“Organization” in Watch Tower

 

கடவுள் ஏன் தீமையை அனுமதிக்கிறார்

 

மனிதனுக்கான கடவுளின் வெளிப்பாடு

 

ஒரே பைபிள், ஏன் மார்க்க பேதங்கள்?

 

கிறிஸ்தவர்களுக்கு ஒரு எச்சரிக்கை

 

நரகம் என்றால் என்ன?

 

அத்தி மரம்

 

ஜெயிப்பது கடவுளா? அல்லது சாத்தானா?

 

DNA MENTIONED IN THE BIBLE 

 

Home

 

 

தேவனுடைய சபை அமைப்பு

 

நாம் எல்லோரும் தேவனினுடைய பார்க்க முடியாத அமைப்பில் ( Invisible organisation of God on earth ), வெளிப்படையாக தெரியாத தேவனுடைய (சபை) பிள்ளைகளின் அமைப்பில் இணைந்திருக்க வேண்டும். மனிதர்களால் நிர்வகிக்கப்படும் , மனிதர்களின் கோட்பாடுகள், கட்டுப்பாடுகள், தலைமையின் கீழ்  இயங்கும் அமைப்புகளின் கீழ் அல்ல தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் கிறிஸ்துவின், மெய்யான திராட்ச்சைச் செடியின் கிளைகளாக இணைய வேண்டும்.

மத அமைப்புகளைப்பற்றி ரசல் போதகர் பல முறை எச்சரித்திருந்தாலும் சத்திய சகோதரர்கள் மீண்டும் மீண்டும் அதில் அதிகளவில் விழுவதை பார்க்க முடிகிறது.

அதைப் பற்றி “The Great Pyramid Witness” Volumல் வந்ததை தமிழில் மொழிபெயர்த்து தருகிறேன்.

ஏசாயாவின் புத்தகத்தில் சொல்லப்பட்ட “சகாயமடையும்படி இஸ்ரவேலுடைய பரிசுத்தரை நோக்காமலும், கர்த்தரைத் தேடாமலும், எகிப்துக்குப் போகிறவர்களுக்கு ஐயோ “ என்பதை அப்படியே சொல்லர்த்தமாக எடுத்துக் கொண்டால் எகிப்தில் தேவனுக்கு சாட்சியாக இருக்கும் மகா பிரமிட் விளக்கும் காரியங்களை அறிந்துகொள்ள போகக்கூடாது என்று ஆகும். ஆனால் ஏசாயா தீர்க்கதரிசி மேலும் தெளிவாக சொல்வது “எகிப்துக்குப்போய், குதிரைகள்மேல் நம்பிக்கைவைத்து, இரதங்கள் அநேகமாயிருப்பதினால் அவைகளை நாடி, குதிரைவீரர் மகா பெலசாலிகளாயிருப்பதினால் அவர்களை நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ!

 

போதகர் ரசல் தனது மகா பிரமிட் அத்தியாயத்தில் “குதிரைகள்” மற்றும் “குதிரைவீரர்கள்” தவறான போதனைகளையும், போலியான தலைவர்களையும் குறிக்கிறது என்று விளக்கியுள்ளார். மேலும் “ரதங்கள்” உலக (மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட) அமைப்புகளையும் குறிக்கிறது. இவர்கள் எல்லோருமே தங்களது கோட்பாடுகளும், அமைப்புகளும், தலைவர்களும் தேவனுடைய அமைப்பு என்றே கோருவார்கள். ஆனால் கடவுள் நாம் நமது நம்பிக்கைகளை அவர்கள் மேல் வைக்க்க கூடாது என எச்சரித்துள்ளார். ஏனென்றால் அவர்கள் “எகிப்து” என்னும் உலகத்தை சேர்ந்தவர்கள்.

 

தேவனுடைய ராஜ்யத்திற்கும் அந்தகார சக்தியின் காரியங்களுக்கும் உள்ள வேறுபாட்டை எவ்வாறு காண்பது எனபதைப் பற்றி போதகர் ரசல், தன்னுடைய வேதாகம பாடங்கள் தொகுப்பில் தெளிவாக போதித்திருக்கிறார். அவர் சாத்தான் எவ்வாறு தற்போதைய தீய உலகின் பல்வேறு தவறான அமைப்புகளைத் திரட்டி தன்னுடைய இருளின் சாம்ராஜ்யத்தை அமைத்துக் கொண்டிருக்கிறான் என்பதை தெளிவாகக் காட்டியுள்ளார். சாத்தானுடைய வஞ்சகத்தில், அமைப்பில் சிக்கிய பலர், தங்களுடைய சபை அமைப்பு, அல்லது சபை காரியங்கள் சாத்தானுடைய பிடியில் இல்லை என்று நம்பிக் கொண்டிருகின்றனர்.

 

ஆனால் இவற்றிலிருந்து தப்ப ஒரே பாதுகாப்பான வழியானது; ஒவ்வொருவரும் சபைகள், கொள்கை பிரிவுகள் , அமைப்புகள் போன்றவைகளில் இருந்து தங்களை விலக்கி, கிறிஸ்துவிடம் நேரடியாக சேர்ந்து அவருடைய பார்க்க முடியாத சபை அமைப்பில் (சரீரம்) இணைவதே ஆகும்.

 

“எப்படியெனில், சரீரம் ஒன்று, அதற்கு அவயவங்கள் அநேகம்; ஒரே சரீரத்தின் அவயவங்களெல்லாம் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றாகவேயிருக்கிறது; அந்தப்பிரகாரமாகக் கிறிஸ்துவும் இருக்கிறார்.  நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்.  சரீரமும் ஒரே அவயவமாயிராமல் அநேக அவயவங்களாயிருக்கிறது.

 

காலானது நான் கையாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ?  காதானது நான் கண்ணாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ? சரீரம் முழுவதும் கண்ணானால், செவி எங்கே? அது முழுவதும் செவியானால், மோப்பம் எங்கே?

 

தேவன் தமது சித்தத்தின்படி, அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார். அவையெல்லாம் ஒரே அவயவமாயிருந்தால், சரீரம் எங்கே? அவயவங்கள் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றே. கண்ணானது கையைப்பார்த்து: நீ எனக்கு வேண்டுவதில்லையென்றும்; தலையானது கால்களை நோக்கி: நீங்கள் எனக்கு வேண்டுவதில்லையென்றும் சொல்லக்கூடாது. சரீர அவயவங்களில் பலவீனமுள்ளவைகளாய்க் காணப்படுகிறவைகளே மிகவும் வேண்டியவைகளாயிருக்கிறது. மேலும், சரீர அவயவங்களில் கனவீனமாய்க் காணப்படுகிறவைகளுக்கே அதிக கனத்தைக் கொடுக்கிறோம்; நம்மில் இலட்சணமில்லாதவைகளே அதிக அலங்காரம் பெறும்; நம்மில் இலட்சணமுள்ளவைகளுக்கு அலங்கரிப்பு வேண்டியதில்லை.

 

சரீரத்திலே பிரிவினையுண்டாயிராமல், அவயவங்கள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாயிருக்கும்படிக்கு, தேவன் கனத்தில் குறைவுள்ளதற்கு அதிக கனத்தைக் கொடுத்து, இப்படிச் சரீரத்தை அமைத்திருக்கிறார்.  ஆதலால் ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடப் பாடுபடும்; ஒரு அவயவம் மகிமைப்பட்டால் எல்லா அவயவங்களும் கூடச் சந்தோஷப்படும். நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள்.  - 1 கொரிந்தியர் 12:12-27

 

 

தப்பறைகளுக்கு எதிரான போராட்டமும் சீர்திருத்தமும் உண்மையான ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும். கொள்கைகள் கோட்பாடுகள் மூலம் சபை அமைப்புகளில் பிரிவுகள் ஏற்படுவது, தேவனுடைய ஆடுகள் விடுவிக்கப்படவும் அதனால் தேவனுடைய சபை சுத்திகரிக்கப் படவும் தேவையாயிருக்கிறது. சிறியதோ அல்லது பெரியதோ அமைப்புகளில் போய்ச் சேர்ந்து விடாமல் நேரடியாக தலையாகிய கிறிஸ்துவிடம் சேர்வதே விசுவாச ஓட்டத்தில் நாம் பெரும் சமாதானமும் ஓய்வும் ஆகும்.

 

மனிதர்களின் மத கோட்பாடுகள் மற்றும் அவர்களது ஆதிக்கத்தில் சிக்கிக் கொள்ளாமல், சுதந்திரமாக நின்று கிறிஸ்துவிடம் நேரடியாக கிட்டிச் சேர்வதின் மூலம், ஒவ்வொரு சகோதரரும் மற்ற சகோதரர்களுடன் கொள்ளும் ஐக்கியம் உண்மையான சகோதர அன்புடனும் எவ்வித பிரச்சினைகளையும்  கொண்டுவராத ஐக்கியமாக இருக்கும். மெய்யான திராட்சைச் செடியான நமது இரட்சகர் கிறிஸ்துவுடன், திராட்சைக் கிளைகளாகிய நம்முடைய தனிப்பட்ட, நேரடியான ஐக்கியமே நம்மை இருளிலும் , உலகின் தீமைகளில் இருந்தும் விடுவிக்கிறது. இந்த ஐக்கியமே, நம்மை தேவனுடைய ராஜ்யத்திற்கு தகுதியாக்குகிறது அன்றி, சபை அமைப்புகள் அல்ல. ரோமர் 8:14-17; கொலே. 1:12-14.

 

தேவனுடைய வார்த்தைகள் மூலம் நமக்கு போதகர் ரசல் மிகத் தெளிவாக கூறும் உண்மை என்னவென்றால், “கடவுளின் பிரியமான குமாரனுடைய ராஜ்ஜியம், மனிதர்கள் கண்களால் பார்க்கும் படியான, இந்த உலக அமைப்புகள் அல்ல, அது பார்க்க முடியாத தேவனுடைய அமைப்பு” என்பதே. நாம் வரப்போகும் தேவ ராஜ்யத்தின் குடிமக்களாய் இருக்கிறோம். தேவ ராஜ்யத்தின் தூதுவர்களாய் இருக்கிறோம். இது உண்மை என நமக்கு தெரிந்தாலும் வேறு யாரும் இதை உணர முடியாது. “உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை. ”—1 யோவான் 3:1 என்று அப்போஸ்தலர் யோவான் அறிவிக்கிறார்.

 

 

தற்காலத்தில் நாம் தேவனைத் தொழுது கொள்ளவோ , பிதா அங்கீகரிக்கும் படியான ஆராதனையை செய்யவோ குறிப்பிட்ட இடங்களில் இருந்து செய்ய வேண்டும் என்பது இல்லை என்பதை “எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே தொழுதுகொண்டுவந்தார்கள்; நீங்கள் எருசலேமிலிருக்கிற ஸ்தலத்திலே தொழுதுகொள்ளவேண்டும் என்கிறீர்களே. “ என்ற சமாரிய பெண்ணின் கேள்விக்கு பதிலளிப்பதின் மூலம் யேசு கிறிஸ்து உறுதிபடுத்துகிறார்.

அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு, நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது.  ...  தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.” யோவான் 4: 19-24

 

தேவ ஆவியை பெற்றுக் கொண்ட நாம் பரத்திலிருக்கிற கடவுளின் பிள்ளைகளாயிருக்கிறோம். எந்த ஒரு காணக்கூடிய உலக அமைப்பின் பிள்ளைகள் அல்ல. சபை அமைப்பு என்ற சொல் வேதாகமத்தில் காணப்படவில்லை, மேலும் இது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. வேதாகமத்தில் இதற்கு பயன் படுத்தப்பட்ட வார்த்தை ராஜ்ஜியம், மேலும் நமது கிறிஸ்து மிகத்தெளிவாக அவரது ராஜ்ஜியம் வெளியரங்கமாய், காணப்படக்கூடிய ஒன்றாய் வராது என்று கூறியிருக்கிறார்.

“தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது. இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார்.லூக்கா 17:20,21.

 

போதகர் ரசல் இந்தக் காரியங்களைக் குறித்து எத்தனையோ முறை எச்சரிக்கை செய்தும் நாம் இவற்றுக்கு செவிகொடுக்காமல் இருந்தால் எந்த அளவு புத்தியற்றவர்களாய் இருப்போம். இருந்தும் “எங்களது சபை அல்லது அமைப்பு மூலம் மட்டுமே தேவன் ஆராதனையையும், ஊழியத்தையும் ஏற்றுக் கொள்வார்” என்று கோரினால் நிச்சயமாகவே அறிவற்றவர்களாய் இருப்போம். ஏனென்றால் இது, சபை அமைப்புகளில் சட்ட திட்டங்களை ஏற்படுத்திக் கொண்டு தலைவர்களாக இருக்கும் சிலரை, தேவனுடைய ஆவியை பெற்ற அவருடைய பிள்ளைகள் பணிந்து வணங்கச் செய்வதாக இருக்கிறது. உலகத்துக்குரிய மாம்ச சிந்தை மட்டுமே இவ்வாறு வேதாகமத்தில் தேவன் கொடுத்ததற்கு விரோதமான காரியங்களை கோரி ஏமாற்றும் என்பதை அப்போஸ்தலர் காட்டுகிறார். —1 கொரி. 3:1-6, 18-23.

 

“மேலும், சகோதரரே, நான் உங்களை ஆவிக்குரியவர்களென்று எண்ணி உங்களுடனே பேசக்கூடாமல், மாம்சத்துக்குரியவர்களென்றும், கிறிஸ்துவுக்குள் குழந்தைகளென்றும் எண்ணிப் பேசவேண்டியதாயிற்று.  ...  பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா?  ஒருவன் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், வேறொருவன் நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால் நீங்கள் மாம்சத்திற்குரியவர்களல்லவா?  பவுல் யார்? அப்பொல்லோ யார்? கர்த்தர் அவனவனுக்கு அருள் அளித்தபடியே நீங்கள் விசுவாசிக்கிறதற்கு ஏதுவாயிருந்த ஊழியக்காரர்தானே.  நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார்.1 கொரி. 3:1-6,

 

“ஒருவனும் தன்னைத்தானே வஞ்சியாதிருப்பானாக; இவ்வுலகத்திலே உங்களில் ஒருவன் தன்னை ஞானியென்று எண்ணினால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகக்கடவன்.  இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது. அப்படியே, ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறாரென்றும்,  ஞானிகளுடைய சிந்தனைகள் வீணாயிருக்கிறதென்று கர்த்தர் அறிந்திருக்கிறாரென்றும் எழுதியிருக்கிறது.  இப்படியிருக்க, ஒருவனும் மனுஷரைக்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பானாக; எல்லாம் உங்களுடையதே;  பவுலாகிலும், அப்பொல்லோவாகிலும், கேபாவாகிலும், உலகமாகிலும், ஜீவனாகிலும் மரணமாகிலும், நிகழ்காரியங்களாகிலும், வருங்காரியங்களாகிலும், எல்லாம் உங்களுடையது;  நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள்; கிறிஸ்து தேவனுடையவர்.1 கொரி. 3: 18-23.

...

 

தேவனுக்கெதிரான பாவஞ்செய்த கிறிஸ்தவ மண்டலத்தின் (“மறைபொருள் என்றழைக்கப்படும் சபையின் மீறுதல்”) உதாரணத்தை நாம் ஒருபோதும் மறந்து விடக்கூடாது, இரகசியம் என்றழைக்கப்பட்ட  சபையின் மீறுதலுக்கு, வீழ்ச்சிக்கு சாத்தான் காரணமாயிருந்து, முழு உலகையும் வஞ்சித்து  (2 Thess. 2:7-9 ) போப்பு மார்க்கத்தின் அதிகாரத்தின் உச்சிக்கு வழிநடத்தினான். ஆகவேதான்  ஆணவத்தின் உச்சமாக போப்பு போநிபேஸ் VIII (Boniface VIII)ன் அறிக்கை (“bull,” Unam Sanctum) வெளியிடப்பட்டது, “ நாங்கள் உறுதிபடுத்துவதும், பிரமாணமாக பிரகடனப்படுத்துவது என்னவென்றால்: ரோம கத்தோலிக்க மத தலைமைக்குக் கட்டுப்படாமல், கீழ்ப்படியாமல் உலகில் எந்த மனிதனும் இரட்சிக்கப்பட முடியாது என்பதே.”

 

( போப்பு மார்க்க அதிகார உச்சம் மற்றும் வீழ்ச்சியும் வரலாறு – Great Pyramid Passages Vol – II  Chapter “Time Parallels in The Jewish and Gospel Ages”, “The Dawn of the Reformation”

கிபி 400 முதல் 1799 வரையான யுரோப்பிய அரசர்கள் மற்றும் போப்புகளின் வரலாறு படிப்பது மிக உதவியாக இருக்கும். )

 

ஆணவத்தின் இந்த உச்ச நிலையே ரோம கத்தோலிக்க மத ஆளுகையின் வீழ்ச்சிக்கு ஆரம்பமாக இருந்தது என்பதை வரலாறு நமக்கு காண்பிக்கிறது. அதிகாரமும் பெருமையும் உச்சத்தை அடையும் போது வீழ்ச்சி ஆரம்பமாகி , பின்பு முழுமையான அழிவுக்கு கொண்டுபோய் விடும். இதுவே தேவனுடைய நியாயத்தீர்ப்பாக இருக்கிறது. “தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.” — லூக்கா 14:11.

 

The Great Pyramid Witness  page 81 - Morton Edgar

YYYYYYY

 

மேலும் சபை அமைப்பு மற்றும் ஒழுங்குகளைப் பற்றிய மேலதிக விவரங்களுக்கு Parousia Vol 6 “The New Creation“ அதிலும் குறிப்பாக “The Organisation“ என்ற அத்தியாயத்தைப் படிக்கவும்.

 

 

“Organization” in Watch Tower