Q & A

  • நரகம் என்ற நித்திய வேதனை
  • ஒரு சந்தேகம் யோனா மூன்று

Q & A 1

நரகம் என்ற நித்திய வேதனை இல்லை என்றால் அநியாயம் செய்தவர்களுக்கு என்ன தண்டனை?

Answer

பாவத்தின் சம்பளம் மரணம். தேவனுடைய ராஜ்யத்தில் இங்கு அநியாயம் செய்தவர்களுக்கு நியாயத்தீர்ப்பு அளிக்கப்படும். இங்கு உலகத்தோடு பாவங்களுடன் வாழ்ந்து பழகியவர்களுக்கு நீதியான தேவ அரசாட்சி அழுகையும் பற்கடிப்புமாக இருக்கும். அவர்கள் பாவ சுபாவத்தால் செய்யும் தவறுகளுக்கு உடனடி தண்டனை கிடைக்கும். நீதியை கற்றுக் கொண்டு தேவனுக்கு கீழ்ப்படிந்து நடப்பவர்கள் மட்டும் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்வார்கள்.

முழுமையாக நீதிக்குக் கீழ்ப்படிந்து சுயநலமற்று நடப்பவர்கள் நித்திய ஜீவனை பெற்றுக் கொள்வார்கள். சுயநலமற்ற அன்பை வளர்த்துக் கொள்ளாதவர்கள் இரண்டாம் மரணத்தில் நிரந்தரமாக அழிக்கப்படுவார்கள்.



Q & A 2

ஒரு சந்தேகம் யோனா மூன்று பகல் மூன்று இரவு இருந்தது போல் இயேசு கிறிஸ்து இருந்தாரா?

Answer

ஆம், யோனா யேசு கிறிஸ்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுவதற்கு அடையாளம். மூன்று பகல் மூன்று இரவு என்று சொல்வது சரியானது அல்ல. முழுவதுமாக மூன்று இரவு மூன்று பகல் என்று (24x 3=72 hours ) 3 நாட்கள் இல்லாது, இரவு பகலாக மூன்று நாட்களின் பகுதிகளில் அவர் மரித்த நிலையில் இருந்தார். (Three Days and Three Nights – Hebrew Idiom for Three Consecutive Calendar Days) மேலும் இதில் கிறிஸ்து வகுப்பார் மூன்று ஆயிர வருட நாட்கள் மரண நிலையில் இருந்து பின்பு மூன்றாம் ஆயிரவருட நாளில் (கிறிஸ்துவின் நாளில் ) உயிர்த்தெழுவார்கள் என்ற ரகசியமும் அடங்கி இருக்கிறது. யோனா கொந்தளிக்கும் சமுத்திரத்தில் ஒரு மீனின் வயிற்றில் மூன்று நாள் இருந்தும் பின்பு தேவ வல்லமையால் உயிரோடு காப்பாற்றப்பட்டார். அதே போல கொந்தளிக்கும் இந்த உலக சமுதாய அமைப்பில் யூத மத அமைப்பால் அழிக்கப்பட முயற்சிகள் எடுக்கப்படும், அவர் அப்படியே அழிந்து போக விடப்படாது, மூன்றாம் நாளில் பிதாவாகிய தேவனது வல்லமையால் உயிரோடு எழுப்பப்பட்டார்.