தசம பாகம்

Tithes

Tithes

 

 

 

 

 

3 வித்தியாசமான தசம பாகங்கள்

 

  • லேவியருக்கான தசம பாகம்

 

 

லேவியருக்குக் கொடுக்க, லேவியருடைய பட்டணங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அந்தத் தசம பாகத்தில், பத்தில் ஒரு பங்கை, ( உபதசம பாகம் ) ஆசாரியர்களுக்கு லேவியர் செலுத்தினர். பணமாகத் தசம பாகம் ஒரு போதும் கொடுக்கப் படவில்லை. விளைந்த பயிர் வகைகள், பழ வகைகள் மற்றும் கோலின் கீழ் கடந்து சென்ற 10 வது மிருகமும், மட்டுமே தசம பாகமாகச் செலுத்தப்பட்டன. எல்லா 6 வருடங்களும், அறுவடை முடிந்த பின்னர் செலுத்தப் பட்டன.

 

 

  • பண்டிகைத் தசம பாகம்

 

 

எருசலேமுக்கு எடுத்துச் செல்லப் பட்டன. உபதசம பாகம் இல்லை. பணமாகத் தசம பாகம் ஒரு போதும் கொடுக்கப் படவில்லை. விளைந்த பயிர் வகைகள், எண்ணை, திராட்சை ரசம் மற்றும் முதல் பிறந்த மிருகங்கள் செலுத்தப் பட்டன. தசம பாகம் கொண்டு செல்லும் உரிமையாளர்கள், வேலைக்காரர்/காரிகள்  மற்றும் லேவியர்கள் எருசலேமில் தசம பாகத்தை உண்டு, அருந்தினர். எல்லா 6 வருடங்களும், 3 பயணப் பண்டிகைகளில் செலுத்தப்பட்டது.

 

 

 

  • தான தர்மத் தசம பாகம்

 

 

நகர எல்லைக்குள் தசம பாகம் வைக்கப்பட்டது, வெளியே எடுத்துச் செல்லக் கூடாது. உபதசம பாகம் இல்லை விளைந்த தானியங்கள் மட்டும். (செப்டுவாஜின்ட் பழங்கள் என்று சொல்கிறது) விலங்குகள், பணம் சம்பந்தப்படவில்லை. மூன்றாம் மற்றும் ஆறாம் வருட இறுதியில் மட்டும் இத் தசம பாகம் கொடுக்கப் பட்டது. நகர எல்லைக்குள் வாழ்ந்த லேவியர், விதவைகள், ஏழைகள், அனாதைகள், ஊரில் வசித்த அந்நியர்கள் இந்தத் தசம பாகத்தை சாப்பிட்டனர்.   இந்தத் தசம பாகத்தைக் கொடுத்த பின், உரிமையாளர் ஒரு சிறப்பு ஜெபம் செய்ய வேண்டும்.

 

தசமபாகம் கிறிஸ்தவர்களுக்கா?

 

ஏஜி சபை என்று அழைக்கப் படும் அசெம்ளீஸ் ஆஃப் காட்,   விசுவாசவார்த்தை சபை,  சர்ச் ஆப் காட்,  குட்டிக் குட்டிப் பெந்தெகோஸ்தெ சபை ஸ்தாபனங்கள், ஆயிரக்கணக்கான சுயாதீனப் பெந்தெகோஸ்தெ சபை போன்ற சபைகளைச் சேர்ந்த கிறிஸ்தவப் பிரசங்கியாளர்கள்,  தங்கள் சபைகளுக்கு வரும் அப்பாவிக் கிறிஸ்தவர்களைப் 10ல் ஒரு பங்கைக் கட்டாயமாகத் தங்களுக்குக் கொடுக்கச் சொல்லிக் கிறிஸ்தவ சமுதாயத்தை ஏமாற்றி வருகிறார்கள்.

 

கிறிஸ்தவர்களே, இப்படிப் பட்ட வஞ்சகர்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள்.

 

தசமபாகத்தை மீட்க (பரிமாற்றம் செய்ய) விதி முறைகள்!!!!

தசமபாகத்தை மீட்க  (பரிமாற்றம் செய்ய) விதி முறைகள்:

 

எபிரேய மொழியில் மாசர் ரிஷோன் என்று அழைக்கப்படும் லேவியருக்கான தசமபாகம்  (முதலாவது தசமபாகம்):

 

தானியங்களையும், நிலத்தில் விளைந்த பொருட்களையும், பழவகைகளிலும் 10% தத்தை லேவியருக்குக் கொடுப்பதற்குப் பதிலாக அவைகளைத் தாங்களே வைத்துக் கொள்ள நினைப்பவர்கள், அவைகளின் சரியான பண மதிப்போடு, 20% பண மதிப்பைக் கூடுதலாகப் போட்டு, அபராதமாகச் செலுத்த வேண்டும்.  தசமபாகம் என்பது பணம் அல்ல, பணத்தைப் பணத்தால் எப்படி மீட்டிருக்க முடியும்?    

 

உதாரணமாக, 10% பயிர்வகைகள்  100 சேக்கல் பணம் பெறுமானால்,  மீட்கும் போது 120 சேக்கல் பணம் லேவியருக்குக் கொடுத்தால், தசமபாகத்தைத் தங்களிடமே வைத்துக் கொள்ளலாம்.   வாசிக்கிறவர்கள் சிந்தியுங்கள்:  பணத்திலிருந்து நேரடியாகத் தசமபாகம் கொடுக்க ஆண்டவர் கட்டளை கொடுத்திருந்தால்,  1000 சேக்கல் மாதவருமானமுள்ள யூதர் ஒருவர் 100 சேக்கலை லேவியருக்குக் கொடுத்தபின், 20 சேக்கலை எக்ஸ்ட்ராவாகக் கொடுத்து, 120 சேக்கலாக பரிமாற்றம் செய்வதெப்படி?  மக்கள் கடைக்குச் செல்லும் போது பணம் கொடுத்துப் பொருள் வாங்கச் செல்லுகிறார்கள், யாராவது கடைக்காரர் கல்லாவில் இருக்கும் 100 ரூபாயை வங்க 120  ரூபாய் கொடுத்ததுண்டா?

 

ஆனால், கால்நடைகளில் தசமபாகம் கொடுக்கும் போது,  தடியின் கீழ்க்கடந்து செல்லும் கால்நடைகளில் 10 ஆவதாகக் குறிக்கப்படும் கால்நடை, மிகவும் பிரியமானது என்று வைத்துக் கொள்வோம்:  அதற்குப் பதிலாக வேறொரு கால்நடையை மாற்றம் செய்யலாம் என்று மற்றொரு கால்நடையைக் கொண்டுவந்தால், முதல் குறிக்கப்பட்ட கால்நடையோடு, மாற்றம் செய்யக் கொண்டு வரப்பட்ட கால்நடையும், ஆண்டவருக்கென்று எடுத்துக் கொள்ளப்படும்.

 

வசன ஆதாரம்:

 

லேவியராகமம்:  27:30 - 33

 

27:30.  தேசத்திலே நிலத்தின் வித்திலும், விருட்சங்களின் கனியிலும், தசமபாகம் எல்லாம் கர்த்தருக்கு உரியது; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது.

 

27:31. ஒருவன் தன் தசமபாகத்திலே எவ்வளவாவது மீட்டுக்கொள்ள மனதாயிருந்தானானால், அதனுடன் ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக்கொடுக்கக்கடவன்.

 

27:32.  கோலின் கீழ்ப்பட்ட ஆடுமாடுகளிலே பத்தில் ஒரு பங்காகிறதெல்லாம் கர்த்தருக்குப் பரிசுத்தமானது.

 

27:33.  அது நல்லதோ இளப்பமானதோ என்று அவன் பார்க்கவேண்டாம்; அதை மாற்றவும் வேண்டாம்; மாற்றினால், அதுவும் அதற்குப் பதிலாகக் கொடுக்கப்பட்டதுமாகிய இரண்டும் பரிசுத்தமாகும்; அது மீட்கப்படக் கூடாதென்று அவர்களோடே சொல் என்றார்.

 

 

கிறிஸ்தவப் பிரசங்கியாளர்கள்,  தங்கள் சபைகளுக்கு வரும் அப்பாவிக் கிறிஸ்தவர்களைப் 10ல் ஒரு பங்கைக் கட்டாயமாகத் தங்களுக்குக் கொடுக்கச் சொல்லிக் கிறிஸ்தவ சமுதாயத்தை ஏமாற்றி வருகிறார்கள்.

 

கிறிஸ்தவர்களே, இப்படிப் பட்ட வஞ்சகர்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள்.

 

 

 

 

 

YYYYYYY

 

Tithes