கிறிஸ்தவர்களுக்கு ஒரு எச்சரிக்கை

 

இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.

1 கொரிந்தியர் 15:19

 

கிறிஸ்தவ பிரசங்கிகளில் அநேகர் சுகமளிக்கும் ஊழியம் என்ற பெயரில் அநேக ஊழியங்களை சரீர நலன்களை இம்மைக்குறிய நன்மைகளுக்காக செய்து,  இன்றைய நாட்களில் தங்கள் பிரசங்கங்களில் கவர்ச்சியாக மனவியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதனைக் குறித்து சிந்திக்கிற ஒவ்வொரு கிறிஸ்தவனும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இவர்கள் கிறிஸ்துவின் நிமித்தம், ஏழ்மையில் ஆரம்பித்து கிறிஸ்துவின் நாமத்தில் குபேரனாகும் (வேதாகமத்துக்கு மாறுபாடான) போக்கில் வாழ்கிறார்கள். இதனைக் கண்டு சிந்திக்கிற ஒவ்வொருவனும் இவர்களது போதகத்தை குறித்து எச்சரிப்பை அடைவானாக.

யேசுவோ அப்போஸ்தலர்களோ சரீர சுகமளிக்கும் அற்புதங்களை செய்தபோதிலும்,

சுகமளித்தலையே ஊழியமாக ஒருபோதும் செய்ததில்லை. அவர்களால் நிகழ்ந்த அற்புதங்களை பிரகடனப்படுத்தவில்லை; அதுவே அவர்களது பிரசங்கமாக இருக்கவில்லை; வியாதியஸ்தர்களை சுகம் பெறும்படி தங்களிடம் கொண்டு வரும்படி அறைகூவல் விடுக்கவில்லை. அவர்களிடம் அப்படிப்பட்ட வல்லமையிருந்தும் அதை விளம்பரப் படுத்தவில்லை.

 

அவர்கள் வானிலும் பூமியிலும் ஸ்தாபிக்கப்பட இருக்கும் தேவனுடைய ராஜ்யத்தை குறித்து, (மத் 6:10,33; எபே 3:14; எபி 9:23; வெளி 21:3,4; ) குறிப்பாக பரலோக ராஜ்யத்தையும் அதன் அழைப்பையும் குறித்து பிரசங்கம் செய்தனர் (மாற்கு 1:15; மத் 10:7 ). இந்த ராஜ்யத்தின் சுவிஷேசத்தை குறித்தே பிரசங்கம் செய்து வந்தனர். அந்த அழைப்புகள் வந்தவர்கள் அவர்களது பிரதிஷ்டையில் இடுக்கமான வழியில் தேவனுக்குள் ஆவியின் கனிகளில் வளரும்படி போதித்தனர். அவரவரது பலியின் ஜீவியத்தில் தேவ கிருபையிலும் சத்தியத்திலும் விருத்தியடைய அவர்களது ஆவிக்குரிய சுகநலன்களுக்காகவே உபதேசங்களைக் கொடுத்தனர்.

 

Rev 16:13  அப்பொழுது, வலுசர்ப்பத்தின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள் புறப்பட்டுவரக் கண்டேன்.
14  அவைகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள்; அவைகள் பூலோகமெங்குமுள்ள ராஜாக்களைச் சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச்சேர்க்கும்படிக்குப் புறப்பட்டுப்போகிறது.

Mat 7:22  அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
23  அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு
அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

 

  இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான். Rev 16:15