சத்தியத்தை எப்படி கண்டு கொள்வது?

 

சிருஷ்டி கர்த்தாவாகிய கடவுள் மனிதர்களுக்கு தம்மைப் பற்றியும், மனிதர்களுக்கான தமது திட்டத்தைப் பற்றியும் உண்மைகளை வெளிப்படுத்தியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் நாம் அவற்றைப்  புரிந்து கொள்ள பரத்திலிருந்து வருகிற ஞானத்தையும் பரிசுத்த ஆவியையும் கொடுக்கிறார். ஆகவே இந்த ஞானத்தைப் பெற்றுக் கொள்ள யாவருக்கும் சம்பூரணமாய் கொடுக்கிறவரும், ஒருவரையும் கடிந்து கொள்ளாதவரும் சத்திய ஒளியின் பிறப்பிடமாகிய தேவனை நாம் தேட வேண்டும்.

 

எது சத்தியம்?

கிறிஸ்தவர்களிடையே ஏன் இத்தனை பிரிவுகள்?

ஏன் இத்தனை கோட்பாடுகள்?  குழப்பங்கள்?

சத்தியத்தை நாம் எங்கே கண்டுபிடிப்பது? எப்படி?

 

பல சபை பிரிவுகள், சத்தியத்தை பற்றிய அவர்களது மாறுபட்ட கோட்பாடுகளிலும், செயல்பாடுகளிலும் பல தவறுகள் இருப்பதையே உணர்த்துகிறது.

மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்றும், எழுதியிருக்கிறபிரகாரம், மாயக்காரராகிய உங்களைக் குறித்து, ஏசாயா நன்றாய்த் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான். – மாற்கு 7:7

 

வேதாகமம் – புத்தகங்களுக்கெல்லாம் புத்தகம்:

வேதாகமமே கடவுள் நமக்கு கொடுத்திருக்கும் சத்தியத்தை அறிவிக்கும் புத்தகம். வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; - 2 தீமோ 3:16 

கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள்; இவைகளில் ஒன்றும் குறையாது; இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது; அவருடைய வாய் இதைச் சொல்லிற்று; அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும்.  -ஏசாயா  34:16 

 

சத்தியத்தை தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்

என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன் –        எரேமியா 33:3 

உமது வெளிச்சத்தையும், உமது சத்தியத்தையும் அனுப்பியருளும். அவைகள் என்னை நடத்தும்.                                                             சங்கீதம் 43:3

 

உண்மையான கடவுளை தேடுபவர்களுக்கு அவர் சத்தியத்தையும், உலகத்துக்கான தனது திட்டத்தையும் வெளிப்படுத்துகிறார். கேளுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும் (மத்தேயு 7:7). அவருடைய ராஜ்யத்தைப் பற்றிய சத்தியங்களையும் நீதியையும் தேடினால் கண்டிப்பாக அவர் அதை நமக்கு கொடுப்பார். அவற்றை சரியாக புரிந்து கொள்ளவும் அவரிடம் பரிசுத்த ஆவியையும் ஞானத்தையும் கேட்டால் கண்டிப்பாக கொடுக்கப்படும் என்று உறுதி கூறியிருக்கிறார்.

 

சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்:

ஏசாயா 1:18  தமிழ் மொழி பெயர்ப்பு சரியான படி இல்லை, அது தமிழில் “வழக்காடுவோம் வாருங்கள்” என்று இருக்கிறது, ஆனால் மூல பாஷையாகிய எபிரேய மொழியில் “ יכח “ “yâkach” என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது “தெளிவாக சிந்தித்து ஆராய்ந்து (பகுத்தறிந்து) நியாயத்தைக் கற்றுக் கொள்ளலாம் வாருங்கள்” Come now and let us reason together, says YAHWEH - Isa 1:18 (ASV). ஆகவே நாம் வேதாகமத்தை ஆழ்ந்து தியானித்து உண்மைகளை அறிந்து கொள்ள தேவன் விரும்புகிறார் என்பது தெளிவாகிறது.

 

வேதாகமத்தில் தேவன் கொடுக்கும் சத்தியங்களை அறிந்து கொண்டால்; பாவம், தவறான போதனைகள், பொய்கள், மூடபக்தி, மத கோட்பாடுகள், மத அமைப்புகளில் இருந்தும் கள்ள தீர்க்க தரிசிகளிடம் இருந்தும் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவான் 8: 32). மேலும் வேதாகமம் சொல்லும் சத்தியம் என்ன என்பதை பற்றி இன்னும் விளக்கமாக அறிய “எது சத்தியம்” என்ற இலவச துண்டுப் பிரதி கேட்டு படியுங்கள்.

நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்.

 

மத்தேயு 5:6

எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.  – 1தீமோத்தேயு 2:4

 

மேலும் பல சத்தியங்களை விளக்கும் பிரதிகள் உள்ளன:

 

மரணம் என்றால் என்ன?

ஆத்துமா என்றால் என்ன?

நரகம் என்றால் என்ன?

இறந்துபோனவர்கள் மீண்டும் வருவார்களா?

அன்பின் கடவுள் தீமையை ஏன் அனுமதிக்கிறார்?

ஜெயிப்பது கடவுளா, சாத்தானா?

கிறிஸ்துவின் இரண்டாம் வருகை

பூமியில் தேவனுடைய ராஜ்ஜியம்

நியாயத்தீர்ப்பு நாள் என்பது என்ன?

 

YYYYYYY

 

Bible study