கடவுள் ஏன் தீமையை அனுமதிக்கிறார்

 

மனிதனுக்கான கடவுளின் வெளிப்பாடு

 

ஒரே பைபிள், ஏன் மார்க்க பேதங்கள்?

 

கிறிஸ்தவர்களுக்கு ஒரு எச்சரிக்கை

 

நரகம் என்றால் என்ன?

 

அத்தி மரம்

 

ஜெயிப்பது கடவுளா? அல்லது சாத்தானா?

 

DNA MENTIONED IN THE BIBLE 

 

Home

 

Passover

 

 

நமது கர்த்தராகிய கிறிஸ்து யெஷுவாவின் ஞாபகார்த்த நாள் – பஸ்கா - 2018

 

நமது கர்த்தராகிய கிறிஸ்து “யெஷுவா”வின் ஞாபகார்த்த நாள் இந்த வருடம் 2018 வரும்  மார்ச் 31 (சனிக்கிழமை), சூரியன் அஸ்தமனத்திற்குப் பின்பு ஆரம்பிக்கிறது.  ஞாபகார்த்த ஆராதனை பிற்பகல் 3:00 மணிக்கு ஆரம்பிக்கிறது.

(2018 மார்ச் 31 சூரிய அஸ்தமன நேரம் 18:20)

 

Aviv Barley Report: March

 

பார்லி அறிக்கை மார்ச் 18ம் தேதி வரும் முதல் பிறையில் புது வருடம் (ஆபிப் மாதம் ) ஆரம்பிக்கிறது என்பதை உறுதி செய்தது.

 

பிறை பார்த்தல் அறிக்கை:

 

இஸ்ரேலில் இருந்து வந்த அறிக்கைகளின்படி மார்ச் 18 (ஞாயிறு) மாலை 6:12 மணிக்கு முதல் பிறை இஸ்ரேலில் காணப்பட்டது. ஆகவே மார்ச் 18 அந்திநேரத்துக்கு பின்பு புதிய வருடத்தின் முதல் நாள் ஆரம்பிக்கிறது (ஆபீப் 1ம் நாள் - மார்ச் 18 அந்திநேரத்தில் இருந்து மார்ச் 19 அந்திநேரம் வரை.)

 

ஆகவே இந்த வருடம் ஆபீப் 14ம் நாள், மார்ச் 31ம் தேதி(சனிக்கிழமை) அந்திநேரத்துக்கு பின்பு ஆரம்பிக்கிறது.

 

 

YYYYYYY

 

Aviv Barley Report for 2018 March

renewedmoon

 

 

March 31st Moon Phase

Moonphase

 

 

 

 

March 18th Moon Phase

moon phase mar18

 

 

 

 

 

YYYYYYY

 

 

 

 

 

 

 

பஸ்கா – 2017

 

நமது கர்த்தராகிய கிறிஸ்து யெஷுவாவின் ஞாபகார்த்த நாள் – பஸ்கா - 2017

 

நமது கர்த்தராகிய கிறிஸ்து “யெஷுவா”வின் ஞாபகார்த்த நாள் இந்த வருடம் 2017 வரும்  ஏப்ரல் 11 (செவ்வாய் கிழமை), அந்திநேரத்திற்கு பின்பு ஆரம்பிக்கிறது.  ஞாபகார்த்த ஆராதனை பிற்பகல் 3:30 மணிக்கு ஆரம்பிக்கிறது.

 

Abib Update: 3/30/2017 12:58 AM

 

பார்லி அறிக்கை மார்ச் 29ம் தேதி வரும் முதல் பிறையில் புது வருடம் (ஆபிப் மாதம் ) ஆரம்பிக்கிறது என்பதை உறுதி செய்தது.

 

பிறை பார்த்தல் அறிக்கை:

 

இஸ்ரேலில் இருந்து வந்த அறிக்கைகளின்படி மார்ச் 29 (புதன்) மாலை முதல் பிறை இஸ்ரேலில் காணப்பட்டது. ஆகவே மார்ச் 29 அந்தி நேரத்திற்கு பின்பு (7 மணிக்கு பின்பு) புதிய வருடத்தின் முதல் நாள் ஆரம்பிக்கிறது (ஆபீப் 1ம் நாள்).

 

ஆகவே ஆபீப் 14ம் தேதி ஏப்ரல் 11ம் தேதி அந்திநேரத்திற்கு பின்பு ஆரம்பிக்கிறது.

full moon

Passover report

 

 

YYYYYYY

 

 

 

Abib Update: 3/27/2017 11:45 PM

 

இஸ்ரயேலில் இருந்து ஆபிப் மாதத்திற்கான ஒரு பார்லி தகவல் அறிக்கை வந்துள்ளது. கதிர் விளைந்து, கதிர்க்கட்டு அசைவாட்டும் பலிக்கு ஏற்றதாக முதிர்ச்சியடைந்து விட்டது என்பது தெரிகிறது.  அதோடு இடப்பெயர்ச்சி செய்யும் பறவைகள் கூட்டமாக வந்து கொண்டிருப்பதும் அறுப்பு காலம் ஆரம்பிக்கப் போவதை காட்டுகிறது.

 

ஆகவே புது வருட முதல் மாதம் (ஆபிப் 1 )மார்ச் 28 மாலை ஆரம்பிக்க வாய்ப்பு அதிகம்.

 

பார்லி அறிக்கை வரும் முதல் பிறையில் புது வருடம் (ஆபிப் மாதம் ) ஆரம்பிக்கிறது என்பதை உறுதிபடுத்த உதவுகிறது. பார்லி தகவல் அறிக்கையில் பார்லி கதிர்கள் எதுவும் முதிர்ச்சி அடையவில்லை என்றால் வரும் முதல் பிறை இந்த வருடத்தின் 13வது மாதமாக அறிவிக்கப்படும். அதாவது லீப் வருடம்.

முதல் பிறை பார்த்த தகவல் அறிக்கை ஆபிப் 1ம் தேதி எப்பொழுது என்பதை மிக சரியாக அறிவிப்பது ஆகும்.

 

Abib Report 2017

 

எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள். -1Th 5:21 

 

 

Abib Update: 2/16/2017 06:41 AM

Expected Observation-based Dates of Biblical Festivals for Gregorian year 2017:

All dates may vary based upon actual visual confirmation/trumpet call of the new crescent moon & availability of Aviv barley within the region of the Promised Land

Aviv barley searches will be held toward the end of the twelfth Biblical month with the first possible renewed moon of the Biblical year expected to appear the evening of March 28th in the area of Venezuela++ if barley is found to be mature, as expected. It is always possible, however unlikely this year, that barley will not be ripened, forcing a thirteenth month to be observed for the prior calendar year. If this is the case, the new Biblical year will begin at the next renewed moon expected to appear the evening of April 27th in the area of New Guinea. Listed below are both possible dates for the Biblical Festivals in 2017 for these locations and areas westward (earliest / latest):

  • First Day of Biblical Year# (Day 1 of Month 1): March 29th++ / April 28th
  • Passover/Pesach Seder (Day 14 of Month 1): April 11th++ / May 11th Eucharist is observed on the evening of April 10th++ / May 10th based on Yeshua's model
  • First Day of Feast of Unleavened Bread/Chag HaMatzot* (Day 15 of Month 1): April 12th++ / May 12th

 

 

 

 

YYYYYYY

 

 

 

 

 

 

 

வேதாகமத்தின்படி பஸ்கா நாள்

 

வேதாகமத்தில் பஸ்கா பண்டிகையானது பிறை நிலவையும் இஸ்ரயேல் தேசத்தில் விளையும் தானியங்களின் அறுப்பு காலத்தையும் பார்த்து தீர்மானிக்க கட்டளை கொடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரயேலரின் மாதப்பிறப்பு மற்றும் வருடப் பிறப்பை சந்திரனைப் பார்த்து தீர்மானிக்கும் படியான அமைப்பையே தேவன் கொடுத்திருக்கிறார். அறிவியல் முறைப்படி துல்லியமான கணக்கீடு முறைகள் அல்ல, மாறாக ஒன்றுக்கு மேற்பட்ட கண்களால் பார்த்த சாட்சிகளைக் கொண்டே மாதப்பிறப்பையும் வருடப்பிறப்பையும் நிர்ணயிக்கும்படி தேவன் கொடுத்திருக்கிறார்.

 

நாட்களையும் மாதங்களையும் தீர்மானிக்க தேவன் சூரியன், சந்திரன் நட்சத்திரங்களை நியமித்திருக்கிறார் - ... வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார். - Gen 1:14 

 

பண்டைய இஸ்ரயேலில் முதல் பிறை தோன்றுவதை பார்க்க சிலர் நியமிக்கப் பட்டிருப்பார்கள், மாலை பொழுதில் முதல் பிறை தோன்றியதை பார்த்ததும் “Sanhedrinஅமைப்பில் இருக்கும் தலைவர்களுக்கு இதை தெரிவிப்பார்கள். போதுமான அளவு சாட்சிகள் பார்த்தபின்புதான் அந்த நாளை மாதபிறப்பாக (முதல் நாளாக) பூரிகைகளை ஊதி அறிவிப்பார்கள். ( Num 10:10 ) –Ref: Great Pyramid Passages Vol-2, SECTION V -THE YEAR: ITS BEGINNING AND LENGTH

 

ஆகவே கண்களால் பார்க்கப்படும் முதல் பிறைதான் வேதாகம வருட மற்றும் மாதத்தின் முதல் நாளை தீர்மானிக்கிறது. யூதர்களின் பஸ்காவும் நமது கிறிஸ்து ஏற்படுத்திய ஞாபகார்த்தம் ஆகியவை அடையாளமான காரியங்கள். ஆகவே மிக துல்லியமாக அதே காலத்தில் ஆசரிக்க அல்ல, அடையாளங்களுக்கே தேவன் முக்கியத்துவம் கொடுத்து வேதாகம வருட அமைப்பை கொடுத்திருக்கிறார்.

 

நியாயப்பிரமாணத்திற்கும் அதற்கு கீழிருந்த இஸ்ரயேலர்களுக்கும் சந்திரன் அடையாளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனாலேயே தேவன் கிறிஸ்து பலியாகும் அந்த நாள் முழு நிலவு நாளாக இருக்கும்படி அமைத்திருந்தார். மேசியாவை அவர்கள் புறக்கணித்ததும் தேவதயவு அவர்களை விட்டு அகற்றப்படுவதை நிசான் 15 க்கு பின்பு நிலவு தேய்வதை அடையாளமாக ரசல் போதகர் சொல்லியிருக்கிறார்.

 

“New Creation” Volume – P 479 – 481

The difference in the method of counting, be it remembered, is that the Jews then waited and still wait until the Spring Equinox, and begin their month with the first new moon thereafter, and keep the Passover at the full of that moon, or the 14th day.”

 

“In a particular sense we see that as the sun is the symbol of the spiritual Kingdom of God, the moon is the symbol of the Law Covenant, and of the people who were under that Law Covenant. Thus there was a special appropriateness in our Lord's being crucified by them exactly at the full of the moon, and that by God's predetermination as concerned the time, so that they could not take him previously, though they desired to do so, because "his hour was not yet come" (John 7: 30; 8: 20). His crucifixion at the full of the moon, and the fact that the moon immediately began to wane, points a lesson to the effect that there Israel brought upon itself as a nation a divine rejection, or casting off for a season, symbolized by the waning of the moon, which represented their national decline.”

 

fullmoon

 

 

EQUINOX OR BARLEY?

 

வேதாகமத்தில் சந்திரனையும் கதிர் விளையும் அறுப்பு காலத்தையும் கொண்டே பஸ்கா பண்டிகையை கணிக்க கொடுக்கப் பட்டுள்ளது. வேதாகமத்தில் EQUINOX பற்றி எதுவும் கொடுக்கப்படவில்லை. அது புறஜாதிகள் வசந்த காலத்தை கணிக்க மேற்கொண்ட முறை. இஸ்ரயேல் தேசம் இல்லாது போனபின்பு யூதர்கள் பஸ்கா காலத்தை கணிக்க இந்த முறையைத்தான் பயன் படுத்த முடிந்தது. ஏனெனில் இஸ்ரயேல் தேசத்தில் விளைச்சலும் அறுப்பும் இல்லாது அழிந்த பிரதேசமாக இருந்தது. முன் மாரியும் பின் மாரியும் இல்லாது போயிற்று.

 

ஆனால் இன்று நாம் தேவன் இஸ்ரயேலை தேசமாக திரும்ப கொண்டு வந்த பின்பான காலத்தில் இருக்கிறோம். இஸ்ரயேல் தேசம் தேவனுடைய பிரதிநித்துவ ராஜ்யமாக, பூமியில் தேவனுடைய ராஜ்யமாக இருந்தது. பின்பு தயவு நீக்கப்பட்டு அழிக்கப்பட்டு எழு கால தண்டனைக்கு பின்பு தேவன் கொண்டு வந்திருக்கிறார். இன்று தேவனுடைய ஆளுகை ஆரம்பிப்பதற்கு (கிறிஸ்து ராஜாவாக வருகை) அடையாளமாக, தேவனுடைய ராஜ்யத்தின் ஆரம்பமாக ஏற்படுத்தப் பட்டிருக்கிறது.

 

ஆகவே இன்று அங்கு தேவன் அற்புதமாக முன்மாரியும் பின்மாரியும் மீண்டும் கொடுத்து விளைச்சலும் அறுப்பும் கொண்டுவந்திருக்கிறார். சீயோன் குமாரரே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; அவர் தக்கபடி உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து, உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் ஏற்கனவே வருஷிக்கப்பண்ணுவார். Joe 2:23 

 

ஆகவே இன்று சில மாம்ச இஸ்ரயேலர்களும் வேதாகம் வருட அமைப்பின்படி யெஷூவாவின் ஞாபகார்த்தத்தை நினைவு கூறுகிறார்கள். அதாவது முதல் பிறை மற்றும் பார்லி பசுங்கதிர் விளைச்சல் ஆகியவற்றை கவனித்து பஸ்கா நாளை தீர்மானிக்கின்றனர்.

... that blindness in part is happened to Israel, until the fulness of the Gentiles be come in. - Rom 11:25 

ஆதாரம்: http://www.hoshanarabbah.org/    http://www.yrm.org/aboutyrm.htm

 

ரசல் போதகர் அவர்களது காலகட்டத்தில் இஸ்ரயேல் தேசம் இல்லாது இருந்தது, பின்பு ஜான்சன் போதகர் காலத்திலும் இஸ்ரயேல் தேசம் இன்னும் முறையாக அமைக்கப்பட்டு வேதாகம வருட அமைப்பு கொண்டு வரப்படவில்லை. ஆகவே அவர்கள் அதற்கு முன்பு இருந்த EQUINOX கொண்டு தீர்மானிக்கும் முறையையே பின்பற்றி வந்தனர். அவர்கள் அன்று இருந்த வசதிகளின் படி கர்த்தரின் ஞாபகார்த்த நாளை ஆசாரிப்பதில் கவனம் செலுத்தி செய்துவந்தனர்.

ஆனால் இன்று இஸ்ரேயல் தேசம் செழித்து வளர்ந்து நிற்பதையும் அங்கு பழைய ஏற்பாட்டு காலத்தில் இருந்த அதே வேதாகம வருட முறை பின்பற்றப்படுவதை நாம் காண்கிறோம்.

ரசல் ஜான்சன் போதகர்கள் இன்று கிறிஸ்து வகுப்பாராக இந்த சத்தியங்களை வெளிப்படுத்தும் வேலைகளில் இருக்கிறார்கள் என்ற விசுவாசம் மற்றும், தேவன் இஸ்ரயேல் தேசத்தை திரும்ப கொண்டு வந்து வழக்கத்தில் இல்லாது போன பழைய ஏற்பாட்டு கால வேதாகம சந்திரமாத அமைப்பை மீண்டும் ஏற்படுத்தி அந்த சத்தியங்களை புரிந்து கொள்ள செய்கிறார் என்பதையும் நாம் விசுவாசிக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம்.

 

இன்று (மேசியாவை ஏற்றுக்கொண்ட ) சில  இஸ்ரயேலர்கள் முதற் பிறையையும் பார்லி கதிர் விளைச்சலையும் கண்களால் பார்த்த சாட்சிகளின்படி ஆபீப் மாத பிறப்பை தீர்மானிக்கின்றனர்.  இவற்றை அறிந்து கொள்ளும் வசதிகளையும் தேவன் நமக்கு கொடுத்திருப்பதால் இவற்றை பின்பற்றுவது கர்த்தரின் ஞாபகார்த்தத்தை ஆசரிப்பதில் நாம் கொண்டிருக்கும் கவனத்தை வெளிப்படுத்துவதாக இருக்கும்.

 

பார்லி கதிர் விளைச்சல் மற்றும் பிறை தோன்றுவதை அறிவிக்கும் சில இணைய தளங்கள்:

http://www.renewedmoon.com/

http://www.hoshanarabbah.org/

http://www.yrm.org/

 

 

ஆபீப் – “Green ears”

 

ஆபீப் மாதம் இஸ்ரயேலருடைய வருடத்தின் முதல் மாதம். ஆபீப் என்றால் விளைந்த பசுங்கதிர் என்று அர்த்தம். வருடத்தின் முதல் மாதத்திற்கு முன்பே பார்லி கதிர்கள் பசுமையான முற்றிய நிலையை அடைந்து விடும். கதிர்களை பரிசோதித்துவிட்டு நன்கு விளைந்து விட்டது என்றால் அடுத்து வரும் பிறையிலிருந்து அடுத்த வருடத்தின் முதல் மாதம் ஆரம்பித்து விட்டது என்று அறிவித்து விடுவார்கள்.

ஆகவேதான் தேவன் அவர்களது முதல் மாதத்தின் பெயரை ஆபீப் என்று கொடுத்திருக்கிறார். கடவுள் அவர்களுக்கு சரியான நேரத்தில் மழைப் பொழிவையும் அதன் மூலம் சரியான பருவத்தில் தானியங்களை விளையவும் செய்து கொடுக்கிறார். இஸ்ரயேல் தேசம் வானம் பார்த்த பூமி. கடவுள் கொடுக்கும் மழையை , அவரைச் சார்ந்தே அவர்கள் இருக்க முடியும்.

 

Deu 11:10-14  நீ சுதந்தரிக்கப்போகிற தேசம் நீ விட்டுவந்த எகிப்து தேசத்தைப்போல் இராது; அங்கே நீ விதையை விதைத்து, கீரைத்தோட்டத்திற்கு நீர்ப்பாய்ச்சுகிறதுபோல உன் காலால் நீர்ப்பாய்ச்சி வந்தாய்.

நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசமோ, மலைகளும் பள்ளத்தாக்குகளுமுள்ள தேசம்; அது வானத்தின் மழைத் தண்ணீரைக் குடிக்கும் தேசம்;

அது உன் தேவனாகிய கர்த்தர் விசாரிக்கிற தேசம், வருஷத்தின் துவக்கமுதல் வருஷத்தின் முடிவுமட்டும் எப்பொழுதும் உன் தேவனாகிய கர்த்தரின் கண்கள் அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும்.

நீ உன் தானியத்தையும் உன் திராட்சரசத்தையும் உன் எண்ணெயையும் சேர்க்கும்படிக்கு, நான் ஏற்றகாலத்தில் உங்கள் தேசத்தில் முன்மாரியையும் பின்மாரியையும் பெய்யப்பண்ணி,

 

Jer 5:24  அந்தந்தப் பருவத்திலே எங்களுக்கு மழையையும், முன்மாரியையும் பின்மாரியையும் கொடுத்து, அறுப்புக்கு நியமித்த வாரங்களை எங்களுக்குத் தற்காக்கிற எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருப்போம் என்று அவர்கள் தங்கள் இருதயத்திலே சொல்லுகிறதில்லை.

 

இங்கு சரியான காலத்தில் பருவகாலங்கள் வரும்படி தேவன் செய்கிறார் அறுப்புக்கு நியமித்த வாரங்கள் தவறுவதில்லை என்று தெரிகிறது.

 

இதை 1 சாமுவேல் 12: 1-19 படிக்கலாம். இஸ்ரயேலர் தங்களுக்கு ஒரு ராஜாவைக் கேட்டது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை உணர்த்த சாமுவேல் அங்கு ஒரு அற்புதம் செய்கிறார். சவுல் ராஜாவானது இஸ்ரயேலரின் வசந்தகாலமான ஆபீப் மாதம். (1Sa 12:17) அப்பொழுது கோதுமை கதிர்கள் விளைந்து அறுப்புக்கு தயாராய் இருக்கும்.

 

அப்பொழுது பொதுவாக மழை இருக்காது. ஆனால் அப்பொழுது இடியும் மழையுமாக பெய்தால் அவர்களது விளைச்சல் முழுவதும் நாசமாகி இஸ்ரேலில் பெரிய அழிவாக அது இருக்கும். ஆகவே இதன் மூலம் சாமுவேல் அவரகள் யாவே தேவனை எந்தளவுக்கு சார்ந்திருக்கிறார்கள் என்று உணர்த்துகிறார்.

Ref: PT# 520, JULY-AUGUST 1972, PAGES 50-61 SAMUEL'S FAREWELL ADDRESS

 

ஆகவே ஆபீப் மாதம் பசுங்கதிர் முற்றிய நிலையை அடையும். (Lev 23:10, Jos 4:19, Jos 5:10  1Sa 12:17)

வருடத்தின் 12 பிறைகளுக்கு பின் வரும் 15 நாட்களில் எருசலேமை சுற்றிய பகுதிகளில் தானியங்கள் நன்கு விளைந்து விட்டதா என்று சோதித்து பார்ப்பார்கள். பசுங்கதிராக விளைந்துவிட்டது என்று தெரிந்து கொண்டபின் அடுத்து வரும் முதல் பிறை தெரியும் நாளை, அடுத்த வருடத்தின் முதல் நாளாக அறிவிப்பார்கள். இந்த 15 நாட்களில் தானியங்கள் சரியாக விளையாவிட்டால் அதற்கு அடுத்த முதல் பிறையே வருடத்தின் முதல் நாளாக (ஆபீப் 1) அறிவிப்பார்கள். அப்படியானால் முந்தைய வருடத்துடன் 13வது மாதம் சேர்ந்துவிடும். இது நமது லீப் வருடம் போல தேவன் அவர்களது வருடத்தை ஒழுங்கு படுத்த அருமையான எளிய ஒரு முறையை கொடுத்திருக்கிறார். ஆபீப் 16ம் நாள் பசுங்கதிர் நன்கு காய்ந்து முற்றிய கதிராக கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை அடையாளப்படுத்தும்படி அசைவாட்டப்படும்.

Ref: Great Pyramid Passage - Vol 2 - Section V

 

வேதாகம வருட அமைப்பு

 

வேதாகம வருடம் 360 நாட்களை கொண்டது. இது தீர்க்க தரிசன வருட காலஅளவாக இருக்கிறது (Type). அதாவது ஒரு காலம் என்றால் ஒரு வருடத்திற்கு 360 நாள் என்று 360  வருடம் என்று எடுத்துக் கொள்வோம். ஆனால் இதில் நிறைவேறுதல் வருடம் (AntiTypical) சூரிய காலண்டர் படியான நாட்களைத்தான் கொண்டிருக்கும்.

 

ஆகவே தேவன் இதை அடையாளங்களுக்கும் தீர்கதரிசன காலக் கணக்குகளுக்காகவுமே கொடுத்திருக்கிறார். அதேநேரம் யூத சந்திர மாதத்தில் 29.5 நாட்கள் வருவதால் ஒரு மாதம் 29 நாட்களும் அடுத்த மாதம்  30 நாட்களுமாக  வருடம் 354 நாட்களை கொண்டது. இது துல்லியமாக பூமி சூரியனை சுற்றும் காலம் அல்ல, ஆகவே சூரிய காலண்டர் படியான 365 ¼ நாட்கள் கொண்டதாக இல்லாததால் பூமியானது சூரியனைச் சுற்றிவரும் போது அதே இடத்திற்கு துல்லியமாக ஒவ்வொரு வருடமும் வர முடியாது. இப்படியே மூன்று வருடங்கள் போனால் அறுப்பு பருவகாலத்திற்கு 33 நாட்கள் முன்பே அடுத்த வருடம் ஆரம்பிக்கும்படி ஆகும். இதைச் சரி செய்யவே தேவன் அவர்களை பார்லி கதிர் விளைச்சலை பார்க்கும்படி சொல்கிறார். லீப் வருடம் போல தேவன் இந்த விளைச்சலை கொண்டு வேதாகம சந்திர வருடத்தை சரி செய்யும் அமைப்பையும் கொடுத்திருக்கிறார்.

 

அடையாளங்கள்:

(Type= Moon-Old Testament , Anti-Type= Sun-New Testament)

கிறிஸ்துவுக்கு இன்னொரு பெயர் சூரியன் என்பதாகும். நீதியின் சூரியன் என்று அழைக்கப்படுகிறார், கிறிஸ்துவுக்கு அடையாளமான கோரேஸ் என்றால் சூரியன் என்று அர்த்தம் (Isa 44:28  ). யுதயுகம் அல்லது நியாயப்பிரமாணம் சந்திரனால் அடையாளப்படுத்தப் படுகிறது. மஹாபிரமிடிலும் யூதயுகத்தை குறிக்கும் மேல்நோக்கிய பாதையில் சந்திர மாத கால கணக்கு உள்ளது.

 

மனுக்குல வரலாற்றில் 7000 வருடத்தில் முதல் பாதி முழுவதும் அடையாளங்களாகவே கொடுக்கப் பட்டிருந்தது. வேதாகம நாள் கணக்கின்படி நாளானது மாலையில் ஆரம்பித்து மறுநாள் மாலையில் முடியும். முதல் 3500 வருடங்கள் அதாவது மாலை மற்றும் இரவில் நிலவே ஒளியைக் கொடுக்கும். அதுபோல பழைய ஏற்பாடு முழுவதும் அடையாளங்களால் (Type) வரப்போகிற காரியங்கள் கொடுக்கப் பட்டிருப்பதால் அவைகள் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் முயற்சித்தும் புரிந்து கொள்ள முடியவில்லை. பின்பு யேஷுவா கிறிஸ்து 7000 வருட நாளில் பிற்பகுதியான காலைப் பகுதியில் வருகிறார். சூரியன் வந்த பின்பு கிடைக்கும் அதிக வெளிச்சம் போல கிறிஸ்துவே எல்லா அடையாளங்களையும் தெளிவாக வெளிப்படுத்துகிறார். கிறிஸ்துவே நிழல்களின் நிஜமாக வந்து நிஜ பஸ்கா ஆடாக அடிக்கப்பட்டு உயிர்த்து எழுந்து நிஜ முதற்பலனான கதிராகிறார்.

 

தேவன் தானியங்களின் விளைச்சலை, அறுப்பு காலத்தை கொண்டு  அடையாளங்களை(Type) கொடுத்திருப்பது வேதாகமத்தில் தெளிவாக இருக்கிறது.

 

Lev 23:10  நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்து, அதின் வெள்ளாண்மையை அறுக்கும்போது, உங்கள் அறுப்பின் முதற்பலனாகிய ஒரு கதிர்க்கட்டை ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவீர்கள். உங்களுக்காக அது அங்கிகரிக்கப்படும்படி, ஆசாரியன் அந்தக் கதிர்க்கட்டை ஓய்வுநாளுக்கு மறுநாளில் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டவேண்டும்.

 

Lev 23:15  நீங்கள் அசைவாட்டும் கதிர்க்கட்டைக் கொண்டுவரும் ஓய்வுநாளுக்கு மறுநாள் முதற்கொண்டு எண்ணத்துவக்கி, ஏழுவாரங்கள் நிறைவேறினபின்பு,  ஏழாம் ஓய்வுநாளுக்கு மறுநாளாகிய ஐம்பதாம் நாள்மட்டும் எண்ணி,

 

Deu 16:9  ஏழு வாரங்களை எண்ணுவாயாக; அறுப்பு அறுக்கத் தொடங்கும் காலமுதல் நீ அந்த ஏழு வாரங்களையும் எண்ணவேண்டும். அவைகள் முடிந்தபோது வாரங்களின் பண்டிகையை உன் தேவனாகிய கர்த்தருக்கு என்று ஆசரித்து,

 

இந்த வசனங்கள் மூலம் முதற்பலனான கதிர்க்கட்டு அசைவாட்டப் பட்டபின்பு இஸ்ரேலில் அறுப்பு ஆரம்பிக்கிறது என்பது தெரிகிறது. அறுப்பு காலத்தைக் கொண்டே பண்டிகைகள் (பெந்தெகொஸ்தே ) நிர்ணயிக்கப் படுகிறது.

 

இது கிறிஸ்து உயிர்த்தெழுவதை அடையாளப்படுத்தும். ஆபிப் 16ல் பார்லி பசுங்கதிர் நன்கு விளைந்த கதிராக முதல் பலனாக அசைவாட்டப்படும். பின்பே மற்ற அறுவடைகள் நடக்கும். ஆகவே பார்லி விளைந்த பசுங்கதிராக அசைவாட்ட போதுமான அளவு காணப்பட்ட பின்புதான் அடுத்து வரும் முதல்பிறையிலிருந்து புது வருடத்தின் முதல் மாதமாக அறிவிப்பார்கள். பசுங்கதிராக விளையாவிட்டால் அடுத்து வரும் பிறையை வருடத்தின் 13வது மாதமாக அறிவிப்பார்கள். அதற்கு அடுத்த முதற்பிறைத்தான் அடுத்த வருடத்தின் முதல் மாதமாக அறிவிப்பார்கள். அப்பொழுதுதான் ஆபிப் 16ல் கதிர்க் கட்டை அசைவாட்டும் போது பார்லி பசுங்கதிர் நன்கு காய்ந்து முற்றிய கதிராக முதற்பலனாக கொடுக்கப்பட முடியும்.

 

நமக்காக ஈடுபலியாகிய கிறிஸ்துவை முதற்பலனாகிய கதிர் அடையாளப்படுத்துவதால் இஸ்ரேலில் விளைச்சலில் முதலில் விளைந்த பசுங்கதிர்கள், அதாவது அசைவாட்ட போதுமான அளவு கதிர்கள் இருந்தால், அவைகள் அறுக்கப்பட்டு ஆபீப் 16ம் நாள் யாவே தேவனின் சந்நிதியில் அசைவாட்டப்பட வேண்டும்.

 

முதல் முதல் பழுக்கும் உன் பழத்தையும், வடியும் உன் இரசத்தையும் காணிக்கையாகச் செலுத்தத் தாமதிக்கவேண்டாம். - Exo 22:29 

 

முதற்பலன்களை போஜனபலியாக நீ கர்த்தருக்குச் செலுத்தவந்தால், நிறைந்த பச்சையான கதிர்களை நெருப்பிலே வாட்டி உதிர்த்து, அதை உன் முதற்பலனின் போஜனபலியாகக் கொண்டுவரக்கடவாய். - Lev 2:14 

 

வாற்கோதுமை அறுவடை முதலில் வருகிறது. அதற்கு பின்புதான் கோதுமை அறுவடை.

- Days of harvest -- The reaping of the barley commenced the harvest, the wheat following. R4127:1 வாற்கோதுமை அறுப்பு துவக்குகிற அறுப்புக்காலத்தின் முந்தின நாட்களிலே அவர்கள் கொன்று போடப்பட்டார்கள். 2Sa 21:9 

 

இஸ்ரயேலர்கள் எகிப்தில் பஸ்கா அனுசரிக்கும் முன் வாற்கோதுமை (Barley) கதிர்விட்டிருந்தது என்பது யாத்திராகமம் 9:31 சொல்லப்பட்டிருக்கிறது.

 

அப்பொழுது வாற்கோதுமை கதிர்ப்பயிரும் சணல் தாள்ப்பயிருமாயிருந்தது; அதினால் சணலும் வாற்கோதுமையும் அழிக்கப்பட்டுப்போயிற்று. கோதுமையும் கம்பும் கதிர்விடாதிருந்ததால், அவைகள் அழிக்கப்படவில்லை. Exo 9:31

 

தேவன் அறிவியல் முறைப்படி நாம் இந்த காரியங்களை துல்லியமான காலத்தில் செயல் படுத்தவேண்டும் என்று கொடுக்கவில்லை. ஆனால் அடையாளங்களை பார்த்து அடையாளங்களுக்கு ஒத்ததாக செயல் படவேண்டும் என்ற அடிப்படையிலேயே எளிமையாக கொடுத்திருக்கிறார். ஆகவே அடையாளங்களை கண்களால் பார்ப்பது மூலமே நாம் பஸ்கா நினைவு கூறுதலையும் அடையாளமான காரியங்களை செய்வதும் சரியானதாக இருக்கும்.

 

உங்களுக்காக அது அங்கிகரிக்கப்படும்படி, ஆசாரியன் அந்தக் கதிர்க்கட்டை ஓய்வுநாளுக்கு மறுநாளில் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்ட வேண்டும். லேவியராகமம்23:11

http://www.renewedmoon.com/images/barley.gif

Aviv Barley Report 2015:

POSITIVE

Nehemiah Gordon
three locations in the Northern Negev (Tel Gamah, Gamah Junction, Mishmar Ha-Negev) and two in the Jordan Valley (Tel Malkoach and Nachal Talkid). @ 3/15/15

Brian Convery
Gilboa Mountains, Negba and Lahav @ 3/13/15

Reports of Aviv barley have been confirmed in various locations within Israel. This makes the next new moon the first of the year.

http://shawnrichardson.com/new-moon-report/

 

 

 

மாதப்பிறப்புமுதல் பிறை (chôdesh חדשׁ )

 

 

இஸ்ரயேலர் அவர்களது மாத பிறப்பை முதல் பிறை சந்திரன் (New moon) தோன்றுவதில் இருந்து ஆரம்பிக்கின்றனர்.

 

ஆனால் இன்றைக்கு New moon என்று ஆங்கிலத்தில் சொல்வது அம்மாவாசை யைத்தான். அதாவது No moon என்று சொல்ல வேண்டியதை New moon என்று அழைக்கிறார்கள்.

 

வேதாகமத்தில் புதிய நிலவு என்று சொல்வது முதலில் தோன்றும் பிறையைத்தான். New moon என்பதற்கும் மாதப்பிறப்பு என்பதற்கும்  ஒரே  எபிரேய வார்த்தைதான் கொடுக்கப் பட்டுள்ளது.

 

Lunar phase

 

First appearance of the new moon

 

–Ref: Great Pyramid Passages Vol-2, SECTION V -THE YEAR: ITS BEGINNING AND LENGTH

 

“ On the 30th day of the month, watchmen were stationed on commanding heights round Jerusalem to watch for the first appearance of the new moon. As soon as the new moon’s crescent was detected by any of these watchers, he immediately hastened to a certain house in the city, where he was examined by the president of the Sanhedrin. When a sufficient number of these eyewitnesses had been examined, and if their testimony was deemed satisfactory, the president formally declared the day “sanctified.” The news was then spread all over the country by means of beacon fires on the hills, and by swift messengers to distant places.”

 

 

சங்கீதம் 81:3 ன்படி மாதப் பிறப்பிலும், பஸ்கா பண்டிகை ஆரம்பத்திலும் எக்காளம் ஊதும்படி சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது மாதப் பிறப்பு அன்று புதிய நிலவும், பஸ்கா பண்டிகை அன்று முழு நிலவும் (பெளர்ணமி) இருப்பதையும் காட்டுகிறது.

 

Blow, at the new moon, the horn, At the full moon, for the day of our sacred festival: - Psa 81:3 

 chôdesh (חדשׁ ) New moon  keseh=( כּסה ) full moon

Blow, at the new moon, the horn, At the full moon, for the day of our sacred festival: (-Rotherham Emphasized Bible) Psa 81:3 

 

ஆபீப் மாதப் பிறப்பு பிறைநிலவுடன் ஆரம்பித்தால்தான் பஸ்கா பண்டிகை ஆரம்பம் (நிசான் 15= Joh 19:14  , Luk 23:54  ) முழு நிலவு நாளாக இருக்கும்.

முதல் பிறையில் இருந்து முழு நிலவுக்கு 14.7  நாட்கள் ஆகும். அதாவது நிசான் 14 முடியும் அன்று முழு நிலவாக இருக்கும். பின்பு தேய ஆரம்பிக்கும்.

 

You may have personally observed that the moon goes through a complete moon phases cycle in about one month. That's true, but it's not exactly one month. The synodic period or lunation is exactly 29.5305882 day

 

 

 

உங்கள் மகிழ்ச்சியின் நாளிலும், உங்கள் பண்டிகைகளிலும், மாதப்பிறப்புகளிலும், உங்கள் சர்வாங்க தகனபலிகளும் சமாதான பலிகளும் செலுத்தப்படும்போது பூரிகைகளை ஊதவேண்டும்; - Num 10:10 

 

… in the beginningsH7218 of your months,H2320  - rô'sh  chôdesh

 

Num 10:10 And in the day of your gladness, and in your appointed times, and in your new moons, you shall blow the trumpets over your burnt offerings, -HRB

 

 

ஏற்கனவே சங்கீதம்81:3ல் பார்த்தபடி யூதர்களின் மாதப்பிறப்பு அன்று (new moon)எக்காளம் ஊத வேண்டும்.பின்பு பஸ்கா பண்டிகை அன்றும்  (full moon) எக்காளம் ஊதவேண்டும். ஆகவேமாதப்பிறப்பாகிற முதல் பிறை தெரிந்த பின்14 ½நாட்களுக்கு பின் பஸ்கா பண்டிகை அன்று (நிசான் 14 முதல் நிசான் 15 இரவு வரை) முழுநிலவாக இருக்கும். கிறிஸ்து பலியாகும் அன்று முழு நிலவாகவும் நிசான்15ம் நாளில் இருந்து முழு நிலவு தேய ஆரம்பிக்கவும் செய்யும்.

 

 

 

Ref: “New Creation” Volume – P 479 – 481

“In a particular sense we see that as the sun is the symbol of the spiritual Kingdom of God, the moon is the symbol of the Law Covenant, and of the people who were under that Law Covenant. Thus there was a special appropriateness in our Lord's being crucified by them exactly at the full of the moon, and that by God's predetermination as concerned the time, so that they could not take him previously, though they desired to do so, because "his hour was not yet come" (John 7: 30; 8: 20). His crucifixion at the full of the moon, and the fact that the moon immediately began to wane, points a lesson to the effect that there Israel brought upon itself as a nation a divine rejection, or casting off for a season, symbolized by the waning of the moon, which represented their national decline.”

 

Bro. Russell made many remarks in the Towers concerning the connection between the full moon and the Memorial date. Note, e.g., his remarks in 1914 as recorded in Z '14, 83 (R. 5420, par. 6): "So this year, on April 11, the moon will be at its very full, and will then begin its wane. The 11th, therefore, corresponds to the day on which our Lord was crucified; and the evening of the 10th corresponds to the night of the first Memorial Supper."

 

 

இஸ்ரயேலரின் சந்திர மாத அமைப்பு:

 

மாதத்தின் இரண்டாம் நாள் அன்றுதான் வாரத்தின் முதல் நாள் ஆரம்பம் ஆகும். அவர்கள் சந்திர மாத அமைப்பின்படி மாதத்தில் நான்கு முழு வாரங்கள் உண்டு.அவர்களது கிழமைகளும் தேதிகளும் நமது நாட்காட்டிகளிள் வருவது போல மாறிவருவது இல்லை.

அதாவது நிசான் மாதம் 14ம் தேதி வாரத்தின் ஆறாவது நாள்,ஒய்வு நாளுக்கு முந்தையநாள். பஸ்கா ஆட்டை அடையாளப்படுத்தும் நமது கர்த்தர் அன்று பலியாகிறார். அடுத்தநாள் ஓய்வுநாள் நிசான் 15. மூன்றாம் நாள் அடையாளமான  முதற்பலனான கதிர்கட்டு அசைவாட்டுதல், நமது கர்த்தரின் உயிர்த்தெழுதல்நிகழ்ந்தது.

 

நிசான் மாதம் 14 அன்று பஸ்கா ஆடு பலியிடப்பட வேண்டும் என்று சொல்லும் வேதாகமம்,முதற்பலனான கதிர்க்கட்டு அசைவாட்டுதல் ஒய்வு நாளுக்கு மறுநாளில் என்று சொல்கிறது. அதாவது நிசான் 16.  இந்த வசனங்களின் மூலம் நிசான் 16 ஒய்வு நாளுக்கு மறுநாள் என்பதும், எப்பொழுதும் நிசான் 16ம் வாரத்தின் முதல் நாளும் ஒன்றாகவே வருகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

 

 

 rô'sh  chôdesh = புதிய பிறை நிலவு என்று அர்த்தம் (...in the beginnings of your months,) . ஆகவே புதியதாய் தோன்றும் முதல் பிறையுடன் ஆரம்பிப்பதாய் இஸ்ரயேலருக்கு தேவன் கொடுத்த மாத அமைப்பு இருக்கிறது.

 

 

 Biblical month

 

 

கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டது நிசான் 14, இது ஓய்வுநாளுக்கு முந்தைய நாள் ஆகும். அடுத்த நாள் நிசான் 15 ஒரு வார புளிப்பில்லா அப்பப்பண்டிகையின் ஆரம்பம். அது வாரத்தின் ஏழாவது நாளும் பஸ்கா பண்டிகையின் முதலாம் நாளுமாக இருப்பதால் பெரிய ஒய்வு நாள் எனப்பட்டது. (லூக்கா  23:54  ; யோவான் 19:14  ) ஆகவே நிசான் 14 பெரிய ஒய்வு நாளுக்கு ஆயத்த நாளாய் இருந்தது.

 

அந்த நாள் பஸ்காவுக்கு ஆயத்த நாளும் ஏறக்குறைய ஆறுமணி நேரமுமாயிருந்தது; அப்பொழுது அவன் யூதர்களை நோக்கி: இதோ, உங்கள் ராஜா என்றான். Joh 19:14 

அந்த நாள் ஆயத்தநாளாயிருந்தது; ஓய்வுநாளும் ஆரம்பமாயிற்று. Luk 23:54 

 

15ம் தேதி இரண்டாம் வாரத்தின் ஏழாவது நாளாக இருப்பதால் முதல் வாரத்தின் முதல் நாள் மாதத்தின் இரண்டாம் தேதியாகவே இருக்கும். ஆகவே மாதத்தின் முதல் நாள் வாரத்தில் சேராது. நான்குமுழு வாரங்கள்( 28 நாட்கள்) வரும்படி அமைக்கப்பட்டுள்ளது. மாதத்தின் முதல் நாளும் மாதத்தின் கடைசி நாளும் வாரக்கணக்கில் சேராது.

 

 

 

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: வேலைசெய்கிற ஆறுநாளிலும் கிழக்குக்கு எதிரான உட்பிராகாரத்தினுடைய வாசல் பூட்டப்பட்டிருந்து, ஓய்வு நாளிலும் மாதப்பிறப்பிலும் திறக்கப்படக்கடவது. - எசேக்கியேல் 46:1 

ஆகையால், போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக – கொலே 2:16 

 

மாதத்தின் முதல் நாள் முதல் பிறையுடன் ஆரம்பித்து மாதத்தின் மையத்தில் 14 - 15ம் தேதியில் முழு நிலவாக இருக்கும். மாதத்தின் இறுதி நாளில் அம்மாவாசையாக இருக்கும்.

 

 

ஆகவே இந்த மாத அமைப்பில் மாதத்தின் இரண்டாம் நாள் வாரத்தின் முதல் நாளாக ஆரம்பிக்கிறது. ஆகவே இரண்டாம் வாரத்தின் ஓய்வுநாள் நிசான் 15ம் நாளாகவும், அந்தநாள் முழு நிலவு நாளாகவும் இருக்கிறது, அதற்கு அடுத்தநாள் வாரத்தின் முதல் நாள், கதிர்க்கட்டு அசைவாட்டும் நாளாக, அதன் நிறைவேறுதலான முதற்பலனான கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளாகவும் இருக்கிறது.

 

நிசான்14ம் நாள் முழு நிலவாக இருக்கும்போது கிறிஸ்து யேஷூவா சிலுவையில் அறையப்பட்டார். கிறிஸ்துவை அவர்கள் சங்கரித்தபின் உடனே நிலவு தேய ஆரம்பிக்கிறது. நிலவு இஸ்ரயேலருக்கு , நியாயப்பிரமாண யுகத்திற்கு அடையாளமாய் இருப்பதால் அது இஸ்ரயேலுக்கு தேவ தயவு நீக்கப்படுவதையும், அவர்கள்புறக்கணிக்கப்படுவதையும் சுட்டிக் காட்டுவதாய் இருக்கிறது.

நமது மகா ஞானமுள்ள யாவே தேவனும் நமது இரட்சகரும் இவ்வளவு காரியங்களையும் நாம் புரிந்து கொள்ளும்படி வெளிப்படுத்தியிருப்பது எவ்வளவு உற்சாகமாய் இருக்கிறது. பரிசுத்த ஆவியினால் நமக்கு இந்த சத்தியங்களை புரிந்து கொள்ளவும் செய்த தேவனுக்கு நமது நன்றியும் ஸ்தோத்திரமும் உரித்தாகுக.

  • www.DivnePlan.in

 

 

YYYYYYY