கடவுள் ஏன் தீமையை அனுமதிக்கிறார்

 

மனிதனுக்கான கடவுளின் வெளிப்பாடு

 

ஒரே பைபிள், ஏன் மார்க்க பேதங்கள்?

 

கிறிஸ்தவர்களுக்கு ஒரு எச்சரிக்கை

 

நரகம் என்றால் என்ன?

 

யார் கடவுள்? யார் நமது இரட்சகர்?

 

இஸ்ரயேல் தேசம்-ஒரு அற்புதம்

 

DNA MENTIONED IN THE BIBLE 

 

 

Home

 

அத்திமரம்

 

இயேசு வழியருகே தனித்து நின்ற ஒரு அத்திமரத்தை கண்டு, அதன் அருகே சென்று, அதில் இலைகளைத் தவிர கனிகளைக் காணாததால் இனி ஒருக்காலமும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக் கடவது என்றார். அந்த அத்திமரம் உடனே பட்டுப் போயிற்று. மத் 21:19 .

 

இயேசு கிறிஸ்து யூதர்களின் அழிவை சித்திகரிக்கவே இந்த அத்திமரத்தை உபயோகப்படுத்தினார்.. இது லூக் 13:6-9ல் கூறப்பட்டிருக்கும் உவமானத்தின் மூலம் மேலும் தெளிவு பெறுகிறது. “இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடி வருகிறேன்; ஒன்றையுங் காணவில்லை,...”.  யேசு கிறிஸ்து தமது ஊழியத்தின் மூன்று வருடங்களிளும் தமது சொந்த வீட்டாரான யூதர்களிடம் மட்டுமே (மத் 5:6 ) ஊழியம் செய்து கனியைத் தேடினதை லூக்கா 13:6-9 வசனங்களில் கூறியிருக்கும் உவமானம் விளக்குகிறது.

 

ஒரு சிலர் அவரது ஊழியக் காலம் 3 1/2 வருடங்களாயிற்றே அப்படியிருக்க 3 வருஷங்களை மட்டும் கணக்கில் எடுப்பது எப்படி? ஆகவே அப்படி ஒப்பிட்டு சொல்ல முடியாது என நினைக்கின்றனர். அவரது ஊழிய நாட்கள் அவரது ஞானஸ்நானத்தில் இருந்து சிலுவை மரணம் வரை 3 1/2 வருடங்களாய் இருந்தது என்பது மெய்தான். ஆனால் அவரது விசேஷமான ஊழியம் பஸ்கா பண்டிகை வரும்வரை அதாவது முதல் 6 மாதங்களில் நடந்ததாகத் தெரியவில்லை. இதனை அவர் செய்த அற்புதங்களின் கால அட்டவணையைப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம். இதிலிருந்து அவரது தீவிரமான ஊழியம் பஸ்காவிற்குப் பின்  3 வருடங்கள்தான் என்று கருத்தில் கொள்ளலாம்.

 

யேசு யெருசலேமைப் பார்த்து அதனைச் சந்திக்கும் காலத்தை அறியாமற் போனதால் அதற்கு நேரிடப் போகும் அழிவை உணர்ந்து கண்ணீர் விட்டார். (லூக்கா 19:41,42) . இதிலிருந்து அவரது மூன்று வருட ஊழியத்திலும் அத்திமரமாகிய இஸ்ரயேல் மக்களிடம் அவர் கனியைத் தேடிவந்து கனியைக் காணாது, ஏமாற்றத்தால் துக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

திராட்சைத் தோட்டக்காரன் “ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும்” என்று கூறினான். இதனால் இஸ்ரயேலுக்கு யேசுவின் ஊழிய நாட்கள் அவரது சிலுவை மரணத்திற்குப் பின்னும் ஒரு வருஷம் நீட்டப்பட்டு இருக்கலாமோ என்று என்னலாம். ஆனால் அவ்விதம் அத்திமரமாகிய இஸ்ரயேல் தேசத்திற்கு ஒரு வருடம் கூட்டிக் கொடுக்கப் பட்டதாக தெரியவில்லை. ஏனெனில் அதே அதிகாரத்தின் கடைசி பாகத்தில் யெருசலேம் பாழாய்க் கிடக்க விடப்பட்டதாகத் தெரிகிறது. (லூக்கா 13:35 ). மேலும் மத்தேயு 21:19 ல் கனியைத் தேடி வந்து, கனியைக் காணாததால் சபிக்கப்பட்ட அத்திமரம், உடனே பட்டுப் போயிற்று என்று அறிகிறோம் அல்லவா?

 

சிலர் அத்திமரம் யூதர்களைத்தான் குறிக்கிறதா என்று நினைக்கலாம். சிலர் மாற்கு 11:12 ல் “அத்திப் பழக்காலமாயிராதபடியால்” என்று கூறியிருக்கிறதே, பின்பு ஏன் யேசு அத்தி மரத்தை சபிக்க வேண்டும்? அப்படிப்பட்ட நிலையிலுள்ள யூதர்கள் கனி கொடுக்கும் காலம் அது அல்ல என தெரிகிறதே என நினைக்கலாம். அத்திமரத்தை யூதர்களுக்கு அடையாளமாக ஒப்பிட்டு கூறமுடியுமா என நினைக்கலாம். இதனை சற்று ஆழ்ந்து கவனித்தால் இந்த ஆட்சேபனை நீங்கி கருத்தமைதி கிடைக்கும்.

அத்திப்பழக் காலமாயிராதபடியால் என வேதாகமம் நமக்கு தெரிவிப்பதன் மூலம், அது அவர்கள் கனி கொடுக்கும் காலம் அல்ல, சுவிஷேச யுகம் முடிந்த பின்பு பரிசுத்தவான்கள் தெரிந்து கொள்ளப்பட்ட பின்பே அவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு கனி கொடுப்பார்கள் என்று அறிகிறோம் (ரோமர் 11:25-29, 12 ). ஆகவே அப்போது அத்திமரம் கனி கொடுக்காத யூதர்களை பொருத்தமாக குறிக்கிறது அல்லவா? ஆனால் ஏன் யூதர்கள் சபிக்கப்படவேண்டும்.? கடவுள் இஸ்ரயேலை பிரத்யேகமாக தெரிந்தெடுத்தார். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தேவ தயவு மற்றும் அனுக்கிரக காலத்தில் அவர்கள் கடவுளை விட்டு விலகினதாலும், அவர்களுக்காக வந்த மேசியாவை அவர்கள் உணராதும், ஏற்றுக் கொள்ளாமலும் போனதால் இஸ்ரயேல் மக்கள் புறக்கணிக்கப்பட்டனர்.  இஸ்ரயேல் ஜனங்கள் ஒரு அடையாளமான ஜனங்களே (Typical People ).

 

மேலும் இஸ்ரயேலுக்கு கொடுக்கப்பட்ட சாபம் நிரந்தரமானதல்ல, இஸ்ரயேலுக்கு கடினமனதுண்டான நிலை, குருட்டுத்தனம் தற்காலிகமானதே, குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே என்று பரி. பவுல் கூறுகிறார். (ரோமர் 11:25-27 ). யேசுவும் “கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுங்காலம் வருமளவும் என்னைக் காணாதிருப்பீர்கள்” (லூக்13:35 ) என்று கூறுவதிலிருந்து தெரிகிறது.

 

Rom 11:25  மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன்; அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும்.

இந்தப்பிரகாரம் இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள். மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து, அவபக்தியை யாக்கோபை விட்டு விலக்குவார் என்றும்;

27  நான் அவர்களுடைய பாவங்களை நீக்கும்போது, இதுவே நான் அவர்களுடனே செய்யும் உடன்படிக்கை என்றும் எழுதியிருக்கிறது.

28  சுவிசேஷத்தைக்குறித்து அவர்கள் உங்கள்நிமித்தம் பகைஞராயிருக்கிறார்கள்; தெரிந்துகொள்ளுதலைக் குறித்து அவர்கள் பிதாக்களினிமித்தம் அன்புகூரப்பட்டவர்களாயிருக்கிறார்கள்.

29  தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே.

 

Rom 11:12  அவர்களுடைய தவறு உலகத்திற்கு ஐசுவரியமும், அவர்களுடைய குறைவு புறஜாதிகளுக்கு ஐசுவரியமுமாயிருக்க, அவர்களுடைய நிறைவு எவ்வளவு அதிகமாய் அப்படியிருக்கும்.

 

 

“இனி ஒருக்காலும்“ என்று கூறியிருக்கும்போது இது தற்காலிகமான சாபமே என்று எவ்விதம் கூற முடியும் என கேள்வி எழுகிறது. ‘இனி ஒருக்காலும்” என்பதை பல வேதாகம மொழி பெயர்ப்புகள் கூறினாலும் கிரேக்க சொல்லார்த்த ஆங்கில  மொழிபெயர்ப்பு  (Emphatic Diaglott ) “May no fruit grow on thee to the age‘யுகமுடியுமளவும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக் கடவது’ என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது.

 

 

Matt 21

 

இஸ்ரயேல் சபிக்கப்பட்ட, பாழாக்கிவிடப்பட்ட நிலை தற்காலிகமானதே என Emphatic Diaglott  மொழிபெயர்ப்பில் பார்க்கிறோம். அதையே கிறிஸ்துவும் சொல்ல்கிறார். அதே போல் அவர்களது தண்டனைக் காலம் முடிவு பெரும் போது அவர்கள் மீண்டும் கடவுளின் ஆசீர்வாதத்தைப் பெறுவார்கள் என வேதாகமம் சொல்கிறது.

 

இஸ்ரேலை கடவுள் தனக்காக தெரிந்து கொண்டது ஒரு அடையாளமாக, அவர்களை அத்தி மரமாக வேதாகமம் கூறுவதை பாருங்கள்.

ஓசியா 9:10 வனாந்தரத்தில் திராட்சக்குலைகளைக் கண்டுபிடிப்பதுபோல இஸ்ரவேலைக் கண்டுபிடித்தேன்; அத்திமரத்தில் முதல் தரம் பழுத்த கனிகளைப்போல உங்கள் பிதாக்களைக் கண்டுபிடித்தேன்;

 

அவர்கள் கீழ்ப்படியாதபோது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை எழு காலத் தண்டனை.

 

Lev 26:18  இவ்விதமாய் நான் உங்களுக்குச் செய்தும், இன்னும் நீங்கள் எனக்குச் செவிகொடாதிருந்தால், உங்கள் பாவங்களினிமித்தம் பின்னும் ஏழத்தனையாக உங்களைத் தண்டித்து,

Lev 26:33  ஜாதிகளுக்குள்ளே உங்களைச் சிதற அடித்து, உங்கள் பின்னாகப் பட்டயத்தை உருவுவேன்; உங்கள் தேசம் பாழும், உங்கள் பட்டணங்கள் வனாந்தரமுமாகும்.

Eze 11:17  ஆதலால் நான் உங்களை ஜனங்களிடத்திலிருந்து சேர்த்து, நீங்கள் சிதறடிக்கப்பட்ட தேசங்களிலிருந்து உங்களைக் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்தை உங்களுக்குக் கொடுப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்லு.

Luk 21:24  ... புறஜாதியாரின் காலம் நிறைவேறும்வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும்.

Rom 11:25  புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும்.

Jer 30:3  இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலும் யூதாவுமாகிய என் ஜனத்தினுடைய சிறையிருப்பைத் திருப்பி, நான் அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவேன்; அதை அவர்கள் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Amo 9:12 - 15  அந்நாளிலே விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுப்பித்து, அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, பூர்வநாட்களில் இருந்ததுபோல அதை ஸ்தாபிப்பேன் என்று இதைச் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார்.

 

15  அவர்களை அவர்கள் தேசத்திலே நாட்டுவேன்; நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனிப் பிடுங்கப்படுவதில்லையென்று உன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

 

இந்த வசங்களில் இஸ்ரயேலை தேவன் மீண்டும் சேர்த்துளக்கொள்வார் அவர்களும் அவரை ஏற்றுக் கொள்வார்கள் என்று அறிகிறோம்.   இதற்குப் பின் நான் திரும்பி வந்து என்று கூறுவது கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் அவர் இஸ்ரயேலை கூட்டிச் சேர்ப்பதைக் குறிக்கிறது.

ஆகவே Emphatic Diaglottன் ‘யுகமுடியுமளவும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக் கடவது’ என்ற மொழிபெயர்ப்பு சரியானதே என தெரிகிறது. ஆகவே சுவிஷேச யுக முடிவு மட்டும் இஸ்ரயேல் தேசம் கனி கொடுக்காது , தேசம் பாழாக்கி விடப்பட்டிருக்கும் என பார்க்கிறோம். இதை அப்போஸ்தலர் 15:14,17 வசனங்கள் போதிக்கின்றன.

 

தம்முடைய நாமத்திற்கென்று ஒரு ஜனத்தை – அதாவது கிறிஸ்து என்னும் நாமத்திற்காக – மணவாட்டி சபையை புறஜாதிகளிடமிருந்து தெரிந்து கொண்ட பின்,- அதற்குப் பின் யேசு திரும்பி வந்து விழுந்து போன தாவீதின் கூடாரத்தை (இஸ்ரயேல் தேசத்தை ) எடுத்து நிறுத்துவதை வாசிக்கிறோம்.

சுவிஷேச யுகத்தில் புறஜாதியிடமிருந்து (முழு உலகத்திலுமிருந்து) மணவாட்டி சபையை (பரிசுத்தவான்கள்) தெரிந்து கொண்ட பின் தேவ அனுக்கிரகம் இஸ்ரயேலுக்கு மீண்டும் திரும்புவதை அறிகிறோம். மேலும் யேசு இதையே தனது இரண்டாம் வருகைக்கு அடையாளமாக கூறுகிறார்.

 

மத்தேயு 24:32

Mat 24:32  அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்.

Mat 24:33  அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்.

இந்த உவமையிலிருந்து சபிக்கப்பட்டு போன அத்திமரம் மீண்டும் துளிர் விடும் என்று தெள்ளத் தெளிவாக புரிகிறது.

 

அவைகள் துளிர்க்கிறதை நீங்கள் காணும்போது வசந்தகாலம் சமீபமாயிற்றென்று அறிகிறீர்கள்.

31            அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள்லூக்கா 21:30 ,31

 

இவைகள் கிறிஸ்துவின் முதல் வருகையில் அத்திமரத்திற்கு அடையாளமான ரீதியில் இட்ட சாபம் இஸ்ரயேலுக்கு கடினமந்துண்டாகி அவர்கள் புறக்கணிக்கப்படுதலுக்கும், பின்பு இரண்டாம் வருகையில் அவர்கள் மறுபடியும் துளிர்த்து தழைத்து கனி கொடுப்பதற்கு உறுதியான வாக்குத்தத்தமாயிருகிறது.

 

யூதர்கள் மத்தியில் நிறைவேறி வரும் சந்தேகமற்ற அடையாளங்களின் மூலம் அதாவது அத்திமரம் துளிர்ப்பது மூலம் அவர்களது வாசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிகிறோம். யூதர்களின் பழைய நிலைக்கு திரும்புதல் சமீபமாயிற்று என்பது மட்டுமல்லாது, தேவ ராஜ்யம் சமீபத்திருக்கிறது என்றும் அறிகிறோம். மத்தேயு 24;33 ; லூக்கா 21:29-31

Luk 21:29  அன்றியும் அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்: அத்திமரத்தையும் மற்றெல்லா மரங்களையும் பாருங்கள். :30  அவைகள் துளிர்க்கிறதை நீங்கள் காணும்போது வசந்தகாலம் சமீபமாயிற்றென்று அறிகிறீர்கள். :31  அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள்.

 

உன்னதப்பாட்டு 2:10  என் நேசர் என்னோடே பேசி: என் பிரியமே! என் ரூபவதியே! எழுந்துவா. :11  இதோ, மாரிகாலம் சென்றது, மழைபெய்து ஒழிந்தது.  13  அத்திமரம் காய்காய்த்தது;

 

இஸ்ரயேல் திரும்பக் கூட்டப்படுதல் மகா உபத்திரவத்தின் காலத்தின் மத்தியில் நடந்தேறுகிறதை ( மீகா 7:14-20 ) எழு வாதைகள் ஊற்றப்படுவதில் அடையாளப்படுத்தப் பட்டிருக்கிறது. இந்த வாதைகளில் இருந்து நாம் காக்கப்படுதலுக்குரிய வாக்குத்தத்தங்கள் இன்றைய பிரதிஷ்டைக்காரர்களாகிய நம்மிடம் இருப்பதால், நாம் கிறிஸ்து ராஜாவுக்கு கீழ் பெறப்போகிற மீட்புக்காக காத்திருக்கிறோம்.

 

தீர்க்கதரிசன நிறைவேறுதலின் கால அடையாளங்களை நம்மால் இப்பொழுது நிச்சயமாக அறிய முடிகிறது. சத்தியம் இவ்வாறு நம்மை உலகத்திலிருந்து பிரித்தெடுத்து, சுத்திகரித்து, பரிசுத்தமாக்குவதாக. நமது பாதையில் இப்போது பிரகாசித்துக் கொண்டிருக்கிற வெளிச்சத்துக்காக நாம் பரலோக தேவனுக்கு நன்றிக் கடனாக துதிகளை ஏறெடுப்போமாக.

 

 

இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்து பார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள். லூக்கா 21:28

 

YYYYYYY

 

 

இஸ்ரயேல் வரலாறு – விளக்கப் படம்

 

 

 

 

 

 

 

 

Fig tree