2017ம் ஆண்டிற்கான குறிக்கோள் வாக்கியம்

 

 இந்த ஊழியம் குற்றப்படாதபடிக்கு, நாங்கள் யாதொன்றிலும் இடறல் உண்டாக்காமல், எவ்விதத்தினாலேயும், எங்களைத் தேவஊழியக்காரராக விளங்கப்பண்ணுகிறோம்.     - 2 கொரிந்தியர் 6: 3,4,8

"In all things proving ourselves as ministers of God, in much patience, in affliction, in necessities, in distresses, . . . by honor and dishonor, by evil report and good report, as deceivers and yet true."—2 Cor. 6: 4, 8.

கிறிஸ்தவனுடைய வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று நாம் எந்தளவு மெனெக்கெட்டு சிந்திக்கிறோமோ இல்லையோ, பரிசுத்த பவுல் இங்கு மிக தெளிவாக விளக்குகிறார்.

எந்தவிதத்திலும் தேவனுடைய ஊழியம் குறை சொல்லப்படாதபடிக்கு நம்முடைய நடத்தைகள் இருக்க வேண்டும். சத்தியம் நீதி இவற்றின் ஒழுங்குகளுக்கு உட்பட்டு நமது காரியங்கள் இருக்கவேண்டும்.

நாம் பரிசுத்தத்தோடு அறிவோடு, நீடிய சாந்தத்தோடு, தயவோடு, பரிசுத்த ஆவியோடு, மாயமற்ற அன்போடு, சத்திய வார்த்தையோடு, தேவபலத்தோடு, நீதியின் ஆயுதங்களை வலது இடது கரத்தில் ஏந்தி, கனத்தோடும்  கனவீனத்தொடும், துர்க்கீர்த்தியோடும் நற்கீர்த்தியோடும், எத்தரெனப்பட்டாலும் உண்மையுடனும், மரித்துக் கொண்டிருந்தாலும் உயிரோடிருக்கிறோம் என்றும், கவலைகளில் இருந்தாலும் மிகுந்த மகிழ்ச்சியோடு இருப்பவர்களாகவும், தரித்திரராக இருந்தாலும் அநேகரை ஐசுரியவான்களாக மாற்றுகிறவர்களாகவும் இருந்து , மிகுந்த பொறுமையோடும், கடினமான நிலையிலும், தேவைகளிலும், மன அழுத்தத்திலும், அடிகளிலும், சிறைப்பட்ட நிலையிலும், குழப்பத்திலும், பிரயாசங்களிலும், விழித்திருத்தலிலும், உபவாசங்களிலும் இப்படி எல்லா சூழ்நிலைகளிலும் நாம் தேவனுடைய ஊழியக்காரர் என்பதை நிருபிக்க வேண்டும்.

உலகத்தில் இந்த வாழ்க்கை எந்தவித முக்கியத்துவம் அற்ற சாதாரண ஒரு வாழ்க்கையாக காணப்பட்டாலும், எவ்வளவு துல்லியமாக வரையறுக்கப்பட்ட ஒரு பாதையாக  இந்த உண்மையாக பிரதிஷ்டை செய்தவர்களின் வாழ்க்கை இருக்கிறது!.

இது நிர்விசாரமான எளிதான வாழ்க்கையல்ல. இது எந்தவிதத்திலும் உலகத்தனம் கொண்ட மக்களின் நட்பையோ மதிப்பையோ கொடுக்காது. இது தற்போதைய உலக வாழ்க்கைக்கு அபிவிருத்தியையோ முன்னேற்றத்தையோ கொடுக்காத பாதையாக, மாம்ச விருப்பங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்காத பாதையாக இருந்தாலும் நமது உள்ளான புதிய மனுஷன் மிகுந்த சந்தோஷத்தோடு, இப்படி கிறிஸ்துவுடன் சுயமறுப்பை செய்து பலி செய்யும் வாய்ப்பை கொடுத்த தேவனுக்கு ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் எல்லாவற்றிற்கும் நன்றி செலுத்துவான். -R859

நான் என் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், அநேகருடைய பிரயோஜனத்தைத் தேடி, அவர்கள் இரட்சிக்கப்படும்படிக்கு, எவ்விதத்திலும் எல்லாருக்கும் பிரியமாய் நடக்கிறதுபோல; ...  தேவனுடைய சபைக்கும் இடறலற்றவர்களாயிருங்கள். -1Co 10:32 ,33

 

ஆகிலும், நாம் அவர்களுக்கு இடறலாயிராதபடிக்கு, நீ கடலுக்குப் போய், தூண்டில்போட்டு, முதலாவது அகப்படுகிற மீனைப் பிடித்து, அதின் வாயைத் திறந்துபார்; ஒரு வெள்ளிப்பணத்தைக் காண்பாய்; அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களிடத்தில் கொடு என்றார். -Mat 17:27 

பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன்; எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன். -1Co 9:22 

ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக் கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்; -1Pe 1:22

 

 

YYYYYYY

 

2016ம் ஆண்டிற்கான நமது குறிக்கோள்

 

கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்.

இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்.

நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் செலுத்துவேன். சங்கீதம் 116:12 -14

நம்முடைய இரட்சகராகிய கிறிஸ்துவின் பிரியமான இஸ்ரயேலர்களான சத்திய சகோதரர்களுக்கு புதிய வருடத்திற்கான வாழ்த்துக்கள். சென்ற வருடத்தில் சத்தியத்தையும் சகோதரர்களின் ஐக்கியத்தையும் கொடுத்து நம்மை சீராக வளரவும் பலப்படவும் செய்த நமது ஆண்டவருக்கு நமது நன்றிகளை தெரிவிக்கும் நேரமாக இது இருக்கிறது.

இதற்க்கு ஏற்ற ஒரு வேதவாக்கியமாக சங்கீதம் 116:12 -14 இருக்கிறது. இது 1924ம் வருட சட்ட வாக்கியமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. (PT# 062, JANUARY 1924).

சகோதரர்களுக்கு சென்ற வருடத்தில் நாம் பெற்ற நன்மைகளுக்கு யாவே தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் நன்றி தெரிவிக்கவும் அதற்கெல்லாம் பிரதிபலனாக நாம் என்ன செய்ய வேண்டும் அதை எப்படி செய்ய வேண்டும் என்பதற்கு வழிகாட்டுவதாக இந்த வாக்கியம் இருக்கிறது. குறிப்பாக புதிதாக பிரதிஷ்டைக்கு வந்திருக்கும் சகோதரர்களுக்கு இது நல்ல வழிகாட்டலாக இருக்கும். இது நமது காலை தீர்மானத்தின் பகுதியாக இருக்கிறது.

கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்.

இதன் முதற்பகுதி தேவன் நமக்கு செய்த நன்மைகளை குறிப்பதாக இருக்கிறது. இதை ஏழு விதமான காரியங்களாக பார்க்கலாம். தேவனின் படைப்பு, பராமரிப்பு, பாதுகாத்தல், வழிநடத்துதல், நியாயமாக்குதல், பரிசுத்தப்படுத்துதல், மற்றும் இரட்சிப்பு. இவைகளின் மூலம் தேவன் நமக்கு செய்யும் நன்மைகளை சொல்கிறதாக இருக்கிறது.

நாம் மனிதர்களாக இந்த உலகில் படைக்கப்பட்டு தேவனோடு விசேஷித்த உறவு கொண்டு இருக்கும் படி தேவன் நமக்கு கொடுத்த வாய்ப்பு ஒரு ஆசீர்வாதம். சுவிஷேச யுகத்தில் இருண்ட காலங்களுக்கு பின்பு மிகுந்த சத்திய வெளிச்சம் பிரகாசிக்கும் இந்த கால கட்டத்தில் நாம் இருப்பது ஒரு பாக்கியம்.

உலகில் தேவ நம்பிக்கை அற்ற, சுதந்திரம் அற்ற நாடுகளிலும், இஸ்லாமிய நாடுகளிலும் நாம் பிறக்காது சுதந்திர நாட்டில் இருபது ஒரு ஆசீர்வாதம். இந்தியாவிலும் தென் இந்தியா கிறிஸ்தவம் முதலில் பரவிய பகுதியாக இருக்கிறது. தெற்கு ஆசியாவில் முதல் வேதாகம மொழிபெயர்ப்பு தமிழ் மொழியில்தான் செய்யப்பட்டது. (Bartholomew Ziegenbalg -German missionary)

ஏழாம் எக்காளமான தற்கால சத்தியம் முதலில் இந்தியாவில் பரவியதும் தென் இந்தியாவில்தான். இன்று அதிக அளவில் சத்திய சகோதரர்கள் இருப்பதும் நமது பகுதிகளில்தான். இங்கு நாம் தேவனுடைய சத்திய ஊழியத்தில் இருப்பது தேவன் கொடுத்த ஆசீர்வாதம்.

இவ்வளவு அதிகமான ஆசீர்வாதங்களைக் கொடுத்த யாவே தேவனுக்கு நாம் பிரதிபலனாக செய்ய வேண்டியது கடமையாக இருக்கிறது. நாம் செய்ய வேண்டியதாக இருப்பதை மூன்று காரியங்களாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு,

இதில் பாத்திரம் என்று சொல்லப்படுவது யாவே தேவன் தனக்கு உணமையுள்ளவர்களாக இருப்பவர்களுக்காக ஆயத்தப் படுத்திவைத்துள்ள பாடுகள் நிறைந்த வாழ்க்கை ஆகும். ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை குறிப்பதாகவும் பாத்திரம் என்ற பதம் வேதாகமத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. (Ps. 23: 5; Matt. 20: 22, 23 26: 39, 42; Luke 22: 20; John 18: 11; 1 Cor. 10: 16).

நமது தேவனுக்காக நன்றியுள்ள இருதயத்தோடு இந்த வாழ்க்கையை, அது எப்பேர்பட்ட அனுபவமாக இருந்தாலும் எதிர் கொள்வேன் என்று தயாராக நிற்பதை  இந்த வாக்கியம் காட்டுகிறது.

கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்.

 

இரண்டாவதாக நாம் செய்ய வேண்டியதை காட்டும் வாக்கியம் "and call upon the name of the Lord." இது யாவே தேவனுடைய குணாம்சம், அவரது சித்தம் நோக்கம் என்பவைகளை அறிந்து அதற்கேற்ப நாம் நடந்து கொள்வதை குறிக்கிறது. நாம் தேவனோடு ஜெபத்தின் மூலம் இடைவிடாத தொடர்பு கொண்டிருக்க வேண்டும். அவரது கிருபை இரக்கத்தைதின் மேல் நம்பிக்கை வைத்து அவரிடம் நெருங்கிச் சேரவேண்டும் (Heb. 4: 16).  அப்படி நாம் ஜெபிக்கும் போது அது தேவனின் குண இயல்புகளான நீதி, ஒழுங்கு அன்பு ஆகியவற்றிற்கு இசைந்திருக்க வேண்டும். சிறிய காரியங்களில் கூட அது சகோதரர்களுடன் அல்லது உலகத்துடனான எந்த காரியங்களானாலும் அதில் உண்மையும் ஒழுங்கும் இருக்க வேண்டும்.

 

நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் செலுத்துவேன்.

தேவனுடைய இந்த ஆசீர்வாதங்களுக்காக நாம் திருப்பிச் செலுத்தும் காரியங்களில் அடுத்த செயல்பாட்டை இந்த கடைசி வாக்கியம் காட்டுகிறது. தேவனுக்காக செய்யும் இந்த பொருத்தனையில் இரண்டு பாகங்கள் உள்ளது.

  1. உலகத்துக்கும் மாம்சத்துக்கும் மரித்தல். 2. தேவனுக்காக வாழ்தல்.

இதில் ஏதாவது ஒன்றை சரியாக செய்யாவிட்டாலும் தேவனுக்கு செய்யும் பொருத்தனையை முழுவதையும் செய்யவில்லை என்றாகும். இதன் முதலாவது பாகத்தைப் பற்றி விளக்க தேவையில்லை., உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? - Jas 4:4”

  இரண்டாவது பாகமான தேவனுக்காக உயிர்த்து இருத்தல் என்பது ஆழ்ந்த அர்த்தங்களை கொண்டது. நாம் தேவ வார்த்தைகளை படித்து அதனை தியானித்தல். அதன் படி நடக்க விழித்திருந்து தேவனிடம் ஜெபித்தல் ஆகியவை.

இந்த பொருத்தனைகளை நாம் செய்வது பின்பு எபொழுதோ ஒரு நேரம் நிறைவேற்ற வேண்டும் என்று அல்ல, இப்பொழுதே செயல் பட ஆரம்பிப்பது, நாம் செய்யும் ஒவ்வொரு சிறிய காரியங்களிலும் நாம் இவற்றை செயல்படுத்த ஆரம்பித்துவிட வேண்டும்.

“அவருடைய ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் செலுத்துவேன்என்பது தேவனுடைய ஜனங்களுக்கு பிரயோஜனமாக நம்முடைய வேலைகள் இருக்க வேண்டும். ஒவ்வொரு சகோதரருக்கும் , அழைப்பில் எல்லா பிரிவினருக்கும் நம்முடைய பிரதிஷ்டை வாழ்க்கை பயனுள்ளதாக இருக்க வேண்டும். (Ps. 137: 5, 6; Matt. 6: 33.

இவற்றை எல்லாம் சரியாக செயல் படுத்துவதே நாம் தேவனிடம் இருந்து பெற்ற எல்லா நன்மைகளுக்கும் நாம் நன்றியோடு இருப்பதாகும்.

ஆகவே வரும் புதிய வருடம் முழுவதும் இந்த வேத வாக்கியங்களை நினைவில் வைத்து அவை நமக்கு ஆவியில் உற்சாகமூட்டவும் , நமது பிரதிஷ்டை வாழ்க்கையை சரியாக நடத்த தூண்டவும் தேவன் தாமே உதவிசெய்வாராக.

 

How shall I give back to Yahweh, All his benefits unto me?

The cup of salvation, will I lift, and, on the Name of Yahweh, will I call:

My vows—to Yahweh, will I pay, Might it be in presence of all his people!

Psa 116:12-14

 

MOTTO TEXT FOR 1924 - PT# 062, JANUARY 1924

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

moto text

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  Bible study