Chart Home

இஸ்ரயேல் வரலாறு விளக்கப் படம்

 

கி.மு 1813ல் யாக்கோபின் மரணத்திலிருந்து இஸ்ரயேல் ஒரு ஜாதியாக கடவுளால் அழைக்கப்பட்டது.

கிமு 1615ல் எகிப்திலிருந்து ஒரு தேசமாக இஸ்ரயேல் கடவுளால் விடுவிக்கப்பட்டது.

கிமு 1575ல் கானான் தேசத்துக்குள் நுழைந்தது முதல் 450  வருடகாலம் கடவுள் நியாயாதிபதிகள் மூலம் இஸ்ரயேலரை வழிநடத்தி வந்தார்.

கிமு 1119 முதல் 513 வருடங்கள் சவுல் முதல் சிதேக்கியா இராஜா வரை இஸ்ரயேல் ராஜ்ஜியம் இருந்து வந்தது.

Israel1

 

கிமு 606ல் பாபிலோன் பேரரசு இஸ்ரயேல் ராஜ்யத்தை அழித்து யூதர்களை பாபிலோனுக்கு சிறைப் பிடித்துப் போனது.

தேசம் 70 வருடம் பாழாய்க் கிடந்தது பின்பு கிமு 536ல் மேதியா ராஜ்யத்தின் தரியு அரசனால் யூதர்கள் தங்கள் சுய தேசம் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

 

பின்பு கிரேக்க ராஜ்ஜியம் யூதர்களின் தேசத்தை ஆண்டு வந்தது.

பின்பு ரோமர்கள் ஆண்ட காலத்தில் மேசியா யேசு வருகை.

israel2

 

யூதர்கள் மேசியாவை அறியாமல், அவர்களது மேசியாவை ஏற்றுக் கொள்ளவில்லை.

இஸ்ரயேல் புறக்கணிக்கப்பட்டு , தேவனுடைய தயவு நீக்கப்பட்டு இஸ்ரயேல் சபிக்கப்பட்டு ரோம ராஜ்யத்தால் அழிக்கப் படுகிறது.

அத்திமரம் சபிக்கப்பட்டு பட்டுப் போகிறது.

 

இஸ்ரயேலுக்கான எழுகால தண்டனை முடிந்ததும் 1914ல் இஸ்ரயேலுக்கான தேவ தயவு காலம் மீண்டும் வந்துவிட்டது.

 

அத்திமரம் துளிர் விடுதல்:

இஸ்ரயேல் கூட்டிச் சேர்க்கப் பட்டு 1948ல் இஸ்ரயேல் தேசம் மீண்டும் உலகில் வந்துவிட்டது.

இஸ்ரயேல் மக்களுக்கான இஸ்ரயேல் அரசு உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டு மேலும் மேலும் செழித்து வளர்ந்து நிற்கிறது.

israel

ஆதலால் நான் உங்களை ஜனங்களிடத்திலிருந்து சேர்த்து, நீங்கள் சிதறடிக்கப்பட்ட தேசங்களிலிருந்து உங்களைக் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்தை

உங்களுக்குக் கொடுப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்லு. - Eze 11:17 

 

இதோ, என் சினத்திலும், என் கோபத்திலும், என் மகா உக்கிரத்திலும், நான் அவர்களைத் துரத்தின எல்லாத் தேசங்களிலுமிருந்து அவர்களைச்

சேர்த்துக்கொண்டு, அவர்களை இந்த ஸ்தலத்துக்குத் திரும்பிவரவும் இதிலே சுகமாய்த் தங்கியிருக்கவும் பண்ணுவேன். - Jer 32:37 

 

 

 

Chart Home