில கேள்விகள் கேட்டேன். இளைஞரே உங்கள் வாதப்படியே யேசு தீர்க்கதரிசனங்களுக்கேற்ப காரியங்களை செயல்படுத்தினார் என்று வைத்துக் கொண்டாலும் , சில காரியங்களை நீங்கள் விளக்கவேண்டியதிருக்கிறது.

யேசு நம்மைப் போன்ற ஒரு மனிதராயிருந்தால் எப்படி தீர்க்கதரிசனங்களில் சொல்லியபடி சரியான சந்ததியில் , அந்த குடும்பத்தில் பெத்லேகேம் ஊரில் பிறக்கும் படி ஏற்பாடு செய்யமுடியும்? அதுவும் சரியான காலகட்டத்தில் இது எப்படி சாத்தியம்.

 

ஆயினும் நண்பர் தனது வாதத்தை கைவிடுவதாயில்லை. தனது பதிலாக தொடர்ந்து அவர் மேற்கொண்ட வாதமானது, யேசு தற்செயலாக  தீர்க்கதரிசனங்களில் சொல்லப்பட்ட அதே ஊரில் அதே தாவீதின் குடும்பத்தில் குறிப்பிட்ட காலத்திலும் பிறந்திருக்கலாம். பின்பு அதை அறிந்து கொண்டதும் அந்த வாய்ப்பை பயன்படுத்தி தீர்க்கதரிசனங்களில் சொல்லப்பட்ட படியே காரியங்களை செய்து அதற்கேற்ப நடந்து கொண்டும் தானே வரவேண்டிய மேசியா என நம்பவைத்திருக்கலாம் என்பதே.

இந்த கருத்திற்கு என்னுடைய பதில், அப்படியானால் இந்த உங்களது வாதத்தின்படி நீங்கள் இன்னும் சில காரியங்களை விளக்க வேண்டியதிருக்கிறது.

எப்படி யேசு தான் சிலுவையில் அறையப்படும் போது தன்னுடன் இரண்டு திருடர்களும் சிலுவையில் அறையப்படும்படி செய்தார் என சொல்லமுடியுமா? எசாயா தீர்க்கதரிசி உரைத்தது படி நிறைவேறியதே, ஏசாயா 53:12

 

மேலும் தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றும்படி, எப்படி யூதாஸ் முப்பது வெள்ளிக்காசுக்காக பிரதான ஆசாரியர் மற்றும் மூப்பரிகளிடம் யேசுவை காட்டிக் கொடுக்கும் படி செய்யமுடியும்? மேலும் யூதாஸ் தீர்க்கதரிசனங்களில் சொல்லியபடியே அந்த முப்பது வெள்ளிக்காசுகாளால் குயவனின் நிலத்தை வாங்கும்படி தேவாலயத்தில் வீசியெறிந்து விட்டு தற்கொலை செய்துகொள்ளும்படி எப்படி ஏற்பாடு செய்ய முடியும்? கிபி 500 ல் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம் அப்படியே நிறைவேறியதே! சகரியா 11:12, 13

இது எப்படி நடந்தது என்று விளக்கமுடியுமா?

 

மேலும் யேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும் போது நான்கு ரோம படை வீரர்கள் அவரது மேல் வஸ்த்திரத்தை நான்கு பங்காக பங்கிட்டும் அவரது அங்கியை சீட்டுப் போட்டும் எடுத்த்துக் கொண்டது தீர்க்கதரிசனமாக சங்கீதம் 22:18 ல் சொல்லியபடியே நிறைவேறியதே. மேலும் சங்கீதம் 69:21ல் சொல்லியிருக்கிறபடி சிலுவையில் அவர் தாகத்திற்காக அவரது எதிரிகள் கசப்பு கலந்த காடியை குடிக்க கொடுத்தார்களே அதை விளக்க முடியுமா?

அதுமட்டுமில்லாமல் உங்கள் வாதம் உண்மையாயிருந்தால் யேசு சிலுவையில் இறந்த பின் இரண்டு கள்ளர்களின் கால் எலும்புகளை முறித்த பின் யேசுவின் கால் எலும்புகளை முறிக்காமல் விட்டது ஏப்படிகிபி 1500 ல்  யாத்திராகமம் 12:46ல் சொல்லப்பட்ட அடையாளமான பஸ்கா ஆடு யேசுவில் நிறைவேற வேண்டுமென்று விரும்பினார்களோ? அல்லது சங்கீதம் 34:20 சொல்வது நிறைவேற செய்தார்களா?

யேசுவை ஈட்டியால் போர்வீரர்கள் குத்தியதும் கிபி 500 ல் சகரியா தீர்க்கதரிசி " தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து ..." என்று சொன்னதை நிறைவேற்றும் படியா ஏற்பாடு செய்யப்பட்ட்டதோ? இந்த தீர்க்கதரிசனங்கள் எல்லாம் சரியாக நிறைவேறும் படி ஒருமனிதனாக யேசு செய்யமுடியுமோ?

என்னுடைய நண்பர் சொல்வதற்கு அதற்கு மேல் ஒன்றுமில்லை.

 

கிறிஸ்து யெஷுவா (Jesus)வை பற்றிய தீர்க்க தரிசனங்களும் அவற்றின் நிறைவேறுதலும் இங்கு முழுவதுமாக கொடுக்கப்பட்டுள்ளது.

 

 

சமீபகாலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சவக்கடல் எழுத்துச் சுருள்கள் குறைந்த பட்சம் கிறிஸ்துவுக்கு 100 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டவை.

 

 

YYY