பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.

 

பூமியில் கடவுளுடைய அரசாட்சி

 

பூமியில் எல்லா ஜனங்களுக்கும் கடவுள் உயிர்த்தெழுதலையும், நோய்கள் மரணமற்ற நித்திய வாழ்க்கையை கொடுக்க விருப்பமுள்ளவராயிருக்கிறார். அதுவே அவருடைய பூமிக்குரிய ஏற்பாடாய் இருக்கிறது.

பரலோகத்திலுள்ள தேவதூதர்கள் சாகிறதில்லை என்றும், மனிதனும் சாக வேண்டியவனாக கடவுள் படைக்கவில்லை என்றும், மனிதன் பாவம் செய்யாது கீழ்ப்படிந்து இருந்தால் சாகாமல் இருந்திருப்பான் என்றும் தெரியுமா?  ஆதி 3: 22-24

கடவுளின் படைப்புகளாகிய வானலோகங்களில் இருக்கிற நல்ல தேவதூதர்கள் கடவுளுக்கு கீழ்ப்படிந்து இருப்பது போல தன்னிடம் உயிரை பெற்ற மனிதனும் கீழ்ப்படிய தேவன் எதிர்பார்க்க உரிமை இருக்கிறது.

ஆனால் மனிதன் பாவம் செய்தால் நீதியாகவே இருக்கும் கடவுள் தொடர்ந்து உயிராதாரத்தை கொடுத்துக் கொண்டு இருக்க முடியாது. ஆகவே மரணம் தீர்ப்பாக வருகிறது. ஆனால் உலகில் அநேகர் கூறுவது போல மனிதனுக்கு தண்டனை அக்கினி எரியும் நரகத்தில் முடிவில்லாது சித்ரவதை செய்யப்படுவது அல்ல. அப்படி முடிவே இல்லாமல் நோக்கமில்லாது வாதிப்பது அன்பாகவே இருக்கும் கடவுளின் குணமும் அல்ல.

அவரது அளவற்ற அன்பே, அவரை அழிந்து கொண்டிருக்கும் மனிதர்களை காப்பாற்ற அவரது எல்லையில்லா ஞானத்தின் உதவியுடன் அற்புதமான நீதியான ஒரு திட்டத்தை தீட்டியது.

அவரது முதல் படைப்பான அவரது குமாரன் கிறிஸ்து மூலம் இத்திட்டத்தை கடவுள் தமது எல்லையில்லா வல்லமையின் மூலம் நிறைவேற்றி வருகிறார். கிறிஸ்து தனது உயிரையே விலையாக கொடுத்து உலகின் எல்லாரது பாவங்களையும் நீக்கி, நம்மையெல்லாம் மீண்டும் உயிரோடு எழுப்புவார்.

மனிதர்களுக்கான கடவுளின் செய்தி, உலகின் பழமையான புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேத புத்தகத்தில்தான் மேற்கூறிய மகிழ்ச்சியான செய்தி தீர்க்கதரிசனமாக கொடுக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துவின் மூலம் மனுக்குலம் முழுவதும் இரட்சிக்கப் படும் என்பதாலேயே இயேசு பிறக்கும் போது தூதர்கள் , “இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். “ என்று மனிதர்களுக்கு சந்தோஷ செய்தியை அறிவித்தனர்.

பூமியில் அவருடைய அரசாங்கம் அமைக்கப்படும், இதுவரை இறந்து போன மனுக்குலம் முழுவதும் திரும்ப ஒரு வாய்ப்புக்காக உயிரோடு இந்த பூமியில் கொண்டு வரப்படுவார்கள். தீமையும் மரணமும் முழுவதுமாக ஒழிக்கப்படும். உலக மக்களுக்கெல்லாம் சந்தோசத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கும் மகிழ்ச்சியான செய்தி இது.

“நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று இவர்கள் தேவனிடத்தில் நம்பிக்கை கொண்டிருக்கிறது போல, நானும் நம்பிக்கைகொண்டிருக்கிறேன்”. அப்போஸ்தலர் 24:15 

 

நமது இரட்சகர் கிறிஸ்துவும் இந்த ராஜ்ஜியம் பூமியில் சீக்கிரம் வர எதிர்பார்க்கவும், ஜெபிக்கவும் கற்பித்திருக்கிறார்.

“உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப்

பூமியிலேயும் செய்யப்படுவதாக;

 

 

கடவுளின் நீதியான தீமைகள் அற்ற ஆளுகை வானலோகங்களில் நடப்பது போல, வரும் காலத்தில் பூமியிலும் அவருடைய ஆளுகை நடக்கும் என்பது உறுதியாக வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ளது.

சகல ஜனங்களின் விருப்பமானது (தேவனுடைய அரசாங்கம்) வரும். ஆகாய் 2:7

கடவுள் இயேசு கிறிஸ்துவை தனது பிரதிநிதியாகவும், சர்வ அதிகாரமுடையவராகவும் ஏற்படுத்துவார். (மத்தேயு 28:18). உலகம் முழுவதும் மக்கள் மிக சந்தோசமாக இந்த நீதியான ஆளுகையை ஏற்றுக் கொண்டு  புதிய சமுதாய அமைப்பிற்குள் ஒடி வருவார்கள். புது உலக சமுதாயம் , தீமைகள் அற்ற, அநியாயம் செய்ய முடியாத உலக அமைப்பு தேவனுடைய ஆளுகையின் கீழ் ஒழுங்கு படுத்தப்பட்டு கிறிஸ்துவினால் ஆளப்படும். பின்பு நியாயத்தீர்ப்பு அளிக்கப்படும் , அதன் பின்பு கிறிஸ்து இவ்வுலகத்தை கடவுளிடம் ஒப்படைப்பார்.  (1 கொரிந்தியர் 15:24). இது நித்தியமாய் இருக்கும் ராஜ்ஜியம். யாவே தேவன் அதன் ராஜாவாய் இருப்பார்.

சங்கீதம் 22:28 ; சகரியா 14: 9

 

உலகத்துக்கான தேவனுடைய ஏற்பாடுகளும் அதற்குறிய காலங்களும் ( Charts )

Divine plan