கடவுள் ஏன் தீமையை அனுமதிக்கிறார்

 

மனிதனுக்கான கடவுளின் வெளிப்பாடு

 

ஒரே பைபிள், ஏன் மார்க்க பேதங்கள்?

 

கிறிஸ்தவர்களுக்கு ஒரு எச்சரிக்கை

 

நரகம் என்றால் என்ன?

 

அத்தி மரம்

 

DNA MENTIONED IN THE BIBLE 

 

Home

 

 

 

ஜெயிப்பது கடவுளா? அல்லது சாத்தானா?

 

கடவுள் லூசிபரை (Hebrew=hay-lale') பரிபூரணமாகவே படைத்தார். ஆனால் அவன் கடவுளுக்கு எதிராக கலகம் செய்தான். (ஏசாயா 14:12-20 ; எசேக்கியேல் 28:12-19 ), அதற்கு பின்புதான் அவன் கடவுளுக்கு எதிரியாக, சாத்தான் (பெரிய எதிராளி) ஆக மாறினான்.

 

சாத்தான் என்று அழைக்கப்படுவது ஒரு விழுந்து போன தூதன், தீமையை செய்து கொண்டிருக்கும் ஒரு  நபர்.  அது தீய செயலையோ அல்லது  தீய கொள்கையையோ குறிக்கவில்லை. யோவான் 8:44, யோபு 1:1-22, 2:1-13,  2 கொரி 2:11, 11:14,15

 

கடவுள் பூமியை மனிதர்களுக்காக படைத்து ஆதாம் ஏவாளை ஏதேன் தோட்டத்தில் வைத்து, அவர்களை கவனித்துக் கொள்ள உயர்ந்த நிலையில் படைக்கப்பட்ட அந்த தேவதூதனை (hay-lale') வைத்தார். அவனது பெருமையும் மனுக்குலத்தை ஆள வேண்டும் என்ற ஆசையும் மனிதர்களை வஞ்சித்து கடவுளிடம் இருந்து பிரிக்கச் செய்தது.

கடவுள் ஆதாமை பரிபூரணமாக படைத்து அவன் கீழ்ப்படியவில்லை என்றால் மரணமடைவான் என்று எச்சரித்திருந்தார். ஆனால் சாத்தான், மனிதர்கள் இறப்பில் அழிந்து போகவில்லை, ஆவிஜீவிகளாக இருக்கிறார்கள் என்ற தன்னுடைய பொய்யால் முழு உலக மக்களையும் ஏமாற்றி கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறான். (ஆதி 2:17, 3:4, எசேக்கி 18:4,20, ரோமர் 5:12, 6:23)

 

கடவுள் ஆதாமுக்கு மரண தண்டனை கொடுத்தார்: “நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.” ஆனால் மனுஷியின் வித்து சாத்தானின் தலையை நசுக்கும் என்பதையும் வெளிப்படுத்தினார்.  ஆதி  3:14 – 19

 

ஆகவே சாத்தான் அந்த வித்தை அழிக்க முனைவதை ஆபேலின் கொலையிலிருந்தே ஆரம்பித்து விட்டான்.

 

மேலும் அந்த வித்தை சேதப்படுத்த சாத்தான் ஜலப்பிரளயத்திற்கு முன் சில தேவபுத்திரர்களை மனித சரீரத்தில் பெண்களுடன் சேர்ந்து கலப்பினத்தை உருவாக்கத் தூண்டினான். ஆதி 6:1-7  யூதா 6:7

 

அதனாலேயே கடவுள் நோவா குடும்பத்தை தவிர மற்றவர்களை, அப்போதிருந்த உலகத்தை (சமுதாயத்தை) ஜலப்பிரளயம் கொண்டு அழித்தார். 2 பேதுரு 2: 4,5

 

அந்த தவறு செய்த விழுந்து போன தேவதூதர்களையும் சேர்த்துக் கொண்டு சாத்தான் நோவாவின் சந்ததியில் வந்த நிம்ரோத் போன்றவர்களை கொண்டு  தவறான மத அமைப்புகளை உருவாக்கி மனிதர்களை  அடிமைப்படுத்த ஆரம்பித்தான். இவ்வாறு சாத்தான் தற்போதுள்ள தீய உலகை ஆளும் தேவன் ஆனான். ஆதி 10: 1-32 , 2 கொரி 4:4, கலா 1:4 யோவான் 12:31, 14:30

 

கடவுள் நீதிமானாகிய ஆபிரகாமிடம் முழு உலகமும் அவன் வித்துக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்று கூறி உறுதியளித்தார். (ஆதி 12:1-3; 17:19.21; 22:15-18; 26:4; 28:14).

 

ஆகவே சாத்தான் தொடர்ந்து அந்த சந்ததியில் ஈசாக்கு, ஏசா , யாக்கோபு, யோசேப்பு, மோசே, இஸ்ரயேல் மக்கள், சவுல், தாவீது, சாலமோன், பின்பு அவனுடைய சந்ததி மற்றும் தீர்க்கதரிசிகள் என எல்லோர் மேலும் தாக்குதலை தொடுத்தான். (லூக்கா 11 : 47 -51)

 

கடைசியாக கடவுள் தன்னுடைய ஒரே பேறான குமாரனை அனுப்பி வைத்தார். வாக்களிக்கப்பட்ட வித்தாய் இருக்கிற அவர் தம்மை ஈடு பலியாக செலுத்தி மனிதகுலம் முழுவதும் அழிவில்லாத நித்திய வாழ்வை பெற இன்னொரு வாய்ப்பை கொடுக்கப் போகிறார். (கலா 3:8, 16; மத்தேயு 20:28; 1 தீமோ 4:10;    1 யோவான் 2:2 )

 

சாத்தான் இயேசுவை (யெஷுவா) கண்ணியில் சிக்கவைக்கவும் அழிக்கவும் முயற்சித்து கடைசியாக சிலுவையில் அறைந்து கொல்வதில் வெற்றிகொண்டான்.

(மத் 4:1-11; 8:24; லூக்கா 4:29; 22:3-6, 47, 48; 23:33.34)

 

கடவுள் கிறிஸ்துவை மரணத்தில் இருந்து எழுப்பி மிக உன்னதமான தெய்வீக நிலைக்கு உயர்த்தி விட்டார். (அப் 5:30,31; பிலிப் 2:9-11)

 

அதற்கு பின்பு சாத்தானால் யேசுவை நேரிடையாக துன்புறுத்த முடியாததால், மெய்யான சபை வகுப்பாரை துன்பப்படுத்த ஆரம்பித்தான். இவர்களே ஆபிரகாமின் வித்தும் தலையாகிய யேசுவின் சரீர வகுப்பாராயும் இருக்கிறார்கள். (ரோமர் 12:5; 4:13-16; எபேசியர் 1:18-23; கலா 3:7-9,29)

 

 சாத்தானின் துன்புறுத்தல்கள் இருந்தாலும் ஆரம்பகால சபை பெருகி வளர கடவுள் கிருபை செய்தார். (அப் 2:41; 5:14) கஷ்டங்களை கொடுத்து சபையை அழிக்க முடியாமற் போனதால்,  தவறான போதனைகளையும் தவறான நடத்தைகளையும் புகுத்தி சபையை கெடுக்க ஆரம்பித்தான். (மத் 13:24-28; 2 தெச 2:3-10; 1 யோவான் 4:3).  ஆகவே போலிகளின் பெருக்கத்தால் (பெயர் கிறிஸ்தவ சபை) மெய்யான சபை யாரும் உணரமுடியாத நிலைக்கு போனது.

 

கடவுள் வாக்குறுதி அளித்தபடியே தன்னுடைய உண்மையான பிள்ளைகளை ஒருபோதும் கைவிடவில்லை. ஆகவே சாத்தானின் தவறான போதனைகள், இருண்ட காலகட்டத்தில் உலகமக்களின் மேல் வியாபித்து இருந்தாலும், மார்சிக்லியோ, விக்ளிப், ஹஸ், சவனரோலா, லூத்தர், ஸ்விங்க்லி, கிரன்மர், வெஸ்லி போன்றவர்கள் மூலமாக சிறிதளவு உதவிகள் அளித்து வந்தார்.       ( எபிரே 13:5,6; மத் 28:20; ஏசாயா 60:2; தானியேல் 11:34; மீகா 5:5 )

 

உண்மையான வேதாகம சத்தியங்களை மறைத்து மக்களை அறியாமையில் வைப்பதன் மூலம் கிறிஸ்தவ மண்டலத்தை சாத்தான் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தான். மூடநம்பிக்கைகளையும், புறமதத்திலுள்ள தத்துவங்கள், பல்வேறுபட்ட தவறுகள், முக்கியமாக அரசர்களும், குருமார்களும், பிரபுக்களும்  தெய்வீக அதிகாரம் பெற்றவர்கள் போன்ற கொள்கைகள் மூலம் தன் ஆளுகையை ஸ்தாபித்தான்.  

www.divineplan.in

 

 

ஆதியில் தான் சொல்லிய பொய்யை நம்பவைக்க இறந்தவர்கள் உணர்வோடு இருகிறார்கள், ஆத்துமா அழியாதது போன்ற நம்பிக்கைளை கொண்டுவந்து நித்திய நரக வேதனை என்ற தேவ தூஷணத்தை கொண்டு வந்தான். இதற்காக உருவகமாக சொல்லப்பட்ட வேதாகம அடையாளங்களை அப்படியே அர்த்தப்படுத்தி “ஷியோல்” ( שׁאל ) ,கிஹென்னா ( γέεννα ) “ஹேடஸ்” ( ᾅδης ) போன்ற வார்த்தைகளுக்கு தவறான விளக்கம் கொடுத்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறான். ( ஆதி 3:4அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை; ... நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள்…”)

 

முடிவுக்காலம் என வேதாகமத்தால் சொல்லப்படும் 1799 ல் இருந்து கடவுள் அறிவை மிக அதிக அளவில் பெருகச் செய்து வருகிறார். ( தானி 12:4; நாகூம் 2:3,4 )

 

ஆகையால் தன்னுடைய பழைய பொய்களை விட்டு விட்டு சாத்தானும் மற்ற விழுந்துபோன தூதர்களும்  தற்போது பரிணாமக் கொள்கை, தியோசோபி, மார்மோநிசம், ஆத்துமா அழிவற்றது போன்ற பல புதிய தவறான கோட்பாடுகளை      ( 1 தீமோ 4:1 ) கொண்டு வந்தனர். மேலும் சூனியம், இறந்தவர்களோடு பேசுதல், ஹிப்னாட்டிசம். ராசி பலன், ஜாதகம், பறக்கும் தட்டுகள் போன்ற பல அடையாளங்கள் அற்புதங்கள் மூலமும் பொய்களை பரப்புகின்றனர். ( 2 தெச 2:9 )

 

கடவுள் தன்னுடைய ஜனங்கள் இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபடுவதை தடை செய்திருக்கிறார். யாத் 22:18 லேவி 19:26,31; 20:6,27; உபா 18:9-14; 1நாளா 10,13, 14; 2 இராஜா 21:6 ஏசாயா 8:19, 20 வெளி 21:8 ; 22:15

 

கிறிஸ்துவின் மூலமாக கடவுள், சாத்தானுடைய பொய்களை வெற்றிகரமாக தோற்கடிப்பதன் மூலம் சாத்தான் கட்டப்பட்டு வருகிறான். உபத்திரவ காலத்தின் (உலக யுத்தங்கள், புரட்சிகள், அராஜகங்கள் ) மூலம் அவனுடைய ராஜ்யத்தை அழித்துக் கொண்டும் வருவதையும் கிறிஸ்துவின் ராஜ்ஜியம் உலகில் வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதையும் உணர்ந்து மிகுந்த ஏமாற்றத்தோடு தன்னுடைய இறுதிப் போராட்டத்தில் இருக்கிறான்.

 

வெளி 19: 11-2111: 15-1820: 1-4; 1இராஜா  19: 1112 சங்கீதம் 46: 8-1176: 8-10தானி 12: 1 மத் 24: 212212: 29;6: 10 மீகா 4: 1-4

 

கடவுள் தெரிந்தெடுக்கப்பட்ட வித்தின் மூலம் சாத்தானை சீக்கிரமே நசுக்கிப் போடுவார். எல்லா மக்களையும் (தெரிந்தெடுக்கப்படாத வகுப்பாரையும் ) கடவுள் சத்தியத்திற்கு கொண்டு வருவதன் மூலம் ஆதாமின் சாபத்தில் இருந்து ரட்சிப்பார்.

1தீமோ 4:10 எபி 2:9; 1யோவான் 2:2; ரோமர் 16:20; 1தீமோ 2:4-6 எண்ணா 14:21; ஏசாயா 11:9

 

புதிய உலகத்தில் (சமூதாயத்தில்) விசாலமான பாதையில் முழு மனிதகுலமும் நடத்தப்பட்டு பூரணமான நிலைக்கு வந்தபின்பு நித்திய வாழ்க்கைக்கான பரீட்சைக்கு உட்படுத்தப் படுவார்கள்.  (அப் 17: 312 பேது. 3: 7-13ஏசா. 35: 1-1065: 17-25வெளி. 21: 1-522: 17)

 

அந்தகாரத்தில் அடைக்கப்பட்ட சாத்தான் மனிதகுலத்தின் இறுதி பரீட்சைக்காக சொற்ப காலத்திற்கு விடுதலையாக்கப்படுவான். மீண்டும் அவனை பின்பற்ற திரளான கூட்டத்தை சேர்த்துக் கொண்டாலும் கடவுள் அவனையும் திருந்தாத தேவபுத்திரரையும், துன்மார்க்கரையும்

நிரந்தரமாக அழித்து விடுவார். சங் 37:9-11, 38; 145:20; ஏசாயா 43:17; எபி 2:14 

 

அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி, பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகளாகிய கோகையும் மாகோகையும் மோசம்போக்கும்படிக்கும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்; அவர்களுடைய தொகை கடற்கரை மணலத்தனையாயிருக்கும். அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது.  வெளி 20:3, 7-10; 21:8;

 

ஆகவே இறுதியாக கடவுள் வெற்றி கொண்டு விடுவார். கிறிஸ்தவர்கள் சொல்வது போல சாத்தான்  பெருவாரியான மனிதர்களை நரகத்தீயிற்கு நிரந்தரமாக கொண்டு போய் விட்டால் அது சாத்தானுக்கல்லவா வெற்றியாக இருக்கும்? கடவுளுக்கு எப்படி வெற்றியாக இருக்க முடியும்? ( எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும்,. 1தீமோத்தேயு 2:4 )

 

 

சாத்தான் இனி ஒருபோதும் இருக்கபோவதில்லை. அவனும் துன்மார்க்கரோடே நிரந்தரமாக அழிக்கப்பட போவதை வேதம் தெளிவாக சொல்கிறது.

 

 

ஆகையால் உன்னைப் பட்சிப்பதாகிய ஒரு அக்கினியை நான் உன் நடுவிலிருந்து புறப்படப்பண்ணி, உன்னைப்பார்க்கிற எல்லாருடைய கண்களுக்கு முன்பாகவும் உன்னைப் பூமியின்மேல் சாம்பலாக்குவேன்.  ... இனி ஒருபோதும் இருக்கமாட்டாய் என்று உரைக்கிறார்.

-எசேக்கியேல் 28: 18,19

 

 

மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,  - எபி 2: 14

 

 

உத்தமர்கள் அதைக்கண்டு மகிழுவார்கள்; நியாயக்கேடெல்லாம் தன் வாயை மூடும்.

சங்கீதம் 107:42

 

பொல்லாதவர்கள் அறுப்புண்டுபோவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ

பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்

–சங்கீதம் 37: 9

 

YYYYYYY