Passover

பஸ்கா 2023

நமது கர்த்தராகிய கிறிஸ்து “யெஷுவாவின் ஞாபகார்த்த நாள்பஸ்கா – 2023

நமது கர்த்தராகிய கிறிஸ்து “யெஷுவா”வின் ஞாபகார்த்த நாள் இந்த வருடம் 2023 வரும்   ஏப்ரல் 05  புதன் கிழமை. பஸ்கா நாள் (ஆபீப் மாதம் 14 தேதி) ஏப்ரல் 05ம் தேதி  சூரியன் அஸ்தமனத்திற்குப் பின்பு ஆரம்பிக்கிறது.  ஞாபகார்த்த ஆராதனை பிற்பகல் 4:00 மணிக்கு ஆரம்பிக்கிறது.

 

(2023 ஏப்ரல் 05 சூரிய அஸ்தமன நேரம் 18:21)

பிறை பார்த்தல் அறிக்கை:

இஸ்ரேலில் இருந்து வந்த அறிக்கைகளின்படி இன்று மார்ச் 22ம் தேதி உலகின் மற்ற பகுதிகளில் பிறை தென்பட்டாலும் இஸ்ரயேலின் தென்படாததால், அடுத்த நாளான 23ம் தேதி மாதத்தின் முதல் தேதியாக கருதப்படுகிறது. ஆகவே மார்ச் 23ம் தேதி (வியாழக் கிழமை) அந்திநேரத்துக்கு பின்பு புதிய வருடத்தின் முதல் நாள் ஆரம்பிக்கிறது (ஆபீப் 1ம் நாள் – மார்ச் 23ம் தேதி அந்திநேரத்தில் இருந்து மார்ச் 24ம் தேதி அந்திநேரம் வரை.)

ஆகவே ஆபீப் 14ம் நாள், ஏப்ரல் 05ம் தேதி (சனிக்கிழமை) அந்தி நேரத்துக்கு பின்பு ஆரம்பிக்கிறது.

பார்லி பசுங்கதிர் அறிக்கை - Feb 2023

விளைந்த பார்லே கதிர்கள் இஸ்ரேலில் காணப்படுகிறது என்ற அறிக்கை வந்திருக்கிறது. ஆகவே வரும் முதல் பிறை புதிய வருடத்தின் முதல் நாள் (ஆபீப் 1ம் நாள். ) என அறிவிக்கப்படும். ஆகவே புதிய வருடம் மார்ச் மாதம் 23ம் தேதி ஆரம்பிக்கிறது. (ஆபிப் மாதம் முதல் நாள், மார்ச் 23ம் தேதி அஸ்தமனத்தில் ஆரம்பித்து   24ம் தேதி சூரியன் அஸ்தமனம் வரைக்குமான நாள்.)

1Corinthians 11:25,26

அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து:

இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறதுநீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.

ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்துஇந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.