கடவுள் ஏன் தீமையை அனுமதிக்கிறார்

 

மனிதனுக்கான கடவுளின் வெளிப்பாடு

 

ஒரே பைபிள், ஏன் மார்க்க பேதங்கள்?

 

கிறிஸ்தவர்களுக்கு ஒரு எச்சரிக்கை

 

நரகம் என்றால் என்ன?

 

அத்தி மரம்

 

DNA MENTIONED IN THE BIBLE 

 

Home

 

 

யார் கடவுள் ? யார் நமது இரட்சகர் ?

 

 

பிதாவாகிய ஒரே தேவன் (God, θεός ) நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசு கிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.

 

ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை.1கொரிந்தியர் 8:6 ,7

 

யேசு கிறிஸ்து கடவுளின் ஒரே பேறான குமாரன் , அதாவது கடவுளால் நேரடியாக படைக்கப்பட்ட ஒரே நபர். மற்றவை எல்லாம் கடவுளால் யேசு கிறிஸ்துவின் மூலம் படைக்கப்பட்டவை. இந்த வசனம் அதை தெளிவாக கூறுகிறது. ஒரே கடவுளைப் பற்றி கூறும்போது அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது என்று கூறுகிறது. ஆனால் யேசு கிறிஸ்து பற்றி சொல்லும் போது அவர் மூலமாய் சகலமும் உண்டாயிருக்கிறது. என்று சொல்கிறது. அதாவது எல்லாம் கடவுள் படைத்தது. ஆனால் கடவுள் எல்லாற்றையும் யேசு கிறிஸ்துவின் மூலம் படைத்தார்.

 

கடவுளால் நேரிடையாக படைக்கப்பட்ட ஒரே சிருஷ்டி லோகாஸ் என்ற பெயரில் ஆதியில் இருந்த யேசு கிறிஸ்து மட்டுமே.

 

Col 1:15 அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வசிருஷ்டிக்கும் முந்தினபேறுமானவர்.  (the firstborn of all creation;) முதலில் சிருஷ்டிக்கப்பட்டவர்.

 

Rev 3:14  உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;

 

எப்படியெனில், நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்றும்; நான் அவருக்குப் பிதாவாயிருப்பேன், அவர் எனக்குக் குமாரனாயிருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் சொன்னதுண்டா? - Heb 1:5 

 

 

ஆகவே உண்மையான ஒரே கடவுளும், அவருடைய குமாரன் கிறிஸ்து ஏசுவும் ஆக இருவர் நமக்கு உண்டு.

 

1Ti 2:5  தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.

 

இப்படி வேதம் ஒரே கடவுள் என்று சொல்லியும் கிறிஸ்தவ மண்டலம் மூன்று கடவுள்கள் என்று வேதாகமம் சொல்லாததை பிரசங்கித்துக் கொண்டிருக்கிறார்கள். கிறிஸ்து மூன்று கடவுள்களை வணங்க வேண்டும் என்று போதித்தாரா? அப்போஸ்தலர்கள் மூன்று கடவுள்களைப் பற்றி போதித்தார்களா?

 

ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். - யோவான் 17:3 

 

கிறிஸ்து இவ்வாறு தெளிவாக நாம் நித்திய வாழ்வை அடைய ஒரே கடவுள் மற்றும் அவர் அனுப்பிய குமாரனாகிய யேசு ஆகிய இருவரைப் பற்றி மட்டுமே அறிந்து கொள்ள வேண்டும் என்று தெளிவாக சொல்கிறாரே. யேசுவும் அப்போஸ்தலர்களும் ஒரே கடவுள் என்று போதித்திருந்தாலும் கிறிஸ்தவ மண்டலம் இன்று மூன்று கடவுள் என்ற சாத்தானின் பொய்யில் விழுந்து குழப்பத்தில் இருக்கிறது.

 

Joh 8:16  நான் நியாயந்தீர்த்தால், என் தீர்ப்பு சத்தியத்தின்படியிருக்கும்; ஏனெனில் நான் தனித்திருக்கவில்லை, நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம்.

Joh 8:17  இரண்டுபேருடைய சாட்சி உண்மையென்று உங்கள் நியாயப்பிரமாணத்திலும் எழுதியிருக்கிறதே.

 

இந்த இருவரும் ஒன்று என்பதும் இருவரும் சமம் என்பதும் இருண்ட காலங்களில் வந்த சாத்தானின் பொய், தவறான உபதேசம். சாத்தான் இப்படி கடவுள் யார் என்றும் நமது ரட்சகர் யார் என்றும் தெரியாதபடி குழப்பத்தை ஏற்படுத்துவதன் மூலம் வேதாகம சத்தியங்களை புரிந்து கொள்ள முடியாதபடி கிறிஸ்தவ மண்டலத்தை குழப்பத்தில் வைத்திருக்கிறான்.

 

இருவரும் ஒருவராய் இருந்தால் எப்படி உமது விருப்பம் என் விருப்பம் என்று யேசு கடவுளிடம் சொல்ல முடியும்.? எப்படி பிதா என்னிலும் பெரியவர் என்று சொல்ல முடியும்? எப்படி யேசுவின் கீழ்ப்படிதலும் பலியும் நேர்மையானதாக இருக்க முடியும்?

 

யேசு பட்ட பாடுகளினாலே கீழ்ப்படிதலை கற்றுக் கொண்டார் என்று வேதம் சொல்கிறதே. அப்படி என்றால் இரண்டு பேர் வேண்டுமே. ஒருவர் தன்னை விட உயர்ந்த இன்னொருவர் சொல் கேட்டு நடப்பதுதானே கீழ்ப்படிதல். ஆக இருவரும் ஒன்று என்று சொன்னால் யேசு பொய் சொல்கிறார், நாடகமாடுகிறார் என்றாகிறதே. ஆகவே இருவரும் ஒன்று என்பது தேவ நாமத்திற்கு தூஷணமாய் இருக்கிறது.

 

Mat 26:39  சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.

 

இருவரும் ஒன்றாய் இருந்தால் இப்படி ஜெபிப்பது நாடகமாய் போய்விடுமே? மேலும் யேசு கிறிஸ்துவே கடவுள் தம்மை விட பெரியவராய் இருக்கிறார் என்று சொல்கிறார்.

 

Joh 14:28   நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக் குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.

கிறிஸ்துவுக்கு கடவுள் மேலானவராக தலையாக இருக்கிறார்.

 

1Co 11:3  ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்குத் தேவன் தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன்.

 

எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை கடவுள் யேசுவுக்கு கொடுத்திருக்கிறார், எல்லோரையும் விட மேலாக கிறிஸ்துவை கடவுள் உயர்த்தினாலும் கடவுளுக்கு யேசு கட்டுப்பட்டு கீழ்ப்படிந்து இருக்கிறார் என்று வேதாகமம் போதிக்கிறது.

 

1Co 15:27  சகலத்தையும் அவருடைய பாதத்திற்குக் கீழ்ப்படுத்தினாரே; ஆகிலும் சகலமும் அவருக்குக் கீழ்ப்படுத்தப்பட்டதென்று சொல்லியிருக்கும்போது, சகலத்தையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் கீழ்ப்படுத்தப்படவில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது.

 

Joh 12:49 நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.

 

கிறிஸ்து உண்மையாக இருந்தார், கடவுளுக்கு முழுமையாக கீழ்ப்படிந்தார், அதனால் உயர்த்தப் பட்டார். நமக்கு முன் மாதிரியாக இருக்கிறார். நாம் அவர் சாயலில் வளர முயற்சிக்க வேண்டும். இந்த சத்தியங்களே கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் மகிமையாக இருக்கின்றது. அவர்களது அன்பான மகிமையான குணாதிசயங்களை காட்டுகிறது.

 

Php 2:9  ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,

Php 2:10  இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,

Php 2:11  பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசு கிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.

கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள்;

 

Heb 3:2 மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்ததுபோல, இவரும் தம்மை ஏற்படுத்தினவருக்கு உண்மையுள்ளவராயிருக்கிறார்

 

நாம் இரட்சிக்கப்படுவதற்கு யார் நமக்குத் தேவை? கடவுளும் அவர் அனுப்பிய நமது இரட்சகராகிய யேசுவுமே.

 

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.  - யோவான் 3:16 

 

ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். - யோவான் 17:3 

 

வேத வாக்கியங்கள் நமக்காக பரலோகத்தில் இருபவர்களாக கடவுளையும் நமது இரட்சகரையும் பற்றியும் மட்டுமே போதிக்கிறது. யூதர்களுக்கு தேவன் தம்மைப் பற்றியும் தாம் உலக இரட்சிப்புக்காக அனுப்பும் மேசியாவைப் பற்றியும் வேதாகமத்தில் கொடுத்திருக்கிறார். யூதர்கள் கடவுளையும் அவர் அனுப்பும் மேசியாவையும் விசுவாசித்தனர். அப்போஸ்தலர்களும் அப்படியே போதித்தார்கள்.

 

Joh 1:45 பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான்.

 

“நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. (Php 1:2)” இருவருடைய நாமத்தினாலேயே அப்போஸ்தலர்கள் வாழ்த்துதல் தெரிவிக்கின்றனர். தேவனுடைய வல்லமை மற்றும் அவரது செயலை பரிசுத்த ஆவி என வேதம் குறிப்பிடுவதால், பரிசுத்த ஆவியை குறிப்பிடும் போது அதை அருளும் தேவனையே குறிக்கிறது.

 

வேதாகமம் முழுவதும் பரலோகத்தில் நமக்காக இருக்கும் தொழுது கொள்வதற்குரியவர்கள்  யேசுவும் பிதாவாகிய கடவுளும் என்பதையே போதிக்கிறது. மூன்றாவது ஒருவரது நாமமோ அவரை தொழுது கொள்ளும்படியோ சொல்லப்படவில்லை.

 

மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள் என்றார். - எபிரெயர் 1:1-6

 

Act 7:56  அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான்.

 

Mar 13:32  அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.

 

 

தேற்றரவு:

 

பெரும்பாலும் விக்கிரக வழிபாடு கொண்ட மதங்களில் மூன்று கடவுள்கள் இருக்கின்றன. இதே போல் கிறிஸ்தவ மதத்திலும் இந்த கோட்பாடு புகுத்தப்பட்டது. இதற்கு ஆதாரமாக யேசு சொன்ன யோவான் 16:7 வசனத்தை சொல்கிறார்கள். வேதாகமம் தேவனால் அருளப்பட்டது. அதில் வசனக்கள் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு இருக்காது. வேதாகமம் முழுவதும் ஒரே கடவுள் மற்றும் இரட்சகர் யேசு கிறிஸ்து ஆகிய இருவரை பற்றி போதித்து விட்டு இந்த ஒரு வசனத்தில் மட்டும் மூன்று கடவுள்கள் பற்றி எப்படி போதிக்கும்?

 

அப்படி முரணாக ஒரு வசனம் தோன்றினால் அதை புரிந்து கொண்ட நம் புரிதலில்தான் தவறு இருக்கிறது. யோவான் 16:7ல் யேசு கிறிஸ்து சொல்வது அவர் ஈடுபலியாக  தம்மை கொடுத்து பின்பு கடவுள் அவரை உயிர்த்தெலுப்பிய பின், அவர் பரலோகத்தில் பிதாவிடம் அந்த பலியை அர்ப்பணிக்கிறார். இதனால் அவர் நமது பாவங்களால் கடவுளுக்கும் நமக்கும் துண்டிக்கப்பட உறவை மீண்டும் கொண்டு வரும் மத்தியஸ்தராக, பரிகாரியாக (an advocate) வருகிறார். இதனால் கடவுளின் நீதியின் சினம் தணிக்கப்பட்டு அவரது பரிசுத்த ஆவி கிறிஸ்துவை பின்பற்றி ஓடிய சீஷர்களுக்கு அளிக்கப்படும் என்பதையே அவர் கூறினார்.

 

யேசுவின் பலி புண்ணியம் சாட்டப்பட்ட பின் அவர்களுக்கு கடவுளின் ஞானமும், வல்லமையும் சத்தியத்தை புரிந்து கொள்ளும் அறிவாகவும் , பல வரங்களாகவும் அளிக்கப்பட்டது. இது கிறிஸ்து பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பின் பெந்தெகொஸ்தே நாளில் அருளப்பட்டது.

 

இதையே யேசு கிறிஸ்து தான் போனால் சீஷர்களுக்கு உதவியாக தேற்றும் பலன் வரும் என்று குறிப்பிட்டார். நான் போனால் அவை உங்களுக்கு வரும், நான் போகாதிருந்தால் அவைகள் உங்களிடத்தில் வராது, நான் போவேனேயாகில் அவற்றை உங்களிடத்திற்கு அனுப்புவேன். அவை பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்தும்.

 

 

தமிழில் தேற்றரவாளன் என்றும் ஆங்கிலத்தில் Comforter என்றும் மொழிபெயர்க்கபட்டிருக்கும் இந்த வார்த்தையின் கிரேக்க சொல் παράκλητος = paraklēto . இதன் அர்த்தம் = counsel for defense, legal assistant, an advocate, a helper, aider, assistant ஆகும். இந்த தேற்றரவாளன் என்ற ஒரு வார்த்தை மூன்று கடவுள் என்ற கோட்பாட்டை உருவாக்க ஆதாரமாக இருந்தது. இஸ்லாமியர்களும் இந்த தேற்றரவாளன் என்ற ஒரு  வார்த்தையை வைத்து வேதாகமம் முகமது நபியைப் பற்றி கூறியிருக்கிறது என்று கோருகிறார்கள்.

 

ஆனால் இவை எல்லாம் தவறான கோட்பாடுகள் ஏனென்றால் வேதாகமம் இன்னொருவரைப் பற்றி எங்கும் குறிப்பிடவில்லை. நம்முடைய ஒரே கடவுள் தம்முடைய மகிமையை வேறு யாருக்கும் கொடார். நமது இரட்சகரும் நம்மை மீட்டவருமான யேசு கிறிஸ்து என்ற ஒரே மத்தியஸ்தரே நமக்கு உண்டு. வேறு ஒருவரைப் பற்றிய போதனைகள் கண்டிப்பாக சாத்தானின் போதனைகளே.

 

அப்போஸ்தலர்களும் இயேசு பரிசுத்த ஆவியினாலான உதவியை பற்றி கூறியதும், அவர் யார் அவர் நாமம் என்ன? என்று கேட்கவில்லை, ஏனென்றால் இயேசு அவர்களுக்கு கடவுளிடமிருந்து வரும் உதவியைப் பற்றி பேசுகிறார் என்பதை அவர்கள் சரியாக புரிந்து கொண்டனர். அதை ஒரு புதிய நபராக கருதவில்லை. கடவுளிடமிருந்து வரப்போகும் வல்லமையான வழிநடத்துதல் என புரிந்து கொண்டனர்.  

 

தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே -1 திமோத்தி 2:5

 

கடவுள் கிறிஸ்து யேசுவின் மூலம் மட்டுமே சத்தியங்களையும் நமது இரட்சிப்புக்கான காரியங்களையும் கொடுக்கிறார். “குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்”, பரிசுத்த ஆவியானவர் என்ற மூன்றாவது நபரை விசுவாசிக்க வேதம் சொல்லவில்லை. யேசு கிறிஸ்து ஒருவரே, கடவுளிடம் நம்மைச் சேர்க்கும் வழியாகவும் , சத்தியமாகவும் , ஜீவனாகவும் இருக்கிறார் என்று வேதம் சொல்கிறது.

 

Rev 1:1 சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம்.

 

யேசு கடவுளின் மகன் என ஏற்றுக்கொள்பவன் எவனோ அவனுள் கடவுள் நிலைத்திருக்கிறார்; அவனும் கடவுளுக்குள் நிலைத்திருக்கிறான். 1 யோவான் 4:15 .

 

1Co 15:27  சகலத்தையும் அவருடைய பாதத்திற்குக் கீழ்ப்படுத்தினாரே; ஆகிலும் சகலமும் அவருக்குக் கீழ்ப்படுத்தப்பட்டதென்று சொல்லியிருக்கும்போது, சகலத்தையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் கீழ்ப்படுத்தப்படவில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது.

 

Joh 14:6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

 

 

இப்படி கடவுளைப்பற்றியும் யேசுவைப் பற்றியும் வேதாகமம் தெளிவாக கூறுவதை புரிந்து கொண்டால்தான் கடவுள் நம் மேல் வைத்திருக்கும் அன்பை புரிந்து கொள்ள முடியும். தான் அன்பு செலுத்திய தன்னால் நேரடியாக படைக்கப்பட்ட தனது ஒரே குமாரனை நமக்காக பலியாக அனுப்பினாரே! மேலும் யேசு கிறிஸ்து நமக்காக மனிதனாக தம்மை தாழ்த்தி மரணபரியந்தம் கடவுளுக்கு கீழ்ப்படிந்தாரே, அதனாலேயே நமது மீட்பும் சாத்தியமாயிற்று.

 

இந்த அருமையான உண்மைகளை உணராமல் இருக்க கடவுளின் குணாதிசயத்தை கொச்சைப் படுத்தும் சாத்தானின் தவறான போதனைகளையே இன்று கிறிஸ்தவ மண்டலம் போதிக்கிறது. இது போல் பல தவறான கோட்பாடுகள் கிறிஸ்தவ அமைப்பில் இருக்கிறது ( உதா: நரகம், மரணம், ஆத்துமா , நியாயத்தீர்ப்பு ) . உலகம் முழுவது கிறிஸ்தவர்கள் இந்த குழப்பத்தை கொடுக்கும் மதுவை குடித்து சிந்திக்கும் திறனை இழந்து இருக்கிறார்கள்.

 

அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்களே; Rev 17:

 

கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு பின் மணவாட்டி சபையை அவரோடு சேர்ந்து பூமியை ஆளுவார்கள். ஆனால் கிறிஸ்தவ மண்டலம் மணவாளனுக்கு காத்திராமல் பூமியின் ராஜாக்களோடு சேர்ந்து ஆளுகை செய்ததால் வேதாகமம் இதை வேசித்தனம் என்று அழைக்கிறது. கிபி 500 க்கு பின்பு கிபி 1800  வரை கிறிஸ்தவ மண்டலம் அரசாங்கங்களுடன் சேர்ந்து உலகில் அதிகாரத்தில் இருந்தன.இந்த அதிகாரங்களை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து உலக யுத்தங்களுடன் முழுமையாக ஆளும் அதிகாரத்தை அரசாங்கங்களிடம் இழந்து விட்டது.

 

யூதர்கள் தங்களை கடவுளின் தெரிந்தெடுக்கப்பட்ட ஜனமாக பெருமைகொண்டிருந்தும் வேதாகமம் போதிக்கும் சத்தியங்களை உணரவில்லை. தங்களது சொந்த கோட்பாடுகளை விரும்பி அதை போதித்து கொண்டிருந்தார்கள் (சதுசேயர், பரிசேயர்). அதனால் அவர்களது வேதாகமம் சொல்லும் கிறிஸ்து வந்தபோது அவர்களால் அவரை கண்டு கொள்ள முடியவில்லை. அவர்கள் கடவுள் மேல் வைராக்கியம், பக்தி கொண்டிருந்தும் கிறிஸ்துவின் வருகையில் அவரை சத்திக்கும் காலத்தில் அவரை உணராது போயினர். ஆகவே அவர்கள் கடவுளின் அனுக்கிரகத்தை இழந்து தள்ளிவிடப்பட்டனர். யூதர்கள் புறக்கணிக்கப்பட்டு சபிக்கப்பட்டு அவர்களது தேசம் அழிக்கப்பட்டது.

 

அதே போல் மாம்ச இஸ்ரயேல் அடையாளப்படுத்தும் கிறிஸ்தவ மண்டலம், இப்பொழுது கிறிஸ்துவின் இரண்டாம் வருகை காலத்தில் அவரை சந்திக்கும் காலத்தில் அவரை உணராது முழுவதும் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. வேதாகமம் சொல்லும் எளிமையான சத்தியங்களை ஏற்றுக் கொள்ளாமல், சபைகள், பாஸ்டர்கள் போதிக்கும் பல தவறான உபதேசங்களை கேட்டு குழப்பத்தில், சந்திக்கும் காலத்தில் கிறிஸ்துவை அறியாது போனார்கள்.

 

பாபிலோன் என்றால் குழப்பம் என்று அர்த்தம். Thayer Definition: Babylon = “confusion”

 

Rev 18:2 அவன் பலத்த சத்தமிட்டு: மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது! அது பேய்களுடைய குடியிருப்பும், சகலவித அசுத்த ஆவிகளுடைய காவல்வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகளுடைய கூடுமாயிற்று.

 

என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.

 

நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது.1யோவான் 1:3

YYYYYYY