கடவுள் ஏன் தீமையை அனுமதிக்கிறார்

 

மனிதனுக்கான கடவுளின் வெளிப்பாடு

 

ஒரே பைபிள், ஏன் மார்க்க பேதங்கள்?

 

கிறிஸ்தவர்களுக்கு ஒரு எச்சரிக்கை

 

நரகம் என்றால் என்ன?

 

யார் கடவுள்? யார் நமது இரட்சகர்?

 

அத்திமரம்

 

DNA MENTIONED IN THE BIBLE 

 

 

Home

 

இஸ்ரயேல் தேசம் - ஒரு அற்புதம்

பகுதி -1

 

இஸ்ரேலியர்கள் தேசமே இன்று ஒரு அற்புதமாக நம் கண் முன் நிற்கிறது. பழைய ஏற்பாடு காலங்களில் பல அற்புதங்கள் நடந்தது போல இன்றைய காலங்களில் நடப்பது இல்லை என பலர் நினைக்கலாம். ஆனால் உண்மை என்னவென்றால் இன்றும் நம் கண்முன்னால் நடந்து கொண்டிருக்கிறது, அதை பார்ப்பதற்கு கண்களும் அறிவும் வேண்டும். அவர்களது வரலாற்றையும் இன்று நடப்பவைகளையும் நன்கு புரிந்து கொண்டால்தான் இவைகளை நாம் உணர முடியும்.

 

பண்டைய தேசம்:

 

இஸ்ரயேலர்களின் தேசம் சுமார் 3500 வருடங்களுக்கு முன்பிருந்து கிமு 606 வரை ஒரு தேசமாக ஆண்டு கொண்டு வந்தது. பேரரசர் சாலமன் காலத்தில் இந்தியா ஆப்ரிக்கா போன்ற நாடுகளுடன் வர்த்தக தொடர்புகள் இருந்தது. அந்த தொடர்பினாலே பிற்காலத்தில் சில இஸ்ரயேலர்கள் இந்தியாவுக்கு குடி  வந்தனர். கிமு 606ல் பாபிலோனிய பேரரசால் இஸ்ரயேல் தேசம் அழிக்கப்பட்டு இஸ்ரயேலர்கள் பாபிலோனுக்கு அடிமைகளாக கொண்டு போகப்பட்டனர்.

 

 

பின்பு வந்த மேதியா பெர்சியாவின் பேரரசர் சைரஸ் பாபிலோனிலிருந்த யூதர்களை நாடு திரும்ப அனுமதி அளித்தார். அதற்கு பிறகு யூதர்களை கிரேக்கர்களும் பின்பு ரோமர்களும் ஆண்டு வந்தனர். ஆனால் யூதர்கள் ரோமர்களிடம் இருந்து விடுதலை பெற்று மீண்டும் தாங்களே தங்கள் நாட்டை ஆண்டு கொள்ள போராடினர். தொடர்ந்த இந்த கிளர்ச்சிகளை ஒடுக்க  ரோமர்கள் யூதர்கள் தேசத்தை முழுவதும் அழித்தனர். அவர்கள் தலைநகர் எருசலேமையும் அவர்கள் புனித ஸ்தலமான யெருசலேம் கோவிலையும் தரைமட்டமாக்கி யூதர்களை உலகம் முழுவதும் சிதறடித்தனர்.

 

இது வேதாகமத்தில் முன்னரே சொல்லப்பட்டிருக்கிறது. யூதர்கள் கடவுளின் கட்டளைக்கு கீழ்ப்படியாது பாவங்களை செய்து கொண்டிருந்தால் கடைசியாக அவர்களுக்கு ஏழு கால தண்டனை கொடுக்கப்படும் என்றும் அவர்கள் உலகம் முழுவதும் சிதறடிக்கப் படுவார்கள் என்றும் கொடுக்கப்பட்டுள்ளது.

 

இவ்விதமாய் நான் உங்களுக்குச் செய்தும், இன்னும் நீங்கள் எனக்குச் செவிகொடாதிருந்தால், உங்கள் பாவங்களினிமித்தம் பின்னும் ஏழத்தனையாக உங்களைத் தண்டித்து, ... - Lev 26:18 

 

ஜாதிகளுக்குள்ளே உங்களைச் சிதற அடித்து, உங்கள் பின்னாகப் பட்டயத்தை உருவுவேன்; உங்கள் தேசம் பாழும், உங்கள் பட்டணங்கள் வனாந்தரமுமாகும். - Lev 26:33 

 

 

ரோமர்கள் யூதர்களை தேசத்தை அழித்து அவர்களை சிதறடித்த பின் வேறு தேசத்து மக்களை அங்கு குடியேற்றினர். பொதுவாக இவ்வாறு மக்களை வேறு இடங்களில் குடியேற்றுவதன் மூலம் மக்களின் தேச, இன பற்றை மழுங்கடிப்பதால் தங்கள் அரசை எதிர்த்து கலகம் செய்ய மாட்டார்கள் என்பதால் அரசர்கள் இப்படி செய்வதுண்டு.

 

யூதர்களை அங்கிருந்து விரட்டியது மட்டுமின்றி இஸ்ரயேல் நாடு என்ற பெயரே இருக்கக் கூடாது என்று ரோம மன்னன் “ஹாட்ரியன்” முயற்சித்தான். அங்கு காசா பகுதியில் முற்காலத்தில் வாழ்ந்த பெலிஸ்தியர்கள் என்ற இன மக்களின் பெயரில் “பெலிஸ்தியா” என்று அழைக்க ஆரம்பித்தனர். யெருசலேம் நகரை "Colonia Aelia Capitolina" என்றும் மாற்றினர்.

 

லேவியராகம் 26ல் சொல்லப்பட்டபடியே யூதர்கள் உலகம் முழுவதும் பல நாடுகளுக்குள் சிதறடிக்கப்பட்டார்கள். பல நாடுகளில் போய் வாழ்ந்தாலும் அங்கு அவர்கள் நிம்மதியாக இருக்க முடியவில்லை, அவர்கள் அங்கு வெறுக்கப்பட்டு ஒடுக்கப் பட்டார்கள். ரஷ்யா , யூரோப் மற்றும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் அவர்கள் இன வெறியால் துன்புறுத்தப்பட்டார்கள். கொல்லப்பட்டார்கள். சரித்திரம் முழுவதும் யூதர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு துரத்தப் படுவதும் கொல்லப்படுவதும் தொடர்ந்தது.

.  

கர்த்தர் உன்னைப் பூமியின் ஒரு முனை துவக்கி பூமியின் மறுமுனைமட்டும் இருக்கிற எல்லா ஜனங்களுக்குள்ளும் சிதற அடிப்பார்;

அந்த ஜாதிகளுக்குள்ளே உனக்கு இளைப்பாறுதல் இராது, உன் உள்ளங்கால்கள் தங்கித் தரிக்க இடமும் இராது; - உபாகமம் 28:64

உங்கள் சத்துருக்களின் தேசம் உங்களைப் பட்சிக்கும்.

உங்களில் தப்பினவர்கள் தங்கள் அக்கிரமங்களினிமித்தமும், தங்கள் பிதாக்களின் அக்கிரமங்களினிமித்தமும், உங்கள் சத்துருக்களின் தேசங்களில் வாடிப்போவார்கள். - Lev 26:39

 

 

பொதுவாக யூதர்களுக்கு தங்களைப் பற்றிய ஒரு பெருமையான எண்ணம் இருக்கும். தாங்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்ற பெருமிதம்.

 

யூதர்கள் மீதான அடக்குமுறைகள் அரேபியாவில் முகமது காலத்தில் இருந்து ஆரம்பித்துவிட்டது. யூதர்களை வெளியேற்றப்பட்டனர் அல்லது ஜிசியா என்ற வரி செலுத்த வேண்டும். அவர்களை திம்மிஸ் என்ற கீழான குடிமக்களாக நடத்தப்பட்டனர்.

 

உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் 1066ல் ஸ்பெயினில் கிராண்டா என்ற பகுதியில் இஸ்லாமியர்களால் ஒரே இரவில் 1500 குடும்பங்கள் படுகொலை செய்யப்பட்டது. 1033ல் 6000 யூதர்கள் கொல்லப்பட்டனர்.

சில தேசங்களில் யூதர்கள் நிலம் வாங்க முடியாது , நீதிமன்றத்தில் சாட்சியாக சொல்ல அனுமதி இல்லை, சில இடங்களில் அரசு பதவிகளில் இருக்க அனுமதி இல்லை, மேலும் அரேபியாவிலும் நாசி ஐரோப்பாவிலும் யூதர்கள் வெளியே செல்லும் போது தங்களை காட்டிக் கொள்ள தனி அடையாளம் அணிய வேண்டும்.

 

பட்டயக்கருக்கினாலே விழுவார்கள், சகல புறஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டுப்போவார்கள்; புறஜாதியாரின் காலம் நிறைவேறும்வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும். –லூக்கா 21:24

 

 

ஆச்சரியப்பட வேண்டிய விஷயம்:

இவ்வளவு கொடுமைகள் யூதர்களுக்கு உலகத்தில் எல்லா பகுதிகளிலும் நடந்தது. கொல்லப்பட்டார்கள், அவர்கள் சொத்துக்கள் பறிக்கப்பட்டன, வியாபாரம் செய்வதற்கு இடையுறு, கொள்ளையடிக்கப்பட்டார்கள்; இருந்தாலும் அவர்கள் அழிந்து போகவில்லை! யூதர்கள் என்ற அடையாளத்தை ஒளித்து கொள்ளவில்லை!, தங்கள் கலாச்சாரத்தை விட்டுவிடவில்லை!. அவர்கள் தப்பிப் பிழைத்தது மட்டும் ஆச்சரியமல்ல , அதைவிட ஆச்சரியம் அவர்கள் வியாபாரம், கலை, அறிவியல், பொருளாதாரம், அரசியல் என எல்லா தளங்களிலும் சிறந்து விளங்கினர். உலகுக்கு மிகப் பெரிய சாதனைகளை, படைப்புகளை கொடுத்தனர்.

 

Isaiah 43:10–12

10  “You are My witnesses,” declares the Lord

“And My servant whom I have chosen,

 

யூதர்களின் ஒடுக்கப்படுதல் பற்றி யூதர்களின் முழு சரித்திரத்தை படிக்கும் போது விரிவாக பார்க்கலாம். ஆனால் இந்தக் கட்டுரை இஸ்ரயேலர்களிடையே நிகழும் தீர்க்க தரிசனமாக சொல்லப்பட்ட அற்புதங்களைப் பற்றி, எனவே அதை மட்டும் பார்க்கலாம்.

 

நீ எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோலவே உன்னை அதிசயங்களைக்      காணப்பண்ணுவேன். – மீகா 7:15 

 

யூதர்கள் உலகம் முழுவதும் ஒடுக்கப்பட்டாலும் முழுவதும் அழிந்து போகாததற்கு காரணம் வேதாகமம் அவர்கள் நிரந்தரமாக புறக்கணிக்கப்படுவார்கள் என்று சொல்லவில்லை.

 

அவர்கள் தங்கள் சத்துருக்களின் தேசத்திலிருந்தாலும், நான் அவர்களை நிர்மூலமாக்கத்தக்கதாகவும், நான் அவர்களோடே பண்ணின என் உடன்படிக்கையை அபத்தமாக்கத்தக்கதாகவும், நான் அவர்களைக் கைவிடவும் வெறுக்கவும் மாட்டேன். - லேவி 26:44

 

அவர்கள் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்த அவர்களுடைய எல்லா அக்கிரமங்களுக்கும் அவர்களை நீங்கலாக்கிச் சுத்திகரித்து, அவர்கள் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணின அவர்களுடைய எல்லா அக்கிரமங்களையும் மன்னிப்பேன். எரேமியா 33:8

 

கடவுள் அவர்களுக்கு கொடுத்த ஆசீர்வாதங்கள் அவர்களுக்கு உண்டு என்றும் அவர்கள் தண்டனைக்காலத்துக்கு பிறகு மீண்டும் ஏற்றுக் கொள்ளப்படுவார்கள் என்றும் சொல்கிறது. யேசு கிறிஸ்து இதை தெளிவாக சொல்கிறார்.

 

பட்டயக்கருக்கினாலே விழுவார்கள், சகல புறஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டுப்போவார்கள்; புறஜாதியாரின் காலம் நிறைவேறும்வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும்.” லூக்கா 21:24

 

ஆக புறஜாதிகள் காலம் என்பதின் முடிவில் அவர்களுக்கு தேவ தயவு திரும்பும் என்றும் எருசலேம் அவர்களுக்கு கிடைக்கும் என்றும் தெளிவாக சொல்கிறார்.

மேலும் பல வேதாகம தீர்க்கதரிசனங்கள் உலக தேசங்கள் எல்லாம் சிதறிய யூதர்கள் கூட்டிச் சேர்க்கப்பட்டு மீண்டும் ஒரு தேசமாக இஸ்ரேலில் இருப்பார்கள் என்று கூறுகிறது.

 

ஆதலால் நான் உங்களை ஜனங்களிடத்திலிருந்து சேர்த்து, நீங்கள் சிதறடிக்கப்பட்ட தேசங்களிலிருந்து உங்களைக் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்தை உங்களுக்குக் கொடுப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்லு. – எசேக்கியேல் 11:17

 

உலக தேசங்கள் எல்லாவற்றிலும் சிதறிப்போன யூதர்கள் இன்னும் அழியாமல், அவர்கள் செய்யும் தொழில்கள், காரியங்கள் எல்லாவற்றிலும் வெற்றியடைவதும், வல்லவர்களாக வளர்வதும் இதற்காகத்தான். ஆம் அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மீண்டும் சுயதேசம் திரும்புவார்கள் என்று உறுதியளிக்கப் பட்டிருகிறார்கள். உலகம் முழுவதும் வாழும் யூதர்கள் அந்த நம்பிக்கையோடேதான் தொடர்ந்து எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு இருந்தார்கள்.

 

இதோ, என் சினத்திலும், என் கோபத்திலும், என் மகா உக்கிரத்திலும், நான் அவர்களைத் துரத்தின எல்லாத் தேசங்களிலுமிருந்து அவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களை இந்த ஸ்தலத்துக்குத் திரும்பிவரவும் இதிலே சுகமாய்த் தங்கியிருக்கவும் பண்ணுவேன். – எரேமியா 32:37

 

உலக தேசங்களில் யூதர்கள் வெறுக்கப்பட்டு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது இஸ்ரயேல் தேசம் மீண்டும் வருவது சத்தியமா? இஸ்ரயேல் பிரதேசம் வலிமை வாய்ந்த ஒட்டோமான் பேரரசின் கீழ் இருந்தது. யூதர்கள் அங்கு நிலம் வாங்கவோ குடியேறவோ அனுமதி இல்லை. அப்படியிருக்கும் போது இஸ்ரயேல் தேசத்திற்கு சாத்தியமே இல்லையே?

 

யாக்கோபின் ஜனங்களே, உங்களெல்லாரையும் நான் நிச்சயமாய்க் கூட்டுவேன், இஸ்ரவேலில் மீதியானவர்களை நிச்சயமாய்ச் சேர்ப்பேன்; மீகா 2:12

இஸ்ரவேல் புத்திரரை வடதேசத்திலும், தாம் அவர்களைத் துரத்திவிட்ட எல்லா தேசங்களிலுமிருந்து வரப்பண்ணின கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சத்தியம்பண்ணுவார்கள்; நான் அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த அவர்களுடைய தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.  – எரேமியா 16:15

 

 

 

"A land without a people for a people without a land"

 

எந்த ஒரு தேசமும் அழிக்கப் பட்டு உலகம் முழுவதும் அதன் மக்கள் சிதறடிக்கப்பட்டபின் 2000 வருடங்கள் கழித்து மீண்டும் வந்ததாக சரித்திரம் இல்லை. உலகில் அப்படி ஒரு தேசம் அப்படி ஒரு மக்கள் என்றால் இஸ்ரயேல் மக்களே.

அதனால் யூதர்களை (“A Nation without a Land“) “இருப்பதற்கு நிலமே இல்லாமல்  ஒரு தேசம் “ என்று சொல்வார்கள். இவர்கள் உலகம் முழுவது பல பகுதிகளில் சிதறி பல நாட்டு மொழிகளையும் பேசிக்கொண்டு இருந்தாலும் எல்லா இடத்திலும் யூதர்களாகவே இருந்தார்கள். பழைய ஏற்பாட்டை எபிரேய மொழியில் தொடர்ந்து படிஎடுத்து காத்து வந்தார்கள்.

 

திரும்பவும் என்றைக்காவது சீயோனுக்கு (இஸ்ரயேல் தேசத்துக்கு) திரும்பிப் போவோம் என்ற நம்பிக்கை விட்டுப் போகாமல் இருந்தனர். பலர் இஸ்ரயேல் தேசத்துக்கு போக முயற்சித்த போது இஸ்லாமிய ராஜ்ஜியங்கள் கட்டுப்பாட்டில் அந்த பகுதி இருந்ததால் யூதர்கள் அங்கு குடியேறவோ நிலம் வாங்கவோ அனுமதிக்கப்படவில்லை.

உலகில் தொடர்ந்து யூதர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டு வருவதால் இதை நிறுத்தவும், யூதர்கள் சுதந்திரமாக தங்கள் நம்பிக்கையின்படி வாழவும் அவர்களுக்கென்று ஒரு இடம் வேண்டும் என்ற எண்ணத்தில் சீயோநிசம் இயக்கம் ஏற்படுத்தப்பட்டது. 1880 களில் இந்த இயக்கத்தில் தியோடர் ஹெர்சல் பங்கு முக்கியமானது.

 

இதே காலகட்டத்தில் சார்லஸ் ரசல் என்ற போதகர் வேதாகம காலக் கணக்குகள் அடிப்படையில் இஸ்ரயேல் தேசத்திற்கான தண்டனைக் காலம் 1914ம் ஆண்டுடன் முடிகிறது, ஆகவே இஸ்ரயேல் தேசத்திற்கான தயவு காலம் மீண்டும் ஆரம்பிக்கிறது. ஆகவே இஸ்ரயேல் தேசம் திரும்பவும் யூதர்களுக்கு கிடைக்கும் என்று தீர்க்க தரிசனங்களின் ஆதாரத்துடன் யூதர்களுக்கு எடுத்து கூறி வந்தார்.

 

1891 ம் வருடத்திலேயே இதைப் பற்றி அவர் தனது “Thy Kingdom Come” என்ற புத்தகத்தில் கூறிவிட்டார். அப்புத்தகத்தில் “Restoration of Israel” என்ற அத்தியாயத்தில் இஸ்ரயேல் மக்கள் கூட்டிச் சேர்க்கப் பட்டு இஸ்ரயேல் தேசம் உருவாகும் என்பதையும் பாலஸ்தீனா பகுதியில் எப்படி சீதோஷ்ண நிலை மாறி வருகிறது என்றும், யூதர்கள் சுய தேசத்துக்கு திரும்ப தேவையான காரியங்கள் நடந்து வருவதைப் பற்றியும் விரிவாக எழுதியிருந்தார்.

 

ஓட்டோமான் பேரரசு அந்தப் பகுதியில் இருக்கும் போது அங்கு இவர்கள் குடியேறுவதே முடியாது அப்படியிருக்க இஸ்ரயேல் தேசம் திரும்ப வருவதா? என்று யூதர்கள் பலர் இதை நம்பவில்லை.

 

ஆனால் 1870 கள் உலக சரித்திரத்தில் மிக முக்கியமான காலகட்டம். நம்ப முடியாத பல காரியங்கள் நடந்தன. பல புதிய கண்டுபிடிப்புகள் நடந்தன. உலக சமுதாய முன்னேற்றம் இயக்கமற்ற நிலையிலிருந்து (Static Society) இயக்க நிலைக்கு (Dynamic Socity) மாறியது.

 

 

 

1874ல் “பெஞ்சமின் டிஸ்ரேலி” என்ற ஒரு யூதர் இங்கிலாந்து பிரதமராக வந்தார். 1800களின் பிற்பகுதியில் ஓட்டோமான் பேரரசு பலவீனப் பட்டு இருந்தது. ரஷ்யாவின் படையெடுப்புக்கு பின் 1878ல் ஓட்டோமான் பேரரசு யுரோப்பிய நாடுகள் கூடிய பெர்லின் காங்கிரஸில் பங்கேற்றது. இதில் யூதர்கள் இஸ்ரேலில் குடியேற இருந்த கட்டுப்பாட்டை தளர்த்த ஒப்புக் கொண்டது.

 

100 வருடங்களுக்கு முன்பு 1914ல் ஆரம்பித்த உலக யுத்தத்தின் முதல் பகுதி கிறிஸ்தவ தேசங்களுக்கு மிகப் பெரிய அழிவும் இஸ்ரயேல் தேசம் உருவாக சாதகமாகவும் முடிந்தது. 1917ல் யெருசலேம் ஒரு துப்பாக்கி குண்டு கூட வெடிக்காமல் இங்கிலாந்து படைகள் வசம் வந்தது. முழு இஸ்ரயேல் பகுதியும் துருகியர்களிடமிருந்து மீட்கப்பட்டதும் உலகயுத்தம் முடிவுக்கு வந்தது.

இப்பொழுது இஸ்ரயேல் தேசம் சிரியா அரேபியா பகுதிகள் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் தேசங்களின் கட்டுப்பாட்டில் வந்தது. இஸ்ரயேல் தேசம் யூதர்கள் குடியேற தயாராயிற்று. உலகம் எங்கும் பல நாடுகளில்

இருந்து யூதர்கள் இஸ்ரயேலுக்கு குடிவரத்துவங்கினர்.

 

 

 

இதே நேரம் ஐரோப்பா முழுவதும் யூதர்களுக்கு எதிரான இன வெறுப்பு மிக அதிகமாக கொழுந்து விட்டெரிந்தது. யூதர்கள் வேட்டையாடப்பட்டார்கள். சியோனிச இயக்கத்தினர் யூத மக்களை இஸ்ரயேலுக்கு வரத் தூண்டினர்.

- எரேமியா 16:16 

 

2000 வருடங்களுக்கு முன் வேதாகமத்தில் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனத்தின்படி உலகமெங்கும் 2000 வருடங்களுக்கு முன் சிதறிப் போன யூதர்கள் கூட்டிச் சேர்க்கப்பட்டு இஸ்ரயேல் தேசத்துக்கு கொண்டுவரப்பட்டார்கள்.

“ஆதலால் நான் உங்களை ஜனங்களிடத்திலிருந்து சேர்த்து, நீங்கள் சிதறடிக்கப்பட்ட தேசங்களிலிருந்து உங்களைக் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்தை உங்களுக்குக் கொடுப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்லு.” -எசேக்கியேல் 11:17 

 

வடக்கே ரஷ்யாவில் யூத இன அழிப்பு மிக அதிகமாக இருந்ததால் ரஷ்யாவிலிருந்தும் மிக அதிக மக்கள் கடவுள் அவர்களுக்குக் கொடுத்த தேசத்துக்கு வந்தார்கள்.

 

இஸ்ரவேல் புத்திரரை வடதேசத்திலும், தாம் அவர்களைத் துரத்திவிட்ட எல்லா தேசங்களிலுமிருந்து வரப்பண்ணின கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சத்தியம்பண்ணுவார்கள்; நான் அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த அவர்களுடைய தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். “ - எரேமியா 15:16

 

 

“ இந்த பிரதேசம் எந்த அளவு பாழாய்க்கிடக்கிறது என்பதை நீங்கள் கற்பனை செய்ய முடியாது. அப்படி இந்த பகுதி உயிரோட்டம் இல்லாமல் வறண்ட பாலைவனப்பகுதியாக கிடக்கிறது. நான் இங்கு வாழ நிச்சயமாய் விரும்ப மாட்டேன்.”

புனித நிலம் என்று அழைக்கப்படும் பாலஸ்தீனா பகுதியைப் பற்றி இப்படித்தான் மார்க் டிவைன் சொன்னார். (1867 ல்)

 

 

யெருசலேம் பகுதியில் மட்டுமே மக்கள் வாழும் இடமாக இருந்தது அங்கு சுமார் 1 லட்சம் பேர் வசித்தனர். அதில் யூதர்கள் மூன்றில் ஒரு பங்கு. 1859 ல் பிரிட்டனின் கணக்கெடுப்பு படி எருசலேமில் முஸ்லீம்கள் எண்ணிக்கை வெறும் 25% தான். மொத்த மக்கள் தோகை மூன்று லட்சம். யெருசலேம் தவிர மற்ற பகுதிகள் மக்கள் இல்லாத பாலைவனமாக இருந்தது.

 

இப்படி பாழாய்க் கிடந்ததால்தான் இந்த வறண்ட நிலப்பகுதிகளை அங்கிருந்த சில அரபு செல்வந்தர்கள் இஸ்ரேலியர்களுக்கு விற்றனர். இவர்கள் எகிப்தில் வசித்து வந்தனர். மக்கள் வாழ வழியில்லாத வறண்ட நிலத்தை வாங்கும் ஏமாளிகள் என்று நினைத்து யூதர்களிடம் பெரும்பகுதி நிலங்களை விற்றனர்.

 

யூதர்களுக்கோ உலகில் எங்கும் பாதுகாப்பாக வாழ முடியவில்லை. எனவே அவர்களுக்கு தங்களுக்கென ஒரு நாடு வேண்டும் அதுவும் தங்களது தாய் நாடே திரும்ப குடியேற்றப்பட வேண்டும் என்பது விருப்பம். ஆகவே பாலைவனமாய் இருந்தாலும் அந்த நிலங்களை வாங்க நில வங்கியை ஏற்படுத்தினர். உலகமெங்கிலும் இருந்து யூதர்களிடம் பணம் திரட்டி பாலஸ்தீனம் என்றழைக்கப்பட்ட இஸ்ரயேல் தேசப் பகுதிகளை வாங்க ஆரம்பித்தனர்.

 

இது BC 600ல் எரேமியா தீர்க்கதரிசி மூலம் முன் கூறப்பட்டிருக்கிறது.

 

“ மனுஷனும் மிருகமுமில்லாதபடிக்குப் பாழாய்ப்போயிற்று என்றும், கல்தேயரின் கையிலே ஒப்புக்கொடுக்கப்பட்டுப்போயிற்று என்றும், நீங்கள் சொல்லுகிற இந்த தேசத்திலே நிலங்கள் கொள்ளப்படும்.

 

பென்யமீன் தேசத்திலும், எருசலேமின் சுற்றுப்புறங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், மலைக்காடான பட்டணங்களிலும், பள்ளத்தாக்கான பட்டணங்களிலும், தென்திசைப் பட்டணங்களிலும், நிலங்கள் விலைக்கிரயமாகக் கொள்ளப்படுகிற பத்திரங்களில் கையெழுத்துப் போடுகிறதும் முத்திரையிடுகிறதும் அதற்குச் சாட்சி வைக்கிறதும் உண்டாயிருக்கும்;” - எரேமியா 32: 43, 44

 

இஸ்ரயேல் மக்கள் வறண்ட மக்கள் இல்லாத பகுதிகளில் புதிய குடியேற்றங்களை ஏற்படுத்தினார்கள். முந்திய கால இஸ்ரயேல் நகரங்கள் இருந்த இடங்களில் அதே பெயரில் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன.

 

“ நான் உங்கள்மேல் இஸ்ரவேல் வம்சமாகிய மனுஷர் யாவரையும் வர்த்திக்கப்பண்ணுவேன்; பட்டணங்கள் குடியேற்றப்படும், அவாந்தரமான ஸ்தலங்கள் கட்டப்படும்.

 

உங்கள்மேல் மனுஷரையும் மிருகஜீவன்களையும் பெருகிப் பலுகும்படி வர்த்திக்கப்பண்ணுவேன்; பூர்வநாட்களில் நீங்கள் இருந்த நிலைமையில் நான் உங்களை ஸ்தாபித்து, உங்கள் முந்தின சீரைப்பார்க்கிலும் உங்களுக்கு நற்சீர் உண்டாகச்செய்வேன்;” எசேக்கியேல் 36:10, 11

... !!! ...

 

 

இஸ்ரேலர்கள் குடியேற ஆரம்பித்த கால கட்டத்தில் ஆச்சரியப்படும்படி அங்கு மாற்றம் நிகழ்ந்தது.

 

3000 வருடங்களுக்கு முன்பு இஸ்ரயேல் தேசம் மிக செழிப்பாக இருந்தது. அங்கு இரண்டு பருவகாலங்களில் அளவுக்கதிகமாக மழை பொழியும். இவற்றை முன்மாரி , பின்மாரி என்று இரண்டு மழைக் காலங்களாக குறிப்பிடுகிறார்கள். ஆனால் பல நூற்றாண்டுகளாக முன் மாரி மழை மிக மிக குறைந்து விட்டது. பின்மாரி மழையும் பனியும் முற்றிலுமாக இல்லை. ஆகவே பல நூற்றாண்டுகளாக வறண்ட மக்கள் வாழ முடியாத பாலை நிலமாக இருண்டது இந்தப் பிரதேசம்.

 

ஆனால் 1878லிருந்து பின்மாரி மழை திரும்பவும் நன்கு பெய்ய ஆரம்பித்திருக்கிறது.

சீயோன் குமாரரே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; அவர் தக்கபடி உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து, உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் ஏற்கனவே வருஷிக்கப்பண்ணுவார்.

களங்கள் தானியத்தினால் நிரம்பும்; ஆலைகளில் திராட்சரசமும் எண்ணெயும் வழிந்தோடும். - யோவேல் 2:23,24

 

இஸ்ரவேல் மக்கள் உலகம் முழுவதும் இஸ்ரேலில் நடக்கும் மாற்றங்களை நிகழ்வுகளை கவனித்து தங்களுக்கான அழைப்பாக இதைக்கொண்டு உலகின் நான்கு மூலைகளிலும் இருந்து வந்து சேரத் தொடங்கினார்கள்.

 

இஸ்ரேலின் முதல் பிரதமர் “டேவிட் பென்குரியன்”  வேதாகமத்தில் இஸ்ரேலைப் பற்றி சொல்லப்பட்டுள்ள நில அமைப்பு மற்றும் சரித்திரத்தை நன்கு படித்தவர். அவர் வேதாகமத்தில் சொல்லப் பட்ட படியே அக்காலத்தில் இருந்த மரங்களை நட்டு காடுகளை உருவாக்கும் வேலையை ஆரம்பித்தார்.

 

ஒரு கையில் வேதாகமும் மற்றொரு கையில் கருவிகளுமாக வேளாண் விஞ்ஞானிகளும், தாவரவியல் மற்றும் பொறியியல் வல்லுனர்களும் வேலையை ஆரம்பித்தனர். அற்புதங்கள் நடக்க ஆரம்பித்தன.

 

 

 

இஸ்ரேலுக்கு அன்று தேவை காடுகள். என்ன விதமான மரங்களை கொண்டு எங்கு காடுகள் உருவாக்கலாம் என்பதற்கு வேதாகமம் உதவியது. முன்பு காடுகள் இருந்த அதே இடத்தில் மரங்களை நட்டால் அவைகள் செழித்து வளரும் என்பது வல்லுனர்கள் கருத்து. ஆகவே வேதாகமத்தில் யோசுவா புத்தகத்தில் காடு இருந்ததாக சொல்லப்பட்ட இடத்தில்  இஸ்ரேலின் “Forest of Martyrs” ஆறு மில்லியன் மரங்கள் நடப்பட்டன.

 

சமாரியாவில் 10ஆயிரம் ஆலிவ் மரங்கள் நடப்பட்டன.

 

ஆபிரகாம் முதலில் பெயேர்செபாவில் நட்ட மரம் “Tamarisks”. இஸ்ரேலில் திரும்ப காடுகளை உருவாக்கிய பொறுப்பில் இருந்த முனைவர் ஜோசம் வெயித்ஸ் (Dr. Joseph Weits) சொல்வது: “இந்த விவரத்தை வைத்துக் கொண்டு நாங்கள் அதே இடத்தில் இரண்டு மில்லியன் டாமரிக்ஸ் மரங்களை நட்டோம். ஆபிரகாம் சரியான மரத்தையே தேர்ந்தெடுத்துள்ளார். இவை இஸ்ரயேலின் தென் பகுதியில் உள்ள பாலை நிலங்களில் குறைந்த மலையிலும் நன்கு வளர்கின்றன.”

 

மார்க் டிவைன் பார்த்து, குடியற்று பாழாய் கிடக்கிற தேசம் என்று சொல்லிய தேசம் தீர்க்க தரிசனங்களின்படி இப்பொழுது பார்க்கிறவர்கள் ஆச்சரியப் படும்படி செழித்து நிற்கிறது யாருடைய செயலால்?

 

 

பாழாக்கப்பட்ட தேசம் கடந்துபோகிற யாவருடைய பார்வைக்கும் பாழாய்க்கிடந்ததற்குப் பதிலாக பயிரிடப்படும்.

பாழாய்க்கிடந்த இத்தேசம், ஏதேன் தோட்டத்தைப்போலாயிற்றென்றும், அவாந்தரமும் பாழும் நிர்மூலமுமாயிருந்த பட்டணங்கள் அரணிப்பானவைகளும் குடியேற்றப்பட்டவைகளுமாய் இருக்கிறது என்றும் சொல்லுவார்கள்.

கர்த்தராகிய நான் நிர்மூலமானவைகளைக் கட்டுகிறேன் என்றும், பாழானதைப் பயிர்நிலமாக்குகிறேன் என்றும், அப்பொழுது உங்களைச் சுற்றிலுமுள்ள மீதியான ஜாதிகள் அறிந்துகொள்வார்கள்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இதைச் செய்வேன். – எசேக்கியேல் 36:35, 36

 

 

 

தேசம் தயாராகிறது:

 

மழை பார்த்திராத தேசம் 1878லிருந்து மிக நல்ல மழையை பெற்றது.

இஸ்ரயேல் பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படும் மாற்றத்திற்கு ஆதாரமாக ஒரு கடிதத்தை பார்க்கலாம்.

 

1887ல் சிகாகோ ஜர்னல் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒரு கடிதம்:

யெருசலேம் , நவ 23, 1887.

 

“இங்கு நிகழும் மாற்றம் ஆச்சரியப்படும்படி உள்ளது. ஆறு வருடங்களுக்கு முன் நாங்கள் யெருசலேம் வந்தோம். ஜாப்னாவிலிருந்து வரும் வழியெல்லாம் பச்சை நிறமே பார்க்க முடியவில்லை. இருக்கும் மரங்களும் தூசியால் மூடப்பட்டிருந்தது. ஆனால் இப்பொழுது ஒவ்வொரு வருடமும் பசுமை அதிகரித்துக் கொண்டே போகிறது. வறண்ட பழுப்பு நிற மலைகள் எல்லாம் இப்பொழுது திராட்சை தோட்டமும் ஆலிவ் தோட்டமுமாக பசுமையால் மூடப்பட்டு காட்சியளிக்கிறது.

ஏன் இந்த மாற்றம்? ஏனெனில் கடவுள் வாக்களித்தது போல இப்போது ஆசீர்வாதத்தை இப்பொழுது கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். “நான் இந்த ஜனத்தின்மேல் இந்தப் பெரிய தீங்கையெல்லாம் வரப்பண்ணினதுபோல, அவர்களைக்குறித்துச் சொன்ன எல்லா நன்மையையும் அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.”

வருடா வருடம் மழை அதிகரிக்கிறது, கோடை காலத்திலும் மழை மேகங்கள் வருகிறது. இருபது வருடங்களுக்கு முன் இது போல் நடந்ததே இல்லை. ஜூலை ஆகஸ்டு மாதங்களில் மூன்று மணி நேர பலத்த மழையை ஜாப்னாவிலும் , டமாஸ்கசில் 16 மணி நேர மழையும் இன்னும் பல பகுதிகளிலும் பெய்தது. எப்பொழுதுமே இந்த மாதங்களில் மழையை காணவே முடியாது. ஆகவே இதையே இந்தப் பகுதியில் பருவகாலநிலை  மாற்றத்திற்கு ஆதாரமாக அமெரிக்க பத்திரிகைகள் கூட எழுதியுள்ளன.

...”

Ref: Thy Kingdom Come

 

இந்த மாற்றங்கள் மூலம், இஸ்ரயேலின் தண்டனைக் காலம் முடிந்தது என்று தெரிகிறது. லேவியராகமம் 26ல் மற்றும் எரேமியாவில் சொல்லப்பட்ட தண்டனைகள் முழுவதையும்  இஸ்ரயேல் மக்கள் அனுபவித்து விட்டார்கள். மழைத்தாழ்ச்சியைக் குறித்து எரேமியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்: எரேமியா 14

 

அவர்களது தண்டனையாக கொடுக்கப்பட்ட கால அளவு முடிந்து தேவ தயவு அவர்களுக்கு மீண்டும் திரும்பும்  காலம் வந்துவிட்டது. ஆகவே இப்பொழுது இஸ்ரயேல் மக்கள் மீண்டும் குடியேற கடவுள் தேசத்தை தயார்படுத்துகிறார் என்பதை உணர முடிகிறது.

 

“ஆகையால், நீ இஸ்ரவேல் தேசத்தைக்குறித்துத் தீர்க்கதரிசனம் உரைத்து, மலைகளுக்கும், மேடுகளுக்கும், ஆறுகளுக்கும், பள்ளத்தாக்குகளுக்கும் சொல்லவேண்டியது என்னவென்றால்;...

இஸ்ரவேல் மலைகளே, நீங்கள் உங்கள் கொப்புகளைவிட்டு, என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு உங்கள் கனிகளைக் கொடுப்பீர்கள்; அவர்கள் சமீபமாய் வந்துவிட்டார்கள்.

இதோ, நான் உங்கள் பட்சத்திலிருந்து, உங்களைக் கண்ணோக்குவேன்; நீங்கள் பண்படுத்தப்பட்டு விதைக்கப்படுவீர்கள்.

நான் உங்கள்மேல் இஸ்ரவேல் வம்சமாகிய மனுஷர் யாவரையும் வர்த்திக்கப்பண்ணுவேன்; பட்டணங்கள் குடியேற்றப்படும், அவாந்தரமான ஸ்தலங்கள் கட்டப்படும்.” - எசேக்கியேல் 36:6-10

 

யூத தேசிய நிதி (The Jewish National Fund) 1901ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1948ம் ஆண்டு இஸ்ரேல் தேசம் பிரகடனப்படுத்தப் பட்டது வரை 2,40,000 ஏக்கர் நிலங்களை பணத்துக்கு வாங்கி லட்சக்கணக்கான மரங்களை நட்டார்கள். இப்படி இஸ்ரேயலின் தெற்கில் வறண்ட பாலைவனம் முதல் வடக்கே எர்மோன் மலை வரை பல தரப்பட்ட நிலப்பகுதிகளில் பல வகைப்பட்ட சீதோஷ்ண நிலையில் வளரக்கூடிய பல வகை  பழ மரங்கள் பயிர்கள் வளர்க்கப் பட்டன. மழையும் தண்ணீரும் குறைந்த சிறிய தேசம் பழங்களையும், பூக்களையும் ஏற்றுமதி செய்யும் நிலைக்கு வளர்ந்தது.

 

டூலிப் மலர்கள் ஏற்றுமதியில் ஹாலந்து நாடு பிரசித்தி பெற்றது. அந்நாட்டில் டூலிப் மலர்கள் வளர்க்க முடியாத பருவ காலத்தில் இஸ்ரயேல் ஹாலந்து நாட்டிற்கும் டூலிப் ஏற்றுமதி செய்கிறது. (Ref: Christian Life Magazine August 80)

 

நெகவ் பாலைவனங்களில் நிலத்தடி நீரை பயன்படுத்தி செயற்கை ஏரிகளை உருவாக்கி மீன்கள் வளர்க்கிறார்கள்.

 

  நான் அவர்களையும் என் மேட்டின் சுற்றுப்புறங்களையும் ஆசீர்வாதமாக்கி, ஏற்றகாலத்திலே மழையைப் பெய்யப்பண்ணுவேன்; ஆசீர்வாதமான மழை பெய்யும்.

வெளியின் விருட்சங்கள் தங்கள் கனியைத்தரும்; பூமி தன் பலனைக் கொடுக்கும்; அவர்கள் தங்கள் தேசத்தில் சுகமாயிருப்பார்கள்; - எசேக்கியேல் 34:26

 

 

பயன்படுத்த முடியாத நிலம் என்று கருதப்பட்ட நிலத்தை யூதர்கள் வாங்கி விவசாய நிலமாகவும் பழத்தோட்டமாகவும் மாற்றினர். சதுப்பு நிலமாக இருந்த பகுதிகளை திராட்சைத் தோட்டங்களாக மாற்றினர். ஆனால் இந்த மாற்றம் சும்மா வந்துவிடவில்லை. கொசுக்கள் நிறைந்த சதுப்புநிலத்தில் வேலைசெய்த பல யூதர்கள் மலேரியாவினால் இறந்து போனார்கள்.

 

உலகம் முழுவதும் இன வெறுப்பால் விரட்டப்பட்டு கொல்லப்பட்டவர்கள் இவர்கள். ஆகவே இவர்கள் தங்களுக்கென்று ஒரு இடம் கிடைக்கிறது என்றதும் அது பாலைவனமாக இருந்தாலும், உயிரை வாங்கும் சதுப்பு நிலமாக இருந்தாலும் பரவாயில்லை என்று தங்கள் உயிரைக் கொடுத்து உழைத்தார்கள். எங்கோ இனப் படுகொலையில் அழிவதைவிட இங்கு உயிரை விட்டால் தனது சந்ததிகளாவது வாழலாமே.

 

ஆனால் இங்கும் இவர்களை இன, மத வெறுப்பு விட்டுவிடவில்லை.

யூதர்களின் முதல் குடியற்றத்திற்கான இஸ்ரயேல் வருகை 1882லிருந்து  1903 வரை ஓட்டோமான் பேரரசின் காலத்தில் நடந்தது. “The First Aliyah” யூத விவசாய குடியிருப்ப்புகளை ஏற்படுத்தியது.

 

ரஷ்யாவில் இருந்து பல யூத குழுக்கள் இஸ்ரயேல் தேசம் வந்து விவசாய குடியிருப்புகளை ஏற்படுத்தினர். ஆனால் சிலர் அங்கு தொடர்ந்து விவசாயம் செய்ய முடியாதபடி பொருளாதார நெருக்கடி மற்றும் அரபுக்களின் தாக்குதலுக்கு உள்ளாயினர். அதில் பெரும்பான்மை குழுக்கள் அழிந்து போயின. சில குழுக்களே தப்பிப் பிழைத்தது.

 

முதலாம் உலகப் போருக்கு பின்பு ஓட்டோமான் பேரரசு பிரிட்டனிடம் தோற்றது. அரேபியா சிரியா பகுதிகள் பிரட்டன் வசம் வந்தபடியால் இன்னும் எளிதாக யூதர்கள் குடியேற முடிந்தது.

 

உலகின் நான்கு மூலைகளில் இருந்து யூதர்கள் இஸ்ரேலுக்கு கொண்டு வரப்பட்டனர்.

 

பயப்படாதே, நான் உன்னோடே இருக்கிறேன்; நான் உன் சந்ததியைக் கிழக்கிலிருந்து வரப்பண்ணி, உன்னை மேற்கிலும் இருந்து கூட்டிச்சேர்ப்பேன்.

நான் வடக்கை நோக்கி: கொடு என்றும், தெற்கை நோக்கி: வைத்திராதே என்றும் சொல்லி,...” – ஏசாயா 43:5, 6

 

 

 

வேதாகம உதவியுடன் முந்தைய இஸ்ரயேல் ராஜ்யத்தில் பயன்படுத்திய தாமிரம் மற்றும் இரும்பு வேட்டி எடுக்கும் இடங்களை கண்டு அதில் கனிம சுரங்ககளை அமைத்தனர். சரித்திர கால இஸ்ரயேலின் கற்காளால் ஆன உலோகம் பிரித்தெடுக்கும் , மற்றும் உருக்கு அடுப்புகள் போன்றவைகள் இங்கு அடிக்கடி கண்டு பிடிக்கப்பட்டன. இங்கு தாமிர, இரும்பு சுரங்க அலுவலறையின் சுவர்களில் இருக்கும் வாசகம் :

உன் தேவனாகிய கர்த்தர் உன்னை நல்ல தேசத்திலே பிரவேசிக்கப்பண்ணுகிறார்;... அது கல்லுகள் இரும்பாயிருக்கிறதும், செம்பு வெட்டி எடுக்கத்தக்க மலைகளுள்ளதுமான தேசம்”. – உபாகமம் 8: 7,9

 

தேசம் செழிப்பாக வளர்கிறது பொருளாதாரம் முன்னேறுகிறது என்றதும் யூதர்கள் மட்டுமல்ல சுற்றிலும் இருந்த அரபு மக்களும் நல்ல வேலைவாய்ப்புக்களுக்காக இங்கு வர ஆரம்பித்தனர். யூதர்களுக்கும் பண்ணைகளிலும் தொழிற்சாலைகளிலும் வேலை செய்ய ஆட்கள் தேவைப்பட்டனர். எனவே அரபு மக்களும் அங்கு குடியேறி யூதர்களுடன் வேலை செய்தனர்.

 

 

நீண்டகாலமாக பயன்படுத்த முடியாத நிலம் என்று கருதப்பட்ட யோர்தான் நதியின் சமவெளிகளில் அகழ்வாராய்ச்சியாளர்கள் 70 பண்டைய இஸ்ரேலின் குடியிருப்புகள் கண்டுபிடித்துள்ளனர். 3,000 வருடங்களுக்கு முன்பு லோத்து பார்த்த காட்சி:

 

அப்பொழுது லோத்து தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்து: யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தினதாயிருக்கக்கண்டான். கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் அழிக்கும்முன்னே, சோவாருக்குப் போகும் வழிமட்டும் அது கர்த்தருடைய தோட்டத்தைப்போலவும் எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது.” ஆதியாகமம் 13:10

 

சரித்திர கால இஸ்ரேலில் பயன்படுத்தப் பட்ட கிணறுகள், ஊற்றுகள் மீது இன்று நவீன கான்கிரீட் பம்புகள் கட்டப்பட்டன. ஒரு ஆபிரகாம் காலத்து கிணறு இன்று பெயர்செபாவின் சுற்றுப் புற குடியிருப்புகளுக்கு எல்லாம் தண்ணீர் வழங்குகிறது.

இன்று தான் முதல் பெயேர்செபா வரை அகல்வாராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்ட பண்டைய குடியிருப்பு நிலங்கள் மேலேதான் புதிய விவசாய குடியிருப்புகள் அமைக்கப் பட்டுள்ளன.

 

ஒவ்வொரு ஏழாவது வருடம் இஸ்ரயேல் மக்களுக்கு ஒய்வு வருடமாக இருக்க வேண்டும் என்பது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகளில் ஒன்று. அந்த வருடம் அவர்கள் நிலத்தில் விவசாயம் செய்யக் கூடாது. அந்த வருடம் நிலத்திற்கு ஒய்வு வருடம். இது இன்று இஸ்ரயேல் மக்களால் கடைப் பிடிக்கப்படுகிறது. வேதாகம் முறைகள் இன்று இஸ்ரேலை உலகின் விவசாய முன்னோடியாக மாற்றியுள்ளது. விவசாயத்தில் பெரும் புரட்சிமூலம் வறண்ட நிலமும், சதுப்பு நிலமும் இன்று பசுமையான வயல்களும், திராட்சைத் தோட்டங்களுமாக மாற்றப்பட்டுள்ளது.

 

இன்று இஸ்ரயேல் வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்யும் தேசமாக இருக்கிறது. இந்தியா உட்பட பல நாடுகள் இஸ்ரயேலின் விவசாய முறைகளை பின்பற்றி முன்னேற்றம் கண்டுள்ளன.

 

என் ஜனமாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன்; அவர்கள் பாழான நகரங்களைக் கட்டி, அவைகளில் குடியிருந்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளுடைய பழரசத்தைக் குடித்து, தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் கனிகளைப் புசிப்பார்கள்.

 

அவர்களை அவர்கள் தேசத்திலே நாட்டுவேன்; நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனிப் பிடுங்கப்படுவதில்லையென்று உன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.  - ஆமோஸ் 9:14

 

விவசாயம் மட்டுமல்ல சகல துறைகளிலும் இஸ்ரயேல் தேசத்தின்  முனேற்றம் ஆச்சரியப்படும் படி உள்ளது.

 

யூதர்கள் உலக மக்கள் தொகையில் 0.2% விட குறைந்த அளவில் இருந்தாலும் , நோபல் பரிசு வென்ற யூதர்கள் சதவிகிதம் 20% -யூதர்கள் அல்லது இஸ்ரேலிய வழி வந்தவர்கள்.

 

இஸ்ரேலியர்களின் கண்டு பிடிப்புகள், மருத்துவம், அறிவியல் பொருளாதாரம் என பல துறைகளில் உலக மக்களுக்கு மிகவும் உதவியுள்ளது. நாம் இன்று பயன்படுத்தும் பல பொருட்கள் மற்றும் தொழில் நுட்பங்கள் யூதர்கள் கண்டு பிடித்ததே. இவை அனைத்தும் இவர்களின் தனிப்பட்ட திறமைகள் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. கடவுளின் ஆசீர்வாதம் இல்லாமல் எந்த ஒரு நாடும் மக்களும் இந்த அளவு முன்னேற முடியாது.

 

பல நூற்றாண்டுகளாக யூதர்கள் அழிவை சந்தித்து வந்தாலும் இப்பொழுது இஸ்ரயேலுக்கு தண்டனைக் காலம் முடிந்து தேவ தயவு திரும்பியுள்ளது என்பது தெளிவாகிறது. இது வரப்போகும் யுக மாற்றத்திற்கு ஒரு முக்கிய அடையாளமாக இருக்கிறது.

 

 

தீர்க்க தரிசன நிறைவேறுதல் :

http://www.divineplan.in/figtree.html

 

 

இஸ்ரயேலின் புதிய கண்டுபிடிப்புகள்:

http://en.wikipedia.org/wiki/List_of_Israeli_inventions_and_discoveries

http://www.levitt.com/news/2005/08/04/57-contributions-israel-has-made-to-the-world/

http://www.jewsnews.co.il/2013/08/27/the-top-12-ways-israel-feeds-the-world/

 

 

அவர்களுக்கு நன்மை செய்யும்படி அவர்கள்மேல் சந்தோஷமாயிருந்து, என் முழு இருதயத்தோடும் என் முழு ஆத்துமாவோடும் அவர்களை இந்த தேசத்திலே நிச்சயமாய் நாட்டுவேன்.

நான் இந்த ஜனத்தின்மேல் இந்தப் பெரிய தீங்கையெல்லாம் வரப்பண்ணினதுபோல, அவர்களைக்குறித்துச் சொன்ன எல்லா நன்மையையும் அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். - எரேமியா 32:41

 

 

இஸ்ரயேல் வரலாறு – விளக்கப் படம்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

deportation exile and migration from holy land to media

and khurasan

 

 

 

 

 

 

 

 

 

Roman - renamed Israel and Jerusalem: Syria Palestine

 

 

 

. Persecution of Jews in Russia-1885

 

 

Russian Jews

 

. Persecutions of the Jews in Medieval Europe

 

 

 

 

. Ever since 70 CE, life was one event after another of persecution

for Jews. 1096 saw Crusaders slaughtering Jews as they went

through European towns

 

 

German soldiers cutting off the beards of Jews

 

 

 

Nazi persecution of Jews during WWII

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

போதகர் ரஸல், அமெரிக்காவில் யூதர்கள் கூடிய மிகப் பெரிய கூட்டத்தில் யூதர்களுக்கான நாடு தீர்க்கதரிசனங்களின்படி 1914க்கு பிறகு கிடைக்கப் போகிறது என்று உரையாற்றுகிறார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Jews exodus ship to syria palestine

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

. Yatir forest

 

" Tamarisks Tree"

 

Jewish immigrants who arrived in Palestine during the first Aliyah

 

 

 

. Jews immigration ships

 

 

 

 

 

Beersheba 100 years ago

 

 

 

 

 

 

 

 

 

 

Irrigation of an orange grove, Petah Tikvah, Palestine,

c. 1900

 

.Citrus packing in Hadera before the establishment of the state.

 

 

The Hebron massacre refers to the killing of sixty-seven

Jews on 24 August 1929 in Hebron

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Israel_Picking_Cotton

 

 

 

 

 

 

 

 

 

Spring blossom of Chrysanthemum coronarium in Rishon LeZions lake

 

 

. Wheat growing in the Hula Valley