Passover

பஸ்கா 2019

நமது கர்த்தராகிய கிறிஸ்து “யெஷுவா”வின் ஞாபகார்த்த நாள் – பஸ்கா - 2019

நமது கர்த்தராகிய கிறிஸ்து “யெஷுவா”வின் ஞாபகார்த்த நாள் இந்த வருடம் 2019 வரும் ஏப்ரல் 20 (சனிக்கிழமை), சூரியன் அஸ்தமனத்திற்குப் பின்பு ஆரம்பிக்கிறது. ஞாபகார்த்த ஆராதனை பிற்பகல் 3:30 மணிக்கு ஆரம்பிக்கிறது.

((2019 ஏப்ரல் 20 சூரிய அஸ்தமன நேரம் 18:22)

Aviv Barley Report: April

பார்லி அறிக்கை-ஏப்ரல்:

ஏப்ரல் 5ம் தேதி பார்லி கதிர் விளைச்சல் தேடலுக்கு பின் தேவையான அளவு விளைந்த கதிர்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆகவே இந்த அறிக்கை வரும் முதல் பிறையில் புது வருடம் (ஆபிப் மாதம் முதல் நாள், ஏப்ரல் 7ம்தேதி சூரியன் மறைந்தபின் ) ஆரம்பிக்கிறது என்பதை உறுதி செய்தது.


பிறை பார்த்தல் அறிக்கை:

இஸ்ரேலில் இருந்து வந்த அறிக்கைகளின்படி ஏப்ரல் 7 (ஞாயிற்று கிழமை) மாலை 6:20 மணிக்கு முதல் பிறை இஸ்ரேலில் காணப்பட்டது. ஆகவே ஏப்ரல் 7 அந்திநேரத்துக்கு பின்பு புதிய வருடத்தின் முதல் நாள் ஆரம்பிக்கிறது (ஆபீப் 1ம் நாள் – ஏப்ரல் 7 அந்திநேரத்தில் இருந்து ஏப்ரல் 8ம் தேதி அந்திநேரம் வரை.)

ஆகவே ஆபீப் 14ம் நாள், ஏப்ரல் 20ம் தேதி(சனிக்கிழமை) அந்திநேரத்துக்கு பின்பு ஆரம்பிக்கிறது.



பார்லி பசுங்கதிர் அறிக்கை - மார்ச் 2019

இந்த வருடம் இஸ்ரேலிய புதிய வருடபிறப்பை நிர்ணயிக்கும் பார்லி கதிர் விளைச்சலை பற்றிய அறிக்கை வந்துள்ளது. முதிர்ச்சியடைந்த பார்லி பசுங்கதிர்கள் போதுமான அளவு இல்லை என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதிர்க்கட்டை அசைவாட்டும் பலிக்கு போதுமான அளவு விளைந்திருக்க வேண்டும். ஆபீப் மாதம் 16ம்தேதி கதிர்க்கட்டு நெருப்பில் வாட்டி புசிப்பதற்கு போதுமான அளவு காய்ந்த நிலையை அடைய வேண்டும்.

 

அப்படி போதுமான அளவு கதிர்கள் அசைவாட்டும் பலிக்கு தயாராகவில்லை என்பதால், இந்த வருடம் லீப் வருடமாகிறது. ஆகவே 13வது மாதமாக இந்த மாதம் சேர்த்துக் கொள்ளப்படுகிறது.



ஆகவே பெரும்பாலும் ஏப்ரல் 6 தேதி தோன்றும் முதல் பிறையில் இருந்து இஸ்ரயேலுக்கான புதிய வருடம் ஆரம்பமாகும். ஆகவே அந்த ஆபீப் மாதம் 14தேதி பஸ்கா நாள் என்பது நமக்கு ஏப்ரல் 19ம்தேதி சூரியன் மறைந்த பிறகு ஆரம்பிக்க வாய்ப்புள்ளது. இதை அடுத்த முதல் பிறை தெரிந்ததும் உறுதிப்படுத்துகிறோம்.


வேதாகமத்தின்படி பஸ்கா நாள்


பஸ்கா நாள்