“Organization” in Watch Tower

 

கடவுள் ஏன் தீமையை அனுமதிக்கிறார்

 

மனிதனுக்கான கடவுளின் வெளிப்பாடு

 

ஒரே பைபிள், ஏன் மார்க்க பேதங்கள்?

 

கிறிஸ்தவர்களுக்கு ஒரு எச்சரிக்கை

 

நரகம் என்றால் என்ன?

 

அத்தி மரம்

 

ஜெயிப்பது கடவுளா? அல்லது சாத்தானா?

 

DNA MENTIONED IN THE BIBLE 

 

Home

 

 

 

 

கிறிஸ்தவனாயிருப்பதால் என்ன நன்மை?

 

இன்றைய கிறிஸ்தவர்கள் தேவ பக்தியாய் இருப்பதாலோ, உண்மையான கிறிஸ்தவனாய் இருப்பதாலோ உலக ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். கிறிஸ்தவ சபைகள் எல்லாவற்றிலும், போதகர்களின் போதனைகளும் அப்படியே இருக்கிறது. யேசு கிறிஸ்துவை பின்பற்றுவதால் செல்வம் கொழிக்கும், நல்ல வேலை, வீடு, வசதிகள் யாவும் கிடைக்கும் என்று போதிக்கிறார்கள்.

ஆனால் இந்த போதனைகளுக்கு மாறாக வேதவசனம் போதிக்கிறது:

 

அன்றியும்கிறிஸ்துஇயேசுவுக்குள்தேவபக்தியாய்நடக்கமனதாயிருக்கிறயாவரும்துன்பப்படுவார்கள். -2Ti 3:12

தேவனுடைய ராஜ்யத்திற்கான ஓட்டம் எப்படிப்பட்டது? குறுகலான வழி அல்லவா? வேத வாக்கியங்கள் என்ன சொல்கிறது?

நாம்அநேகஉபத்திரவங்களின்வழியாய்த்தேவனுடையராஜ்யத்தில்பிரவேசிக்கவேண்டுமென்றுசொன்னார்கள். - Act 14:22

 

யேசு கிறிஸ்து,தன்னை பின்பற்றி வந்தால் உங்களுக்கு அமைதியான வாழ்க்கையும்,சமுதாய அந்தஸ்தும் உண்டு என்று சொன்னாரா? இல்லை,அவர் சிலுவையை எடுத்துக் கொண்டு பின்பற்ற அல்லவா சொல்லியிருக்கிறார்.

 

தன்சிலுவையைஎடுத்துக்கொண்டுஎன்னைப்பின்பற்றாதவன்எனக்குப்பாத்திரன்அல்ல. - Mat 10:38

அப்பொழுது, இயேசுதம்முடையசீஷர்களைநோக்கி: ஒருவன்என்னைப்பின்பற்றிவரவிரும்பினால், அவன்தன்னைத்தான்வெறுத்து, தன்சிலுவையைஎடுத்துக்கொண்டுஎன்னைப்பின்பற்றக்கடவன். - Mat 16:24

 

அவனவன்தன் சிலுவையை எடுத்துக் கொண்டு வர வேண்டும் என்றால் கிறிஸ்துவைப்போல, அவர்அன்றைய உலக வசதிகள் எதுவும் தேடாது, அன்று எப்படி புறக்கணிக்கப்பட்டவராக, யூத மதத்தின் சடங்காச்சாரங்களை கடைப்பிடிக்காததால் எப்படி மக்களாலும் யூத மதவாதிகளாலும் பைத்தியக்காரனாக எண்ணப்பட்டரோ, எப்படிதேவையற்ற வேலை செய்பவராக எண்ணப்பட்டரோ அது போல இன்று நாமும் கிறிஸ்துவுக்காக, சத்தியத்திற்காக நின்றால் இன்றைய உலக வசதிகள், மற்றவர்கள் மதிக்கும் சமுதாய அந்தஸ்து கிடைக்காது.

கிறிஸ்துவை உண்மையாக பின்பற்றினால் அப்படிப்பட்ட நிலைதான் உண்டு, அப்படிப்பட்ட பாடுகளுடன் தன்னை பின்பற்றி வரவேண்டும் என்பதையே அவனவன் தன் தன் சிலுவையை எடுத்துக் கொண்டு வரவேண்டும் என்று கூறுகிறார்.

 

ஆகவே வேதாகமம் முழுவதும் கிறிஸ்துவை பின்பற்றினால்நாம் நம்மை பலி செய்வது மூலம் உலக வசதிகளில் குறைவு பட்டிருப்போம், உபத்திரவங்கள் உண்டு,உலகத்திற்கு நாம் பைத்தியக்காரர்களாய் இருப்போம் என்ற உண்மையையே சொல்கிறது. நாம் உலகத்தாராயிருந்தால் மட்டுமே உலகம் நம்மை சிநேகிக்கும்.

 

நீங்கள்உலகத்தாராயிருந்தால், உலகம்தன்னுடையதைச்சிநேகித்திருக்கும்; நீங்கள்உலகத்தாராயிராதபடியினாலும், நான்உங்களைஉலகத்திலிருந்துதெரிந்துகொண்டபடியினாலும், உலகம்உங்களைப்பகைக்கிறது. - Joh 15:19

 

வீட்டெஜமானையேபெயல்செபூல்என்றுசொன்னார்களானால், அவன்வீட்டாரைஅப்படிச்சொல்வதுஅதிகநிச்சயமல்லவா?- Mat 10:25

 

யேசு கிறிஸ்து யூதமத தலைவர்களின் தவறான கோட்பாடுகளைகண்டித்ததால்அவர்கள் கிறிஸ்துவை பேய்களின் தலைவன் (பெயல்செபூல் =சாத்தானின் பெயர் ) என்று தூஷித்தனர். இன்று கிறிஸ்தவ மண்டலங்களின் வேதத்தில் இல்லாத தவறான கோட்பாடுகளை சுட்டிக் காட்டினாலும் அதே போலவே நாமும் தூஷிக்கப்படுவோம் என்பதையே இங்கு சொல்கிறார்.

 

ஆனால் சாத்தான் உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை உலக அந்தஸ்து, செல்வம் வசதிகள் நிறைந்ததாக இருக்கும் என்ற பொய்யை போதித்து முழு கிறிஸ்தவ மண்டலத்தையும் நம்பவைத்திருக்கிறான். மனிதர்களும் இவை தங்களுக்கு விருப்பமானதாக இருப்பதால் இவற்றை ஏற்றுக் கொள்கிறார்கள். கிறிஸ்தவர்களும் இன்றைக்கு கிறிஸ்துவை பின்பற்றினால் துன்பம் என்ற வார்த்தையை விரும்புவதில்லை. கிறிஸ்துவின் மூலம் வாழ்க்கைக்கு தேவையான சகல வசதிகளும் வரும் என்று நம்புகிறார்கள், அதையே விரும்புகிறார்கள்.

 

அப்படிப்பட்ட வசதியான வாழ்க்கையை தேவன் கொடுப்பதாகசாட்சி சொல்வதும்அதனால்தேவனுக்கு நன்றி அறிவிக்கும் நாள் என்று கொண்டாடுவதும்தான் இன்றைய கிறிஸ்தவர்கள் இருக்கும் நிலை.

 

ஆனால் தேவன் இப்படிப்பட்டபாடுகளற்ற சுகவாழ்க்கையை கொடுக்கிறார் என்பதை வேதாகமம் சொல்லவில்லை, நமது ரட்சகர் யேசுவுக்கு பாடுகள் வரக் கூடாது என்று சொன்ன பேதுருவைப் பார்த்து கிறிஸ்து சொன்னது என்ன?

 

அவரோதிரும்பிப்பேதுருவைப்பார்த்து: எனக்குப்பின்னாகப்போ, சாத்தானே, நீஎனக்குஇடறலாயிருக்கிறாய்; தேவனுக்குஏற்றவைகளைச்சிந்தியாமல்மனுஷருக்குஏற்றவைகளைச்சிந்திக்கிறாய்என்றார்.  - Mat 16:23

 

தன்சிலுவையைச்சுமந்துகொண்டுஎனக்குப்பின்செல்லாதவன்எனக்குச்சீஷனாயிருக்கமாட்டான். - Luk 14:27

 

அவரது அப்போஸ்தலர்கள் பிற்பாடு இதை நன்கு புரிந்து கொண்டு அநேக உபத்திரவங்களை எதிர் கொள்ள தயார் ஆனார்கள், அநேக உபத்திரவங்கள் மூலம் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசித்தார்கள்.

 

இப்படிப்பட்டஉபத்திரவங்களைச்சகிக்கநாம்நியமிக்கப்பட்டிருக்கிறோமென்றுநீங்கள்அறிந்திருக்கிறீர்களே. - 1Th 3:3

பிரியமானவர்களே, உங்களைச்சோதிக்கும்படிஉங்கள்நடுவில்பற்றியெரிகிறஅக்கினியைக்குறித்துஏதோபுதுமையென்றுதிகையாமல்,

கிறிஸ்துவின்மகிமைவெளிப்படும்போதுநீங்கள்களிகூர்ந்துமகிழும்படியாகஅவருடையபாடுகளுக்குநீங்கள்பங்காளிகளானதால்சந்தோஷப்படுங்கள். - 1Pe 4:12

 

ஆகவே கிறிஸ்தவ வாழ்க்கை என்பது வரப்போகும் ராஜ்யத்திற்காக நம்மை நீதியிலும், மனத்தாழ்மையிலும், கடவுளுக்கு கீழ்ப்படிதலிலும் வளர்வதுமூலம் தகுதியாக்குதல் ஆகும். ஏற்றதாழ்வுகள், அநீதிகள் நிறைந்தஇந்த உலக சமய, ராஜ்ய,வியாபாரஅமைப்புகளுக்காக நாம் நிற்காமல், நாம் கிறிஸ்துவுக்கே முதலிடம் கொடுத்து , அவரது சத்தியத்திற்கும் நீதிக்கும் அதிக நேரம் கொடுப்போமாக.

நமக்கு என்ன விதமான சோதனைகள் உண்டு வாழ்க்கை எப்படி போகும் என்பதை நாம் அவரது சித்தத்திற்கு விட்டுவிட்டு, முதலாவது நாம் தேவனுடைய ராஜ்யத்திற்கு உரியவைகளை தேட வேண்டும்.

 

கேளுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும் என்பது தேவனுடைய ராஜ்யத்திற்கு தேவையானவைகளை கேட்டால் கொடுக்கப்படும் என்ற உத்திரவாதம்தான். ஆவிக்குரிய காரியங்கள் கேட்பது என்பது, சத்தியத்தை புரிந்து கொள்ள பரிசுத்த ஆவியை கேட்பது, தேவனுடைய காரியங்களை செய்ய வாய்ப்பு மற்றும் அவற்றை செய்ய ஞானம் போன்றவற்றை கேட்பது ஆகும்.

 

சீஷர்களும் யேசுவோடு இருந்தபோதும், பின்பும் அவரிடம் உலக வசதி, வியாபார காரியங்களுக்காக எதையும் கேட்க்க வில்லை. எந்த அப்போஸ்தலர்களும் தங்களது வரத்தினால் அற்புதங்கள் செய்தாலும் தங்களுக்காக எதையும் செய்யவும் இல்லை.

இம்மைக்காகமாத்திரம்நாம்கிறிஸ்துவின்மேல்நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லாமனுஷரைப்பார்க்கிலும்பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம். - 1Co 15:19

 

தேவ நீதியை விரும்புகிறவர்களுக்கே இது சந்தோசமான செய்தி.ஏனென்றால்பூமியில் வரப்போகும் தேவனுடைய அரசில் நீதியும்,எல்லா மக்களுக்கும் நல்ல வாழ்க்கையும் கிடைக்கும். அந்தநீதியான ராஜ்யத்திற்கான வேலைகளை செய்யும் போது அநீதியான இந்த உலக செல்வம் நமக்கு கொடுக்காத சமாதானத்தையும் தைரியத்தையும் அவர் நமக்கு கொடுப்பார்.

 

இயேசுஅவர்களுக்குப்பிரதியுத்தரமாக: நீங்கள்அற்புதங்களைக்கண்டதினால்அல்ல, நீங்கள்அப்பம்புசித்துத்திருப்தியானதினாலேயேஎன்னைத்தேடுகிறீர்கள்…அழிந்துபோகிறபோஜனத்திற்காகஅல்ல, நித்தியஜீவன்வரைக்கும்நிலைநிற்கிறபோஜனத்திற்காகவேகிரியைநடப்பியுங்கள் -Joh 6:27

 

நான்இன்னும்மனுஷரைப்பிரியப்படுத்துகிறவனாயிருந்தால்நான்கிறிஸ்துவின்ஊழியக்காரனல்லவே. - Gal 1:10

நீயும்இயேசுகிறிஸ்துவுக்குநல்லபோர்ச்சேவகனாய்த்தீங்கநுபவி. தண்டில்சேவகம்பண்ணுகிறஎவனும், தன்னைச்சேவகமெழுதிக்கொண்டவனுக்குஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்தஅலுவல்களில்சிக்கிக்கொள்ளமாட்டான்.- 2Ti 2:3

 

உலகத்திலும்உலகத்திலுள்ளவைகளிலும்அன்புகூராதிருங்கள்; ... ஜீவனத்தின்பெருமையுமாகியஉலகத்திலுள்ளவைகளெல்லாம்பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள்உலகத்தினாலுண்டானவைகள். - 1Jn 2:15 ,16

 

உலகசிநேகம்தேவனுக்குவிரோதமானபகையென்றுஅறியீர்களா? - Jas 4:4

 

YYYYYYY